எலியா ELIJAH திறந்த வாசலின் சபை, லூயிவில், கென்டக்கி, அமெரிக்கா 53-10-18 1. மாலை வணக்கம், நண்பர்களே. திறந்த வாசலின் சபையில் இருப்பது என்பது எ ப்போதுமே ஒரு சிலாக்கியமாக இருக்கிறது. அந்தப் பெயர் எனக்கு பிடிக்கும், திறந்த வாசலின் சபை, இந்த மேய்ப்பரையும் கூட நான் விரும்புகிறேன், மேலும் சபையோரையும், இங்கே ஜீவிக்கிற கர்த்தரையும் நான் விரும்புகிறேன். எனவே இங்கே வருவதென்பது எப்போதுமே என்னை சந்தோஷமடைய செய்கிறது. ஓவன்ஸ்போரோ கூட்டத்தைக் குறித்து, சகோதரன் காபிள் கூறினபடி, அது துவங்குகிறது, நாம் வழக்கமாக கொண்டிருக்கும், இரட்சிப்பு, சுகமளித்தலைக் கொண்ட ஒரு - ஒரு வழக்கமான கூட்டமாக (campaign) அது இருக்கிறது. பொது ஜனங்கள், நிச்சயமாகவே உங்கள் வியாதியஸ்தர்களையும் துன்பப்படுகிறவர்களையும் அழைத்து வரும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள். சகோதரன் போஸ்வர்த் அவர்கள் சற்று முன்பு இந்த பிற்பகலில் அழைத்தார், அவர் அந்த கூட்டத்தில் உத்தியோக கடமையை செய்யும்படி அங்கே என்னோடு கூட இருப்பார். அது சிட்டி அரங்கத்தில் நடைபெறும், நான்.... அது ஒரு புதிய அரங்கமாக இருக்கிறது, அவர்கள் அதை அங்கு இப்பொழுது தான் கட்டியிருக்கிறார்கள். அவர்கள் அதற்குள்ளே 7000 இருக்கைகளை கொண்டிருக்கிறார்கள். எனவே, அங்கே அனேகமாக நிறைய இடம் இருக்கும், ஏனென்றால் அது ஒரு சிறிய பட்டணம்... ஆனால் ஈவான்ஸ்வில்லும் பதுகாவும், ஒத்துழைப்பு கொடுக்கும் மற்ற அனேகரையும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள், அது அப்படியே இங்கே லூயிவில்லின் எல்லையாக உள்ளது. எனவே உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்து இருக்கும் போதே, எங்களைக் காண வாருங்கள். அங்கே இந்தக் கூட்டத்தில் உங்களைக் கொண்டிருப்பதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாய் இருப்போம். வியாதிப்பட்டவர்களையும் தேவையுள்ளவர்களையும் உங்கள் மேய்ப்பரையும் மற்றும் எல்லாரையும் கூடவே அழைத்து கொண்டு வாருங்கள். அவர்களைக் கொண்டிருப்பதற்கு நாங்கள் மகிழ்ச்சியாயிருப்போம். 2. இப்பொழுது, இன்றிரவானது, வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் இந்த மகத்தான ஜெபத்திற்கு முந்தின நாளாக உள்ளது. நான் இன்றிரவு வந்து ஒரு சில வார்த்தைகளைப் பேசுவேனா என்று நம்முடைய நல்ல சகோதரன் காபிள் அவர்கள் வந்து என்னிடம் கேட்டு கொண்டார்; நம்முடைய கர்த்தரின் நாமத்தில், அவருடைய ஜனங்களிடம் பேசுவது என்பது எப்போதுமே ஒரு மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்விதமாக பேசும்படிக்கு எனக்கு மிகவும் அடிக்கடி வாய்ப்பு கிடைப்பதில்லை. வழக்கமாக என்னுடைய கூட்டங்கள், அவை எல்லாமே தெய்வீக சுகமளித்தல் என்ற பொருளின் பேரிலேயே உள்ளன. ஏனென்றால் நான் உள்ளே வருவதற்கு முன்போ அல்லது கூட்டம் முடிந்த பிறகோ, மேலாளர்களும் அவர்களும் பீட அழைப்பையும் மற்றும் காரியங்களையும் பெற்று விடுகிறார்கள். அது பெரும்பாலும் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதாகவே உள்ளது. 3. இந்தக் காலையில் ஜெபர்சன்வில்லில் உள்ள கூடாரத்தில் ஒரு அற்புதமான நேரம் உண்டாயிருந்தது. நம்முடைய கர்த்தர் அங்கே எங்களை சந்தித்து, எங்களுக்கு உதவி செய்தார், நாங்கள் அதற்காக நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். நாம் போகையில் கர்த்தர் நம்முடைய வழிகளை வாய்க்கப்பண்ண வேண்டும் என்பதே நம்முடைய ஊக்கமானதும் நேர்மையானதுமான வாஞ்சையாகும், தேவன் எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று நீங்கள் எல்லாரும் எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள். 4. இப்பொழுது, இந்த ஜெப கூட்டத்திற்கு சற்று முன்பாக, இன்றிரவு இருக்கிறது, நான் வந்து கொண்டிருந்த போது, "நல்லது, நான்..." என்று நினைத்தேன். எதன் பேரில் பேச வேண்டுமென்று சகோதரன் காபிள் ஒருபோதும் கூறவில்லை, எப்படியும் அதன் பேரில் எந்த குறிப்புகளையாவது எழுதுவது எனக்கு எந்த நன்மையும் செய்திருக்காது, ஏனென்றால் நான் மேடையில் நிற்கும் போது, கர்த்தர் வேறு ஏதோவொன்றை என்னிடம் கூறுகிறார். மேலும் நான் ஒருபோதும் அதை பார்ப்பதில்லை. நான் ஒரு வாலிப ஊழியக்காரனாக, பின்தொடருவதற்கு கொஞ்சம் குறிப்புகளை எழுதி வைக்க இரண்டு மூன்று முறை முயன்று பார்த்தேன். ஆராதனை முடிந்த பிறகு, நான், 'நல்லது, நான் ஏன் அதை பார்க்காமல் இருந்தேன் என்று வியப்பாக உள்ளதே?" என்று எண்ணிக்கொண்டேன். அதன் பேரில் நான் பிரசங்கித்தது கூட கிடையாது என்பதைக் கண்டுபிடிக்க நேர்ந்தது (come to), எனவே, அவரே தம்முடைய வழியைக் கொண்டிருக்க அனுமதிப்பது தான் சிறந்தது என்று சற்றுமுன்பு எண்ணிக்கொண்டேன், உங்களுக்குத் தெரியும், அவர் நமக்காக வைத்திருப்பது எதுவாக இருந்தாலும் அதுவே சிறந்தது. 5. ஆனால் செவ்வாய் கிழமை நிகழும் இந்த மகத்தான கூட்டத்திற்காக காத்துக் கொண்டிருப்பது சம்பந்தமான ஒரு வேதவாக்கியத்திற்கு எப்போது திருப்புவேன் என்று இங்கே மேடையின் மேல் அப்படியே உட்கார்ந்திருக்கிறேன். அது ஒரு தகுதியான காரியமாக இருக்கிறது. நான் இப்பொழுது தான் கலிபோர்னியாவிலுள்ள சான்டா குருஸிலிருந்து வருகிறேன், அங்கே எங்களுக்கு ஒரு அற்புதமான கூட்டம் உண்டாகி இருந்தது. அவர்கள் அந்த பட்டணத்தின் படைகளை அல்லது நான் குறிப்பிடுவது அந்த மாகாண படைகளை, அழைத்து, பியூலா பூங்காவிலும் (Beulah Park) மற்றும் சான்டா குருஸிலும் நெடுஞ்சாலைகளை தடை செய்யும் (block off) அளவுக்கு அனேக ஜனங்கள் அங்கே வெளியில் இருந்தார்கள். அதன் வழி எங்கிலும் அப்படியே அதே நடைமுறையே இருந்தது. எல்லாமே வறண்டு (உலர்ந்து) போயிருந்தது, நிவேடா, கலிபோர்னியா, கான்ஸாஸ் மற்றும் அங்கே அதனூடாக எல்லாமே அப்படியே இங்கே இருப்பது போன்றே உள்ளது. கிழக்குக்குப் போகையில், தேசம் முழுவதும் எல்லாமே அதே விதமாகவே இருக்கிறது. “எல்லாமே உலர்ந்து போய் விட்டது” என்று அவர்கள் கூறுகிறார்கள் 6. டெக்சாஸ், டெக்ஸாஸிலுள்ள ஒரு இடம் என்று நம்புகிறேன், அங்கே அவர்களுக்கு மூன்று வருடங்களாக ஒரு மழையும் இல்லை. அதைக் குறித்து சற்று சிந்தித்து பாருங்கள். இப்பொழுது, நிச்சயமாக இவை எல்லாமே ஏதோவொன்றைக் குறித்து பேசுகிறது. அது அவ்வாறு இருக்க முடியாது, நீங்கள் வெறுமனே, "நல்லது, அது சும்மா தற்செயலாக நடப்பது தான். அது வெறுமனே அவ்விதமாக சம்பவித்தது விட்டது அல்லது அது அவ்வாறு தான் இருக்க வேண்டும்" என்று கூறலாம். நான் அதை நம்புவதில்லை. என்ன நிகழ வேண்டும் என்பது தேவனுடைய சித்தமோ அதன்படியே எல்லாம் நிகழ வேண்டும் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது இந்த காரியங்கள் ஒரு நோக்கத்திற்காகவே உள்ளன. 7. இப்பொழுது, இந்தக் கடிகாரத்தை நான் கவனிப்பேன். வழக்கமாக, நான் மிக நீண்ட நேரம் பேசுவதைக் குறித்து குற்றம் சாட்டப்பட்டு வந்திருக்கிறேன், ஆனால், நான் அவ்வாறு செய்வதாக நினைக்கவில்லை. நான் எப்போதாவது ஒரே நேரத்தில் 4 அல்லது 5 மணி நேரங்கள் பேசுகிறேன். எனவே நான் - நான் அந்த சாதனையை இன்றிரவு முறியடிக்க மாட்டேன் (break that record) என்று எனக்கு - எனக்கு நிச்சயம் உள்ளது. நான் அவ்வாறு நினைக்கவில்லை, நான், மேலும்... ஆனால் நம்மால் கூடுமானால், சற்றே அதைக் குறைக்க முயற்சிப்போம். 8. இப்பொழுது, பரிசுத்த யாக்கோபு புத்தகத்தில், நான் இந்த வசனங்களில் வேகமாக கடந்து செல்ல நேரிட்டது, அப்போது அடுத்து நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்திற்கான ஆயத்தத்தைக் குறித்து பேசுவதற்கு இது பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். கூடாரத்திலிருந்து வந்திருக்கும் என்னுடைய நண்பர்களில் சிலர் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏன், அவர்களால் கூடுமானால், வியாதியஸ்தருக்கான அந்த ஜெபக்கூட்டங்களில் கலந்து கொள்ளும்படி, நான் அவர்களை வற்புறுத்த விரும்புகிறேன், அல்லது, என்னை மன்னித்துக்கொள்ளுங்கள், அது ஏறக்குறைய பாதியாகத்தான் என்னுடைய சிந்தையில் இருக்கிறது, அது வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதை குறித்ததைப் போன்று காணப்படுகிறது, ஆனால் மழை இல்லாமல் வறட்சியாய் இருப்பது ஒரு முடிவுக்கு வரும்படி ஜெபிப்பதற்காகத் தான் அது. தேவன் கடந்து போன நாட்களில் செய்ததைப் போன்றே இன்றும் அவரால் ஒரு வறட்சியை நிறுத்த முடியும். ஆனால் நாம் சந்திக்க வேண்டிய ஒரு நிபந்தனை உண்டு. 9. இப்பொழுது, சற்று முன்பு சகோதரன் காபிள் கூறினபடி, அது மிகவும் அழகான ஒரு காட்சியாகும். அல்லது, ஒருவிதத்தில் அது வருத்தமான விஷயம் தான், ஆனால், உலகத்தைக் குறித்த நம்முடைய இருதயத்தின் நிலையானது, நாம் எவ்வளவாக கர்த்தரைக் குறித்து உலர்ந்தவர்களாய் ஆகிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் கவனித்தீர்களானால், வெளியே பாலைவனத்திற்குள் போகும் போது (நான் அனேக சமயங்கள், கலிபோர்னியா, அரிசோனா மற்றும் அந்த இடங்களினூடாக உள்ள பாலைவனத்திற்குள் நடந்து போயிருக்கிறேன்.) அங்கு நீங்கள் காணும் ஒவ்வொரு களைச் செடியும் தன்மேல் ஒரு ஒட்டிக்கொள்ளும் பொருளைப் பெற்றுள்ளது. அதற்குக் காரணம் என்னவென்றால், அது உலர்ந்து போய் காணப்படுகிறது, அது..... ஒரு வறண்ட சீதோஷ்ண நிலையானது அப்படியே ஒட்டிக் கொள்ளும் பொருட்களை (stickers) உருவாக்கி விடுகிறது. அதன் மேலிருக்கிற எல்லாமே ஒட்டும் பொருளைப் (sticker) பெற்று இருக்கிறது. அதன்பிறகு நீங்கள் மாற்றி, அந்த அதே வகை களைச் செடியை எடுத்து, அதிக மழையும் சதுப்பு நிலமுமான ஒரு தேசத்திற்குள் வளர்த்துப் பாருங்கள், அது எவ்வளவு மிருதுவாக இருக்க முடியுமோ அவ்வளவு மிருதுவாக இருக்கும். தண்ணீர் தான் வித்தியாசத்தை உண்டாக்குகிறது. மிகவும் உலர்ந்து போய், ஒரு போதும் ஜெபக் கூட்டங்களை கொண்டிராமல் இருக்கும் ஜனங்கள் அல்லது ஒரு சபையை நீங்கள் எடுத்து கொள்வீர்களானால், அவர்கள் ஒட்டிக் கொள்பவர்களாக ஆகிவிடுகிறார்கள். அவர்கள் அப்படியே குற்றம் கண்டு பிடிக்கிறவர்களாய் ஒருவருக்கொருவர் ஒட்டி கொள்கிறார்கள். ஆனால் நமக்குத் தேவையானது எல்லாமே சற்றே நம்மை மிருதுவாக்கும்படியான (soften up) ஒரு நல்ல மழை தான். நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லையா? மிகுதியான மழை பெய்யும் இடத்திலிருக்கிற spout-ல் நான் வசிக்க விரும்புகிறேன், அப்பொழுது நம்மால் ஒரு.. (இடத்)ஐக் கொண்டு இருக்க முடியும், அப்படியே மிருதுவாக வைக்கப்பட்டு இருக்கும், உங்களுக்குத் தெரியும், மேலும் நீங்கள்... மழை பொழியும் எந்த இடமாக இருந்தாலும், அதுவே வசிப்பதற்கு சிறந்த இடம் என்று நினைக்கிறேன். 10. பரிசுத்த யாக்கோபு ஐந்தாம் அதிகாரம், 16வது வசனம் தொடங்கி, இந்த வார்த்தைகளை வாசிப்போம்: நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. எலியா என்பவன் நம்மைப் போலப்பாடுள்ள மனுஷனாய் இருந்தும், மழை பெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம் பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறுமாதமும் பூமியின் மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம் பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது. சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தை விட்டு விலகி மோசம் போகும் போது மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். உங்களுக்கு விருப்பமானால், இன்னும் ஒரு சிறு ஜெபம். 11. பரலோகப் பிதாவே, இரக்கத்திற்காகவும் வழி நடத்துதலுக்காகவும் வேண்டிக் கொள்ளும்படிக்கு உமது நேச குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் உண்மை அணுகி வருகிறோம். என்ன கூற வேண்டுமென்று எங்களுக்குத் தெரியவில்லை, சபையோர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீர் எப்போதுமே எங்கள் தேவைகளை அருளி இருக்கிறீர், நீர் மகிமையின் ஐசுவரியங்களின்படியே அருளுவீர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நாங்கள் முன்னே பார்த்து கடைசி நேரம் நெருங்கி வருவதைக் காணும் போது, சற்று கழிந்து, உடனே, இந்தப் பழைய பலவீனமான சரீரங்கள் மாற்றப்பட்டு அவருடைய சொந்த மகிமையான சரீரத்தைப் போன்று உண்டாக்கப்படும் என்பதை அறிந்து எங்கள் இருதயங்கள் சந்தோஷத்தால் துள்ளுகின்றன. அவர் இருக்கிற வண்ணமாகவே நாங்கள் அவரைக் காண்போம். அதற்கு மேலும் ஒருவருக்காக ஒருவர் ஒரு போதும் ஜெபிக்க மாட்டோம். அதற்கு மேல் ஒரு போதும் அங்கே வியாதியஸ்தர்கள் இருக்க மாட்டார்கள், அதற்கு மேலும் வயோதிபமோ, நரைமயிரோ (gray), முடமோ (crippled), வியாதியோ ஒருபோதும் இருக்காது. மருத்துவமனைகள், அவைகள் அவசியமிருக்காது, அதற்கு மேலும் மரித்தோரை அடக்கம் செய்யும் சடங்குகளைச் செய்பவர்களோ, இறுதிச் சடங்கு ஊர்வலங்களோ கிடையாது. ஆனால் அப்போது நாங்கள் கிறிஸ்துவைப் போலவே இருந்து, தேவனுடைய குமாரர்களாக ஜீவித்து, அவரோடு கூட நித்திய காலமாக அரசாள்வோம். ஓ, கர்த்தாவே, அந்த நேரம் மட்டுமாக, எங்கள் இருதயங்களை ஆயத்தப்படுத்தும், தேவனுடைய மகத்தான செய்தியானது ஜனங்களை பாவத்திலிருந்து நீதிக்கு விழித்தெழும்படியாக இந்தப் பகலும் இரவும் நாங்கள் கூப்பிடட்டும், நாங்கள் அமைதியாக இருக்க வேண்டாம். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 12. நான் ஒரு... நான் தொடர்ந்து இதை பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தை உடையவனாய் இருந்தேன், நான் என்ன கூறுகிறேன் என்பதைக் குறித்து நிச்சயமாக எச்சரிக்கையோடு இருக்க வேண்டியிருக்கிறது, ஏனென்றால் அங்கே அனேகர்... உலகத்தைச் சுற்றிலும் ஏறக்குறைய அனேக லட்சக்கணக்கான ஜனங்களை நான் சந்திக்கும்படி தேவன் அனுமதித்திருக்கிறார். நான் இம்மாதிரியான பிரகடனத்தை கொடுக்கும் போது, எப்போதுமே நான் என் வார்த்தைகளை ஆராய்ந்து பேசுவேன். ஆனால் நாம் பாதையின் முடிவில், கடைசி நாட்களில் ஜீவித்துக் கொண்டு இருக்கிறோம் என்று விசுவாசிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் வருகையைத் தவிர வேறு எதற்காகவும் எந்த நம்பிக்கையையும் என்னால் காண முடியவில்லை. நம்மால் கண்டுபிடிக்க முடிந்த ஒவ்வொரு அரசியல் திட்டத்தையும் நாம் முயற்சி செய்து பார்த்து விட்டது போன்று தோன்றுகிறது, அங்கே எதுவுமே கிரியை செய்வதாக தோன்றவில்லை. நாம் சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் இருக்கக் கூடும்படி நம் எல்லாருக்காகவும் கிரயத்தைச் செலுத்தி 1900 வருடங்களுக்கு முன்பே கல்வாரியில் மரித்த ஒரு மனிதர் அங்கே இருந்தார். அவருடைய திட்டத்தை நாம் மிக நீண்ட காலமாக புறக்கணித்து விட்டோம் என்று நம்புகிறேன்: இன்று அது தான் உலகத்திற்கு மிகப்பெரிய முக்கிய தேவையாக உள்ளது. 13. இப்பொழுது, முதலாவதாக மிகவும் கசப்பாக தோன்றுகிற இந்த வாக்குமூலத்தை நான் கொடுப்பேன். நான் - நான் அதை விரும்பினேன், ஏனென்றால் அது சாத்தியமாக உள்ளது. இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு இராஜ்யமும் சாத்தானால் ஆளப்படுகிறது. வேதாகமம் அவ்வாறு கூறுகிறது. சாத்தான் ஆகாயத்து அதிகார பிரபுவாக இருக்கிறான், ஒவ்வொரு தேசமும் அவனுடைய ஆதிக்கத்தின் கீழே இருக்கிறது. வேதவாக்கியம் அவ்வாறு கூறுகிறது. சாத்தான் இயேசுவுக்கு அதை மேற்கோள் காட்டி, "முழு உலகமும், இந்த ராஜ்யங்கள் எல்லாமும் என்னுடையது, நான் விரும்புவதை அவைகளுக்குச் செய்வேன்” என்று கூறினான். மேலும் அவன், "நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்து கொண்டால், நான் அவைகளை உமக்குத் தருவேன்” என்றான். அதற்கு இயேசு, "இவ்விடத்தை விட்டுப் போ, சாத்தானே, கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே" என்றார். எனவே, நீங்கள் பாருங்கள், அவை எல்லாமே சாத்தானுக்கு சொந்தமாயுள்ளன. இயேசு அவனுடைய வார்த்தைகளுக்காக அதைக் குறித்து தர்க்கம் செய்யவில்லை. ஆனால் ஏதோவொரு நாளில் இந்த தேசங்களை எல்லாம் அவர் சுதந்தரித்து கொள்வார் என்பதை கிறிஸ்து அறிந்திருந்தார். 14. வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில், கிறிஸ்து அதைச் சுதந்தரித்து கொண்டதை வெளிப்படுத்தினவனாகிய (Revelator) யோவான் கண்டபோது, அவன், "வானங்களே நீங்களும், பூமியே நீங்கள் எல்லாரும் களிகூருங்கள், இந்த உலகத்தின் இராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின், அவர் பூமியின் மேல் ஆயிரம் வருஷம் ஆளுகை செய்து ராஜ்யபாரம் பண்ணுவார்" என்றான். அந்த மகத்தான ஆயிரவருட அரசாட்சியின் நாளுக்காக நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம், அந்நேரத்தில், எல்லா தொல்லைகளும் வறட்சிகளும் மற்றும் எல்லாமும் தீர்க்கப்பட்டுவிடும். 15. நாம் இன்றிரவு எலியாவைக் குறித்து பேசி, இப்பொழுது வரவிருக்கிற நம்முடைய ஜெபக் கூட்டத்திற்கான ஒரு முன்னோட்டமாக அதைச் செய்து கொண்டிருக்கிறோம். எலியா ஒரு மனிதனாக இருந்தான்... அனேக நேரங்களில், எலியாவைப் போன்ற ஒரு மனிதனைக் குறித்து யாரோ ஒருவர் பேசும் போது, அவன் ஒரு மகத்தான தூதனாகவோ அல்லது பரலோகத்தை விட்டுப் புறப்பட்டு வந்த ஒரு பரிசுத்தவான் என்றோ அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவன் - அவன் நம்மைப் போல் பாடுள்ள மனுஷனாயிருந்தான் என்று வேதாகமம் கூறுகிறது. அவன் தனது சந்தோஷமான தருணங்களையும் வருத்தமான தருணங்களையும், தன்னுடைய சோதனைகளையும் தன்னுடைய அக்கறை இல்லாமையையும் (indifference) உடையவனாயிருந்தான், ஆனால் மழை பெய்யக் கூடாது என்று அவன் ஊக்கமாக ஜெபம் பண்ணினான். மூன்று வருஷம் ஆறு மாதங்கள் மழை பெய்யவில்லை. மூன்று வருடம் ஆறு மாதங்கள் கழித்து, அவன் மறுபடியும் ஜெபம் பண்ணினான், வானங்கள் மழையைப் பொழிந்தன. 16. இப்பொழுது, அவன் நம்மைப் போல ஒரு மனிதனாக இருந்தான், ஒரு தூதனாகவோ, உங்களையோ அல்லது என்னையோ காட்டிலும் மேலானவனாகவோ இல்லை. அவன் நம்மைப் போன்று தன்னுடைய வேறுபாடுகளையும், ஜீவியத்திலே சந்தோஷமான மற்றும் துக்கமான தருணங்க ளையும், தன்னுடைய ஜீவியத்தையும் உடையவனாயிருந்தான். ஆனால் தேவன் அவனுடைய ஜெபத்திற்குப் பதிலளித்தார். ஏனென்றால் அவன் ஊக்கமாகவும் உத்தமமாகவும் ஜெபம் பண்ணினான். வியாதியஸ்தருக்காகவோ அல்லது வறட்சி முடிவடையும்படியாகவோ அல்லது நமக்குத் தேவையான எதற்காகவோ அம்மாதிரியான ஒரு ஜெபத்தை செய்யக்கூடும் முன்பு, நாம் தேவனுடைய சித்தத்தில் தான் ஜெபம் செய்து கொண்டிருக்கிறோம் என்ற பரிபூரண புரிந்து கொள்ளுதல் அங்கே நிச்சயம் இருந்தாக வேண்டும். அந்த காரணத்தினால் தான் அவனால் வானங்களை அடைத்துப் போட முடிந்தது. ஏனென்றால் அது சம்பவிக்கப் போகிறது என்று தேவன் அவனிடம் சொல்லியிருந்தார். எனவே அது சம்பவிக்கப் போகிறது என்று தேவன் கூறும் போது, ஏதாவது சம்பவிக்கப் போகிறது என்று கூறுவது எளிதே, ஏனென்றால் அது அந்த விதமாகவே இருந்தாக வேண்டும். தேவனுடைய வார்த்தை தவறிப்போக முடியாது. 17. அந்நாட்களில் அது எப்படியிருந்தது, நாம் சரித்திரத்தைத் திரும்பிப் பார்க்கையில், 1 இராஜாக்கள் 9-ம் அதிகாரத்தில், அந்நாளில் என்ன சம்பவித்திருந்தது என்பதைக் குறித்து சிந்திக்கத் துவங்குகையில், இஸ்ரவேலர்... மழை பெய்யாமல் ஜனங்கள் பட்டினி கிடந்து சாகும்படி தேவன் மழைகளை நிறுத்த வேண்டுமென்று ஒரு - ஒரு தீர்க்கதரிசி ஜெபிப்பதற்கு காரணம் என்னவென்றால், உங்களால் அதைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இப்பொழுது, ஒரு பரிசுத்தவான், ஒரு தெய்வ பக்தியுள்ள மனிதன், ஒரு தீர்க்கதரிசி, பெரிய தீர்க்கதரிசி, வேதாகமத்திலேயே பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவன், பூமியின் மேல் ஆகாரத்தை விளைவிக்கும்படி மழையும் கூட பெய்ய தேவன் அனுமதிக்கக் கூடாது என்று ஜெபம் பண்ணினான். ஜனங்கள் சாப்பிடும்படி ஏராளமானதை உடையவர்களாயிருந்து, புசிக்க ஏராளம் இருப்பினும், பிறகு மரித்து, இழக்கப்பட்டு வேதனைப்படுவது (torment) ஜனங்களுக்கு ஒரு பெரும் தவறாயிருந்ததை அவன் அறிந்திருந்தான், அவர்களுக்கு சாப்பிட ஒன்றுமே இல்லாமல், மரித்து, பரலோகத்திற்கு போவதே சிறந்தது என்பதை அவன் அறிந்து இருந்தான். அது சரியே. இன்றைக்கும் அதுவே உண்மையாக இருக்கிறது. 18. அமெரிக்க மக்களாகிய நம்மோடுள்ள காரியம் என்ன, நாம் நன்றாக சாப்பிட்டு கொழுத்திருக்கிறோம், மற்றும் எல்லாமுமாய் இருக்கிறோம், நாம் எல்லாவற்றையும் பெற்று இருப்பதாக எண்ணிக்கொள்கிறோம். அது இஸ்ரவேலர் பெற்று இருந்த அதே விதமாகவே இருக்கிறது. ஆகாப் இராஜாவின் அரசாட்சியில், தேசம் செழிப்பாக இருந்த ஒரு நிலைக்கு வந்தது. அவர்களிடம் அனேக இரதங்களும் குதிரைகளும் இருந்தன. அவர்கள் எங்கிலுமுள்ள சகல தேசங்களையும் தோற்கடித்திருந்தார்கள். ஆனால் தேசத்தின் முக்கிய மனிதனாகிய, அந்த இராஜா, தேசத்தினுடைய இராஜா போய், ஒரு சிறு எகிப்திய இராஜகுமாரத்தியை (Egyptian princess) விவாகம் பண்ணினான், அது எகிப்திய இராஜகுமாரத்தி தான் என்று நம்புகிறேன். அவள் ஒரு விசுவாசி அல்லாத ஒரு - ஒரு பெண்ணாக இருந்தாள், அது தான் பிரச்சனையை ஆரம்பித்தது. புளிப்புள்ள கொஞ்ச மாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும். 19. நீங்கள் காண்கிறபடி, இன்று ஜனங்கள்... நீங்கள், "நல்லது, சகோதரன் பிரன்ஹாமே, நான் மிகவும் நல்ல ஒரு கிறிஸ்தவன் என்று நான்-நான் நினைக்கிறேன்” என்று கூறுகிறீர்கள். நீங்கள் மிகவும் நல்ல ஒரு கிறிஸ்தவனாக இருக்க முடியாது. அங்கே அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. நீங்கள் ஒன்றில் ஒரு கிறிஸ்தவனாக இருக்க வேண்டும், அல்லது நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இல்லாமல் இருக்கிறீர்கள். ஒரு கோதுமை விதையோ அல்லது உப்பு... கோதுமையானது இன்று ஒரு வாற்கோதுமையாகவும் நாளை ஒரு -ஒரு - ஒரு கோதுமையாகவும் இருக்க முடியாது. அது இன்று ஒரு கோதுமையாக இருக்கிறது, அது எப்போதுமே கோதுமையாகவே இருக்கிறது. ஒரு கிறிஸ்தவனாக ஆகிற ஒரு மனிதன் இன்று ஒரு கிறிஸ்தவனாகவும் நாளை ஒரு பாவியாகவும், மற்றும் இன்று ஒரு கிறிஸ்தவனாகவும் நாளை ஒரு பாவியாகவும் இருப்பதில்லை. கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாமல் இருப்பது போன்று அவனும் மாறாமல் இருக்கிறான், ஏனென்றால் அவன் தேவனுடைய ஒரு குமாரனாக ஆகிறான். 20. மேலும் ஒரு தேசம், நாம் கிறிஸ்தவ தேசமாக அழைக்கப்படுகிறோம். நல்லது, நாம் அவ்வாறு அழைக்கப்படுவதன் காரணம் என்னவென்றால், நாம் அப்பெயரைப் பற்றிப் பிடித்திருக்கிறோம். ஆனால் அந்தப் பெயர் இருப்பதால், அது நம்மை தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் எல்லாவற்றிலுமிருந்தும் விடுவிக்காது. எனவே இங்கே... கொஞ்ச காலத்திற்கு முன்பு, நாங்கள் இந்தப் பொருளின் பேரில் பேசிக் கொண்டிருந்தோம், நீங்கள் கவனிப்பீர்களானால், ஒவ்வொரு வருடமும், தேசம் முழுவதும், வறட்சியானது கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகத் தொடங்கியிருக்கிறது, ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இன்னும் நாம் அதில் பாதியளவும் கண்டிருக்கவில்லை என்று நம்புகிறேன். அது மட்டுமல்ல, ஆனால் அதைக் குறித்த காரியம் என்னவென்றால், நம்முடைய ஜனங்கள் தேவனை மறந்துகொண்டே இருக்கிறார்கள். அதுதான் முக்கிய காரியம், நண்பர்களே. நமக்கு புசிக்க ஏராளம் உண்டு. நமக்கு அருமையான மோட்டார் வாகனங்கள் உள்ளன. நாம் உலகத்திலேயே மிக செழிப்பான தேசமாக இருக்கிறோம். இவை எல்லாவற்றின் மத்தியிலும், அது எங்கிருந்து வருகிறது என்பதை நாம் கவனித்துப் பார்ப்பதில்லை. 21. அது ஒரு ஆப்பிள் மரத்தின் கீழிருக்கும் ஒரு பன்றியைப் போன்று இருக்கிறது. அது நாள் முபவதும் ஆப்பிள் பழங்களைத் தின்னும். அவைகள் அதனுடைய தலையின் மேல் வந்து விழுந்தாலும், அது ஒருபோதும் மேலே நோக்கிப் பார்த்து, அவைகள் எந்த வழியில் வந்து கொண்டிருக்கின்றன என்று காணாது. நல்லது, நாம் இருக்கும் விதமாகவே அதுவும் இருக்கிறது. நாம் அப்படியே முற்றிலுமாக... தேவன் நம்மேல் தமது ஆசீர்வாதங்களைப் பொழியும் போது, நாமோ ஒரு போதும், உமக்கு நன்றி, கர்த்தாவே, நான் இங்கே இருப்பதற்காக மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன், புசிக்க எனக்கு ஏதாவது கொடுப்பதற்காக நான் நன்றி உள்ளவனாயிருக்கிறேன்" என்று கூறும்படியாக மேலே நோக்கிப் பார்ப்பதில்லை. அவர் நமக்குக் கடன்பட்டிருப்பது போன்று நாம் அப்படியே தொடர்ந்து போய் விடுகிறோம். நாம் தான் அவருக்குக் கடன்பட்டிருக்கிறோம். அவர் நமக்கு எதுவும் கடன்படுவதில்லை. நமக்கு இருக்கிற எல்லாவற்றோடும் நாம் அவருக்குக் கடன்பட்டிருக்கிறோம். 22. இப்பொழுது, நான் ஒரு..(வரி)..யிடம் பேசிக் கொண்டிந்தேன். அண்மையில் சில ஊழியக்காரர்களும் நானும் நியாயத்தீர்ப்பு இந்த தேசத்தை தாக்கப் போவதைக் குறித்து இவ்விதமாகப் பேசிக் கொண்டிருந்தோம். அவர்கள், "சகோதரன் பிரன்ஹாமே, இந்த தேசத்தின் புனிதத்தன்மையின் நிமித்தமாகவும்... மிகவும் தீரமான கிறிஸ்தவர்களாகிய நம்முடைய முற்பிதாக்களின் நிமித்தமாகவும் தேவனால் இந்த தேசத்தின் மேல் தண்டனையை வைக்க முடியாது... மேலும் பிளிமத் பாறையிலும் மற்றவைகளிலும். அவர் அதை நினைவில் வைத்திருப்பார்” என்றார்கள். 23. நான், "தேவன் இஸ்ரவேலிடத்தில் அன்பு கூர்ந்தார், வேதாகமத்தில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது; அவர் அந்த விதமாக நம்மை நேசித்ததாக அவர் ஒரு போதும் சொல்லவில்லை” என்றேன். அப்போது நான், "ஆனால் அவர் உடையவராய் இருந்தார்.... அவருடைய முதலாவது அன்பு இஸ்ரவேலாகவே இருந்தது" என்றேன். இருப்பினும் இஸ்ரவேல் தேவனுடைய சித்தத்தை விட்டு வெளியே போன போது, பரலோகத்தின் நியாயத்தீர்ப்புகளை இஸ்ரவேல் மேல் ஊற்றினாரே. தேவனுடைய நியாயத்தீர்ப்புகளுக்கு நாமும் தப்பிக்க மாட்டோம். தாவீது தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதனாய் இருந்தாலும், அவன் தேவனுக்கு முன்பாக பாவம் செய்த போது, தாவீது விதைத்ததை அவனே அறுக்கும்படி தேவன் செய்தார். நாம் ஒருபோதும் அதைப் பெற்றுக் கொள்ளாமல் போவதில்லை. ஒரு தனிப்பட்ட நபராக இருந்தாலும், சபையாக இருந்தாலும், சமுதாயமாக இருந்தாலும், அல்லது ஒரு தேசமாக இருந்தாலும், பாவத்திற்கான நியாயத்தீர்ப்பு தேவனுக்கு அவசியமாயிருக்கும். ஆமென். 24. இப்பொழுது கவனியுங்கள், ஓ, பழைய ஏற்பாட்டில் திரும்பிப் பார்த்து தேவன் அப்போது என்ன செய்தார் என்பதைக் காணும்படி, தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற அந்த திருஷ்டாந்தங்கள் எல்லாவற்றையும் குறித்து சிந்தித்துப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும்; அவ்வாறு தான் அவர் இன்றும் இருக்கிறார், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். நீங்கள் கவனிப்பீர்களானால், ஜனங்கள் தேவனுடைய சித்தத்திற்குப் புறம்பே போயிருந்தார்கள். இந்தச் சிறு இராஜகுமாரத்தியை ஆகாப் விவாகம் பண்ணியிருந்தான், அவள் அங்கே வந்திருந்தாள், அவள் ஒரு விசுவாசி அல்ல. இப்பொழுது, ஒரு அவிசுவாசியை விவாகம் பண்ணியிருந்த ஒரு விசுவாசி அங்கே இருந்தான். 25. நிச்சயமாகவே ஒரு விசுவாசியாக இருக்க வேண்டிய ஒரு தேசம் இதோ இருக்கிறது, அதுவோ எல்லாவிதமான இழிவான காரியங்களோடும் (meanness) diviceties-களோடும் இணைத்துக் கொண்டு அதைச் சட்டப்பூர்வமாக ஆக்கிக் கொண்டிருக்கிறது: உதாரணமாக, மது அருந்துதல். இப்பொழுது, நான் இதுவாகவோ, அதுவாகவோ அல்லது மற்றதாகவோ இல்லை. அதை ஆராய்ந்து பார்ப்பது என்னுடைய வேலை இல்லை. ஆனால் அந்த ஒரு காரியத்தை நான் உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். குடிப்பதற்கு விஸ்கியையும், குடிப்பதற்கு பீர் மதுபானத்தையும் மனிதர் விற்பனை செய்யும்படியாக அவர்களுக்கு சட்டப்பூர்வமான உரிமையை வழங்குகிறார்கள், பிறகு, குடித்து விட்டு தெருவில் இருக்கும் அவனை அவர்கள் பிடிக்கும் போது, அவர்கள் அவனைப் பிடித்து, சிறையில் அடைக்கிறார்கள். அது சரியல்ல. அவர்கள் அவனுக்கு விஸ்கியை விற்பார்களானால், அவனுக்கு வேண்டிய மட்டும் அவன் குடித்து வெறிக்கட்டும். அவன் அதற்காக பணத்தை செலுத்தியிருக்கிறான். அது அவனுடைய பணம். எனவே செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால்..... 26. சமீபத்தில், நாம் மதுவிலக்கைக் கொண்டிருந்து, மதுபான கடைகள் (saloons) மூடப்பட்டு, அதைப்போன்ற மற்றவைகள் இருந்தபோது, வேதாகமம் கூறுகிறபடி, பன்றி அதனுடைய சேற்றுக்கே போவது போலவும், நாய் தான் கக்கினதற்குப் போவது போலவும்," நேரான, குறுகிய பாதையில் நம்மால் நடக்க முடியாதிருந்தது, நாம் விட்டு வந்த இடத்திற்கே திரும்பிப் போக வேண்டியிருந்தது. அது சரியே. நாம் விஸ்கியிலேயே வாக்களித்தோம். நாம் எல்லா..... யிலும் வாக்களித்தோம். நாம் அதை உள்ளே கொண்டு வந்தபோது, நாம் குற்றங்களையும் கொண்டு வந்துவிட்டோம். 27. நான் இப்பொழுது தான் லாஸ் ஏஞ்சல்ஸை விட்டு இங்கே வந்தேன், நான் லாஸ் ஏஞ்சல்ஸ் பட்டணத்திற்கு மேலே விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது, செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தேன், அங்கே கடந்த இரு வருடங்களில், ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் அந்தப் பட்டணத்தில் மட்டும், சராசரியாக 182 பெரிய குற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. நூற்று எண்பத்திரண்டு பெரிய குற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. நான், அது லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) அல்ல, அது இழக்கப்பட்ட தூதர்கள் (lost angels)" என்றேன். அங்கே ஒருகாலத்தில் நல் ஒழுக்கங்களையும் புரிந்து கொள்ளுதலையும் மனிதர்கள் உடையவர்களாய் இருந்தார்கள்; பாலியல் சார்ந்த பெரும் குற்றங்களும் மற்றும் காரியங்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. ஏன்? அதற்குக் காரணம் அவர்கள் குடிக்கவும், புகைப்பிடிக்கவும், அவர்களுக்கு விருப்பமான எதையும் செய்ய நாம் அனுமதிக்கிறோம். நம்மால் எப்படி தீமையிலிருந்து நன்மையைப் பெற்றுக் கொள்ளும்படி எதிர்பார்க்க முடியும்? சரியாகப் போவதற்கு நீங்கள் சரியானதையே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சரியானதை அறுவடை செய்வதற்கு நீங்கள் சரியானதையே செய்ய வேண்டியிருக்கிறது. இது வலது பக்கமாகவும் இது இடது பக்கமாகவும் இருக்கிறது. நான் வலது பக்கம் போய்க் கொண்டிருக்கும் போது என்னால் இடது பக்கம் போய்க் கொண்டிருக்க முடியாது, அல்லது இதற்கு மாறாகவும் அப்படியே தான் (vice versa). சரியாக இருக்க வேண்டுமானால், நாம் சரியாக போய், சரியானதையே சிந்தித்து, சரியானதையே செய்தாக வேண்டியிருக்கிறது. ஆனால் நாம் அந்தப் பாதையை விட்டு விலகிப்போகும் போது, நாம் தவறாகப் போய்க் கொண்டிருக்கிறோம். நாம் தவறாக வெளியே வருவோமானால், அது எவ்வாறு தோன்றினாலும் காரியமில்லை, நாம் தவறாகத்தான் வெளிவந்தாக வேண்டும். இன்று நமது தேசமும் அந்தவிதமாகத்தான் இருக்கிறது. 28. இங்கே சமீபத்தில்.... இப்பொழுது, ஜனாதிபதிகள் எழும்பலாம், போகலாம், அவர்கள் தங்களுடைய வேலையைச் செய்கிறார்கள்; நானோ சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் ஒருபோதும்... நான் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவனோ அல்லது குடியரசு கட்சியைச் சேர்ந்தவனோ அல்ல; நான் ஒரு கிறிஸ்தவன். நான் ஒரு வாக்கை (vote) அளித்தேன், அது இயேசு கிறிஸ்துவோடு தான். அவர் - அவர் என்னை ஏற்றுக்கொண்டார். அது முதற் கொண்டு நான் அவருடைய சுவிசேஷத்தை ஆதரிக்க முயற்சித்து வருகிறேன். நான் அவருக்காக தீவிரமாய் வேலை செய்து (electioneering), எல்லா வேட்பாளர்களையும் (candidates) அந்த இராஜ்யத்திற்குள் இழுக்கும்படியாக, எப்படியென்று நான் அறிந்துள்ளபடி, அவர்கள் எல்லாரையும் பெற்றுக்கொள்ளும்படி முயற்சித்து, இரவும் பகலும் எல்லா இடங்களுக்கும் சென்று கொண்டிருக்கிறேன். இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் ஆளுகை செய்து, அரசாட்சி செய்யும் ஒரு நேரம் அங்கே இருக்கும் என்பதை நான் அறிவேன், அவருடைய பிரஜைகள் எல்லாரும் அவருடனே கூட அரசாளுவார்கள். நான் அவர்களில் ஒருவனாயிருக்க விரும்புகிறேன். அவர் வந்து, சிறைப்பட்ட எல்லாரையும் விடுவித்து, மரணமும் மற்றும் காரியங்களும் துடைத்து அகற்றப்படும் அந்த மகத்தான, பிரம்மாண்டமான நாளுக்காக நான் முன்னோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்போது நாம் அவருடைய சொந்த மகிமையான சாயலுக்கு ஒப்பாக ஆக்கப்படுவோம், அதற்கு மேலும் இந்தக் காரியங்கள் அங்கே இருக்காது. எனவே நாம் முன்னோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். 29. இங்கே சமீபத்தில், இந்த தேசத்தை தாக்கின ஒரு பெரும் வறட்சியை அவர்கள் உடையவர்களாய் இருந்தபோது, அதை சிந்தித்துப் பாருங்கள். அதற்கும் சற்று முன்பு, நாம் என்ன செய்தோம்? அவர்கள் பன்றிகளையும் மற்றும் காரியங்களையும் இலவசமாய் வாங்கி, அவைகளை அங்கே மேற்கு கடற்கரைக்குக் கொண்டு சென்று, கொன்று போட்டார்கள், ஆயிரக்கணக்காக அவைகளைக் குவித்து வைத்து, பன்றி இறைச்சி மற்றும் பொருட்களின் விலைகளை அதிகரிக்கச் செய்யும்படியாக அதைச் சுட்டெரித்துப் போட்டனர். விலைகளை அதிகரிக்கச் செய்யும்படியாக அவர்கள் எல்லா பருத்தி மற்றும் அதைப் போன்ற எல்லாவற்றின் கீழாகவும் அவர்கள் உழுதார்கள். அதற்கும் அடுத்த வருடம்... அப்போது, நாம், "சமாதானம், சமாதானம், சமாதானம்” என்பதைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம், மேலும் சீனாவும் ஜப்பானுமோ பட்டினியால் மரித்துக் கொண்டிருந்தன. கோடிக் கணக்கான (billions) மரக்கால்கள் அளவுடைய கோதுமையை வெளியே கடலுக்கு எடுத்துக்கொண்டு வந்து, அதை வெளியே போட்டு விட்டோம். அதே வருடம் இந்தியாவில், ஆயிரமாயிரமான ஜனங்கள் தெருக்களில் மரித்தனர். அவர்களில் அநேகரை புதைக்கும்படியாக, அவர்கள் அவர்களைத் தெருக்களை விட்டு வெளியே கொண்டு செல்லும் முன்பே, எலிகள் அவர்களை முழுமையாக புசித்து விடும் அளவுக்கு அவர்கள் வீதிகளில் மரித்தனர். அதற்குப்பிறகு நாம் நம்மையே ஒரு கிறிஸ்தவ தேசம் என்று அழைத்துக் கொள்கிறோமா? அங்கேயுள்ள அந்தக் காரியங்கள் எல்லாம்? அது எவ்வாறு இருக்க முடியும்? 30. சகோதரனே, இன்றிரவு நமக்கு என்ன தேவையாயிருக்கிறது என்றால், ஒவ்வொரு சபையும், ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் தேவனிடம், உண்மையான ஜீவனுள்ள தேவனிடம் திரும்பி வரும்படியாக அவர்களுக்கு பழைமை நாகரீகமான, தேவனால் அனுப்பப்பட்ட எழுப்புதலும் மனந்திரும்புதலும் தான் அவசியமாயிருக்கிறது. மனோசாஸ்திரமோ, சபையின் வேத சாஸ்திரமோ அல்ல, ஆனால் நாம் யாரிடம் திரும்பி வருவது அவசியம் என்றால், மனிதருடைய இருதயத்தை மாற்றுகிறவரும், அவனுடைய சுபாவத்தை மாற்றுகிறவரும், அவனுடைய குணத்தை மாற்றுகிறவரும், அவனைக் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புது சிருஷ்டியாக ஆக்குகிறவரும், உலக சுபாவங்கள் எல்லாவற்றையும் அழித்து, ஒரு நபரை ஒரு புது சிருஷ்டியாக ஆக்குகிறவருமாகிய உண்மையான ஜீவனுள்ள தேவனிடம் திரும்பி வருவது தான் அவசியமாயுள்ளது. 31. ஓ, கிறிஸ்தவ நண்பர்களே, இன்றிரவு அதுதான் உலகத்திற்கு அவசிமாயிருக்கிறது. நமக்கு ஒரு செயல்முறை திட்டம் தேவையில்லை. கிறிஸ்து கல்வாரியில் நியமித்த வழக்கமான செயல்முறை திட்டம் தான் நமக்குத் தேவை. அவர் இங்கே பூமியில் இருந்தபோது, அவர், "ஒரு மனிதன் மறுபடியும் பிறவாவிட்டால், அவன் இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க மாட்டான்” என்றார். இன்றிரவு நமக்கு அதுதான் தேவை. நாம் எல்லா இடங்களிலும் எல்லாவிதமான செயல் முறை திட்டங்களையும் பெற்றிருக்கிறோம், மற்றும் இந்தத் திட்டத்திற்காகவும் அந்தத் திட்டத்திற்காகவும் எல்லாரும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சகோதரனே, அந்த செயல்முறை திட்டமானது சரியாக உங்கள் இருதயத்திற்கு அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது, கிறிஸ்து இயேசுவாகிய பரிசுத்த ஆவியானவர் எவ்வளவு கூடுமோ அவ்வளவு ஆவலாக உங்களுக்குள்ளே வர முயற்சித்துக் கொண்டு இருக்கிறார். ஆனாலும், நாம் அதை அடைத்துக் கொண்டு, புறக்கணித்து, சரியான காரியத்தை தவிர்த்து மற்ற எல்லாவற்றிற்கும் செவிகொடுக்கிறோம். தேவனோ... தேசத்தின் மேல் வாதைகளையுடைய (plagues) பாத்திரத்திலிருந்து ஊற்றப்பட (pour out) அனுமதிக்கிறார். அது சரியே. 32. இப்பொழுது, நாம் சற்று நேரம் மறுபடியும் திரும்ப கவனிக்கலாம். ஆகாப், அல்லது அந்த நாளில், அவன் அந்த தீர்க்கதரிசிக்கு செவிகொடுக்காதிருந்த போது, அந்தத் தீர்க்கதரிசியோ அவனிடம் பேச முயன்றான். அவனோ அதற்கு செவி கொடுக்காமல், தன்னுடைய மனைவி சொல்லுவதையே கேட்டான். நல்ல நேரம், செழிப்பு, கேளிக்கையுமாக தொடர்ந்து போய்க் கொண்டிருந்தனர், அதுதான் இன்றும் இந்த உலகத்தை முழுவதுமாக விழுங்கிப் போட்டிருக்கிறது. கவனியுங்கள், நான்... நான் உங்களை நேசிக்கிறேன் என்பது நினைவு இருக்கட்டும், ஆனால் இந்த மேடைக்குப் பின்னால் நான் இருக்கும் போது, அவர் கூறுவதையே நான் சொல்லியாக வேண்டும், ஏனென்றால் அவர் அதைக் கொடுக்கையில், அதை எவ்வாறு பிடிப்பது என்பதை மாத்திரம் நான் அறிவேன். 33. இன்று விசாரித்து பார்ப்பதற்கு அது ஒரு அவமானமாய் உள்ளது. இப்பொழுது, நான் இங்கேயுள்ள இந்தக் கூட்டத்தினரிடம் பேசிக் கொண்டிருக்கவில்லை. ஆனால் நான் முழுஉலகத்தையும் குறித்து, அல்லது இந்த முழுதேசத்தையும் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன். இன்று அநேக சபைகள் கோடை காலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இரவில் திறப்பது கூட இல்லை. ஏதோவொரு விதமான ரேடியோ நிகழ்ச்சி அல்லது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை (television program) கேட்பதற்கு அவர்கள் வீட்டிலேயே தங்கி விடுகிறார்கள். அது உண்மைதானா? மேலும் அவர்கள் என்ன செய்கிறார்கள், அமெரிக்க ஜனங்கள், அவர்கள் ஒரு - ஒரு பிரசங்கியாரைப் பெற்றிருக்கும் போது, அவர்கள் பொழுது போக்காக இருப்பதையே விரும்புகிறார்கள். அவர் சமூக மற்றும் அதைப் போன்ற காரியங்களைக் கொண்டிருப்பதற்கோ அல்லது அதில் தொடர்ந்து போவதற்கு , நல்லதொரு பொழுது போக்குபவராக அவர் இல்லை என்றால், அவர்கள் அவரை விரும்பவே மாட்டார்கள், அவர்கள் அவருக்கு எதிராக வாக்களிப்பார்கள். அவர்கள் பொழுதுபோக்கப்படவே விரும்புகிறார்கள். ஆனால் தேவன் பொழுதுபோக்குபவர்களை (entertainers) அனுப்ப மாட்டார். கிறிஸ்துவின் கலப்படமற்ற சுவிசேஷத்தையும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பிரசங்கம் பண்ணும்படியான சுவிசேஷ பிரசங்கிமார்களையே அவர் அனுப்புகிறார். அதை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு மனிதனும் மறுபடியும் பிறக்கிறான்; அதற்குப் புறம்பாக நீங்கள் இழக்கப்பட்டிருக்கிறீர்கள். ஜனங்கள் இழக்கப்பட்டு போவார்கள். இந்த ஐக்கிய நாடுகள் விழுந்து போகும் என்று நிச்சயமாக வேதாகமத்தில் முன்னுரைக்கப்பட்டு உள்ளது. அது விழுந்து போய்விடும். இப்பொழுது, அது சரியாக அதனுடைய பாதையில் இருக்கிறது, ஏனென்றால் அது சுவிசேஷத்திற்குப் பதிலாக கேளிக்கையையும் பெரிய நேரங்களையும், சமூக மற்றும் அதைப் போன்ற காரியங்களையும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். அவர்கள் சிலுவையைப் புறக்கணித்து விட்டு, பிசாசிடமிருந்து இரு மடங்கு சிலுவையை ஏற்றுக் கொண்டு, அதைப் பெற்று இருக்கிறார்கள். ஆமென். 34. இங்கே சமீபத்தில், நான் பிரான்ஸ் தேசத்திலுள்ள பாரீஸில் நின்றிருந்தேன், அங்கே இருந்த பிறகு, வீதிகளினூடாக நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன், நான் எப்பொழுதும் கண்டதிலேயே எதையும் தாண்டி அசுத்தமாயிருந்த அந்த தேசத்தையும் அந்த ஜனங்களையும் கண்டபோது, என்னுடைய ஜீவியத்திலேயே ஒரு எலி வளையை எப்பொழுதாவது கண்டு இருப்பேனானால், அது பிரான்ஸில் உள்ள பாரீஸில் தான், அது மிகவும் அசுத்தமாகவும், அருவருப்பாகவும், ஒழுக்கக் கேடாகவும் இருந்தது, நோட்ற டேம் சபையின் முன்பு சற்று தள்ளி: விபச்சாரிகள், நீங்கள் பெரும்பாலும் அவர்களை ஒரு வளைதடியைக் கொண்டு துரத்தியடிக்க வேண்டியிருந்தது; அவர்கள் ஆபாசமான படங்களையும், அதைப் போன்ற மற்ற எல்லாவற்றையும் விற்றுக்கொண்டிருந்தனர். உள்ளே நடந்து வந்து, கொஞ்சம் தண்ணீர் அவர்கள் மேல் தெளிக்கப்பட்டு, ஒரு ஜெபத்தைச் சொல்லிவிட்டு, அங்கிருந்து நடந்து போய், பரிசுத்தமாகவும் சுத்தமாகவும் இருப்பதாக உரிமை கோருகிறார்கள். ஓ, அது ஒரு அவமானமாக இருக்கிறது, ஏனென்றால்.... 35. அதன்பிறகு நான் தொடர்ந்து சென்றேன் - நான் சுற்றுலா பயணிகளுக்கு பட்டணத்தைக் காண்பிக்க உதவும் ஒரு சிறப்பு பேருந்தில் தொடர்ந்து சென்றேன். நான் சீன் ரிவருக்கு அருகில் சுற்றிப்பார்க்க விரும்பினேன், அப்போது அங்கே ஒரு - ஒரு... ஐக் கவனித்தேன். வர்ணனையாளர் பேசத் துவங்கி, "அது கியூக்கினாட்” என்றார். (கியூக்கினாட் - Huguenot என்பது 16ம் நூற்றாண்டில் பிரான்ஸ் தேசத்தில் நிகழ்ந்த மத சம்பந்தமான யுத்தங்களின் காலத்தைச் சேர்ந்த பிரெஞ்சு புராட்டஸ்டன்ட் ஆவார் - மொழிபெயர்ப்பாளர்.) நான் அங்கே நோக்கிப் பார்த்தேன், அங்கே சிறு பிள்ளைகளையும் மற்றவர்களையும் கொண்ட ஒரு சிலை இருந்தது, கம்பியால் அவைகளைச் சுற்றிக் கட்டியிருந்தார்கள், மேலும் அங்கே கடந்து போன நாட்களில் வரிசையாக அவர்கள் குவித்து வைக்கப்பட்டு brush around, கியூக்கினாட்-களை சுட்டெரித்துப் போட்டார்கள், பரிசுத்த ஆவியை உடையவர்களாய், மறுபடியும் பிறந்து, தேவனுடைய வல்லமையால் நிரப்பப்பட்ட ஒரு கூட்ட ஜனங்கள், அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அங்கே போனார்கள்; அவர்கள் வீதிகளில் அவர்களை சுட்டெரித்தனர். அது சரியே. அவர்கள் தங்களுடைய பெரிய நேரத்தையும், ஒயின் மதுபானத்தையும், பெண்களையும் மற்ற எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டார்கள், அது முதற்கொண்டு அவர்கள் உலகத்திற்கு அவமானமாக இருந்து வருகிறார்கள். 36. அதை எண்ணிப் பார்க்கும்போது, அதோ அங்கிருக்கிற ஹாலிவுட்டில் கால் பதித்து (landed), நம்முடைய பெண்களின் ஆடைகளை உரிந்து போட்ட அதே பிசாசு, அவன் அங்கே செய்த அதே காரியத்தையே இங்கும் செய்திருக்கிறான். பிரசங்க பீடத்திற்கு பின்னால் இருக்கும் பிரசங்கிமார்கள் வெட்கப்பட்டு, சுவிசேஷத்தை, அது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது போன்று அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு, தங்களுடைய வேலைகளைக் (jobs) குறித்து பயப்படுகிறார்கள். அது சரியே. நீங்கள் சுவிசேஷத்தை சுத்தமான கரங்களைக் கொண்டு கையாண்டு, ஜனங்களிடம் உண்மைகளையே கூறுவீர்களானால்... 37. இப்பொழுது, நான் கடந்த சில வாரங்களாக அங்கே வீட்டில் கவனிக்கத் துவங்குகையில், பெரிய உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், அல்லது பெரிய சபைகளைச் சேர்ந்த மகத்தான மனிதர்களில் சிலரும் பசிதாகம் கொண்டவர்களாய் உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள். மகத்தான மனிதர்களும், தேசத்திலேயே மிகப்பெரிய மனிதர்களில் சிலரும், இந்தியாவைச் சேர்ந்த பேராயரும் (archbishop) கூட அங்கே என்னுடைய வீட்டிற்குள் வந்திருந்தார்கள், மேலும்.... யிடம் வந்திருந்தார்கள், இங்கே அமெரிக்காவில் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்காக தேடிக்கொண்டும், கெஞ்சிக் கேட்டுக் கொண்டும் இருந்தார்கள். அவர்கள் வேத சாஸ்திரத்தைக் குறித்தும், மனிதனுடைய மனோ சாஸ்திரத்தைக் குறித்தும் சலிப்படைந்தவர்களாகவும் சோர்வடைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். மனிதர்களுடைய ஜீவியத்தை மாற்றி, அவர்களை கிறிஸ்து இயேசுவுக்குள் புது சிருஷ்டிகளாக ஆக்குகிற ஜீவனுள்ள தேவனுடைய தொடுதலை உணரவே அவர்கள் விரும்புகிறார்கள். கிறிஸ்தவர்களே, இன்றிரவு நமக்கு அது தான் அவசியமாயுள்ளது. இன்றிரவு உலகத்திற்கும் அது தான் தேவையாயுள்ளது. அமெரிக்காவிற்கும் இன்று அது தான் அவசியமாயிருக்கிறது. 38. நாம் சுற்றிலும் சென்று, எல்லாவிடங்களிலும் எழுப்புதலான திட்டங்களைப் பெற்றிருக்கிறோம்; நாம் ஜனங்களிடம், "நீங்கள் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கேட்கிறோம். அவர்களும் எழுந்து நின்று, "ஆமாம். நான் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன்' என்று கூறுகிறார்கள். அதற்கும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து, பிசாசு அங்கே வெளியே அவர்களை மறுபடியுமாக பிடித்துக் கொள்கிறான். இன்று அவர்களுக்கு என்ன தேவையாயிருக்கிறது என்றால், ஒரு பழைமை நாகரீகமான, தேவனால் அனுப்பப்பட்ட, பரிசுத்த பவுலுடைய எழுப்புதலும், தேவன் அவர்களுக்கு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் கொடுப்பது வரையில், அவர்களுடைய தாயும் தகப்பனும் செய்வது போலவும், பீடத்தின் மேல் சத்தமாக அழுவது (cry out) போலவும் பீடத்தில் மனிதர்களை முழங்கால்படியிட வைக்கும் பரிசுத்த ஆவியும் தான் அவசியமாயிருக்கிறது. எனது கிறிஸ்தவ நண்பனே, அதுதான் உண்மையாக உள்ளது. இங்கே உள்ளேயிருக்கும் ஜனங்களே, நீங்கள் இன்றிரவு விழித்துக் கொள்ளுங்கள்; அது ஒருபோதும் எந்த முன்னேற்றமும் அடையாது, நான் அதை சந்தேகிக்கிறேன், ஏனென்றால் அது அவ்வாறு இருக்கும் என்று வேதாகமம் முன்னுரைக்கிறது, எனவே தான் நாம் அங்கேயிருக்கிறோம். இது ஆகியிருக்கிறது, ஒரு தேசிய விவகாரமல்ல, இப்பொழுது, அது ஒரு தனிப்பட்ட விவகாரமாயுள்ளது. 39. இந்த மனிதனைக் கவனியுங்கள் - இந்த மனிதன், எலியா, வறட்சியைக் கீழே அனுப்பும்” என்றான். வானங்கள் மழையைப் பொழியாதபடி அவன் வானங்களை அடைத்தான். மேலும் இப்பொழுது, நீங்கள் இதைக் கவனிக்க விரும்புகிறேன். இங்கே என்ன சம்பவித்தது என்பதைக் குறித்த ஒரு முன்நிழலுக்காக (prefigure). இப்பொழுது, எலியா சென்று, இதைச் செய்யும்படியாக தேவன் அவனிடம் கூறினபோது, அவன் சென்று, என்ன சம்பவிக்கப் போகிறது என்று முன்னுரைத்தான், நல்லது, அந்த ஜனங்களோ, "நல்லது, அந்த மனிதன் பைத்தியக்காரன்” என்று சொல்லியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இப்பொழுது அவன் வருவதை உங்களால் காண முடிந்திருக்குமானால், அவன் ஒரு மகத்தான இராஜதந்திரமான மனிதனாக தோற்றம் அளிக்கிறவனாக இருக்கவில்லை. அவன் ஒரு ஆட்டுத்தோல் துண்டை இவ்விதமாக தன்னைச் சுற்றிலும் போர்த்துக் கொண்டிருந்தான், அவனுடைய தாடி நீளமாக (sticking out) அவனுடைய முகத்தின் மேல் இருந்தது, அனேகமாக தலைமயிரும் அதேவிதமாக தொங்கிக்கொண்டிருந்தது. ஒரு எண்ணெய் கலசத்தை தன்னுடைய பக்கவாட்டில் தொங்க விட்டவனாய், அவன் தெருவில் நடந்து வந்தான், சிறிய வயதான ஒல்லியானதும் எலும்பும் தோலுமானதுமான (bony) சரீரத்தை உடையவனாயிருந்தான், அவன் தன்னுடைய கரத்தில் ஒரு கோலை உடையவனாய் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தான்; ஆனால் தேவன் அவனோடு கூட இருந்தார். 40. சகோதரனே, இன்றைக்கும் அதுதான் காரியம். நாம் பெரிய சபைக்கோ அல்லது சில சகோதரர்களிடமோ சென்று, ஓ, நல்லது, எங்கள் சபையானது உங்களுடையதைக் காட்டிலும் சிறந்ததாகக் காணப்படுகிறது. எங்களுடைய சபை இதை, அதை, அல்லது மற்றதைச் செய்கிறது" என்று கூறுகிறோம். நீங்கள் வெளிப்புறத்தையே நோக்கிப் பார்க்கிறீர்கள். அங்கே அது எந்த வித்தியாசத்தை உண்டாக்குகிறது? அது எந்த விதமான ஜனங்களை அதற்குள்ளே பெற்றிருக்கிறது? அது தேவனை நேசித்து, தேவனிடம் ஜெபிக்கிற மக்களையும், ஆராதனைகளையும், ஒரு ஜெபக்கூட்டத்தையும், அதைப் போன்ற மற்ற காரியங்களையும் உடையதாயிருக்கிறதா? நீங்கள் அந்தவிதமான ஜனங்களைக் காணும்போது, நீங்கள் செழிப்படையும் ஒரு சபையைக் காண்பீர்கள். ஆம், ஐயா, அந்தக் கட்டிடமல்ல. தேவன், 'பலிகளும் மற்றவைகளும், நான் எதையும் கொண்டிருக்கவில்லை. சாலமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது: நான் இளைப்பாறத்தக்க வீடு எங்கேயிருக்கிறது? ஆனால் ஒரு இருதயத்தை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தப்படுத்தினீர்” என்றார். தேவன் தனிப்பட்ட நபரிடம் வருகிறார். 41. அதன் பிறகு, இந்த தீர்க்கதரிசி வேறு வழியை உடையவனாய் இருக்கையில், நான் இவனைக் கவனித்தேன், மழை பெய்யக்கூடாது என்றும், அப்பொழுது ஜனங்களால் இரட்சிக்கப்பட முடியும் என்று அவன் ஜெபம் பண்ணினான். அந்நாளில் அந்த ஜனங்கள், "Say, அந்தப் பரிசுத்த உருளையன் சொன்னதைக் கேட்டீர்களா? அவன் மழை வரும்படி அழைப்பது வரைக்கும், இனி மழை பெய்யப் போவதில்லையாம். நீங்கள் எப்பொழுதாவது அதைப் போன்ற எதையாவது கேட்டு இருக்கிறீர்களா? முட்டாள்தனம்" என்று கூறுவதைக் கேட்பதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். அவர்கள் எப்போதுமே செய்வதைப் போன்று, அவர்கள் வெளியே தங்களுடைய பெரிய பார்ட்டிகளுக்கும், நடனங்களுக்கும், கேளிக்கைகளுக்கும் தொடர்ந்து போய்க் கொண்டேயிருந்தார்கள். அங்கே பியர்ல் துறைமுகம் தாக்கப்பட்ட போது, அவர்கள் குடித்து, குடி போதையில் இருந்து, சுற்றிலும் களித்து கூத்தாடி வெறியாட்டம் கொண்டிருந்த போது, அதுதான் நம்முடைய தேசத்தை குழப்பத்திற்குள் வைத்தது. அவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்ட போது, அவர்கள் ஜெபம் பண்ணி, அங்கே அந்த இரவிலேயே ஒரு ஜெபக்கூட்டத்தைக் கொண்டிருந்திருந்தால், அவர்களுக்கு நேர்ந்தபடி, அவர்கள் ஜப்பானியர்களுடைய கரங்களில் விழுந்திருக்க மாட்டார்கள். 42. இன்றிரவு இதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நாம் ஜெபித்து (prayed up), தேசமும் ஜெபித்து, ஜனங்கள் தெய்வபக்தியுள்ளவர்களாய் ஜீவித்திருந்தால், நாம் இப்பொழுது கொண்டிருப்பதைப் போன்று வறட்சிகளையும் பஞ்சங்களையும் கொள்ளை நோய்களையும் மற்றும் காரியங்களையும் நாம் கொண்டிருந்திருக்க மாட்டோம்; மனிதர்களும் ஸ்திரீகளும் தேவனுக்கு முன்பாக சரியாக ஜீவித்திருந்தார்களானால். ஆனால் அதைக் குறித்த பிரச்சனை என்னவென்றால், உங்களுடைய சொந்த லூயிவில் பட்டணத்தினூடாக, cross over in ஜெபர்ஸன்வில். நியூ ஆல்பனியை நோக்கிப்பார்த்து, அதைக் குறித்த பகுப்பாய்வை கேட்டுப் பாருங்கள், நியூ ஆல்பனியில், 27,000 பேர்களும் அவர்களில் 40 சதவீதத்தினரும், ஒருபோதும் சபையில் இருந்ததில்லை அல்லது எந்த சபையையும் சேர்ந்தவர்களாயில்லை, இந்தியானாவிலுள்ள நியூஆல்பனியைச் சேர்ந்த நாற்பது சதவீத ஜனங்கள் அப்படியிருக்கிறார்கள். மசசுசெட்ஸ்-ல் உள்ள பாஸ்டனில் இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு என்ன அர்த்தம் என்று கூட அறியாமல் எத்தனை ஆயிரக்கணக்கான பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று மறந்து விட்டேன், இது பிள்ளைகளைக் குறித்த காரியம். உங்களால் அதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஒரு கிறிஸ்தவ தேசத்தைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம், ஏன், சகோதரனே, இது ஆப்பிரிக்காவைப் போன்று அவ்வளவு இருண்ட தேசமாக இருக்கிறது. அது சரியே. 43. நாம் என்னச் செய்யப் போகிறோம்? தேவன்.... ஐ அடைத்திருப்பதில் வியப்பொன்றுமில்லை. நாம் ஆயத்தமாக வேண்டும் என்பதில் வியப்பொன்றுமில்லை. ஆமோசில் என்று நம்புகிறேன், அது "ஓ இஸ்ரவேலே, உன் தேவனைச் சந்திக்க ஆயத்தப்படு. நீ செய்திக்கும் மற்றவைகளுக்கும் செவிகொடாமல் இருக்கிறாய். ஆயத்தப்படு” என்று கூறுகிறது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு உலகமானது ஆயத்தப்படும்படியான ஒரு நேரம் எப்பொழுதாவது இருந்து இருக்குமானால், அது இப்பொழுது தான். இதற்குச் செவி கொடுங்கள். 44. கலியாணத்திற்காக (weddings) ஆயத்தப்படுங்கள். நீங்கள், "நான் ஏன் கட்டாயம் ஆயத்தப்பட வேண்டும்? பிரசங்கியாரே, நான் ஏன்-ஏன் கண்டிப்பாக தேவனை சந்திக்க ஆயத்தப்பட துவங்க வேண்டும்? நீர் எதைக் குறித்துப் பேசிக் கொண்டு இருக்கிறீர்?” என்றுகேட்கலாம். நீங்கள் ஒரு கலியாணத்திற்காக ஆயத்தப்பட்டு, நீங்கள் அதில் ஏமாற்றமடையவும் செய்யலாம். ஆம், ஐயா. ஏதோவொரு இடத்தில், அல்லது வேறு ஏதோவொரு மகத்தான கூட்டத்திற்காக நான் ஆயத்தப்படுகிறேன் என்று உங்களால் கூற முடியும், நீங்கள் அதில் ஏமாற்றமடையவும் செய்யலாம். ஆனால் நீங்கள் ஏமாற்றமே அடைந்து போய்விடாத ஒரு ஆயத்தம் அங்கு உள்ளது, அது நீங்கள் தேவனை சந்திக்க வேண்டும் என்பது தான், நீங்கள் ஒவ்வொருவருமே ஆயத்தப்பட்டாக வேண்டும். எனவே, எது என்னைச் சிந்திக்க வைக்கிறது என்றால், நான் அறியும் ஒவ்வொரு தடவையும், ஒரு நரைத்த தலைமயிரைக் காணும் ஒவ்வொரு தடவையும், அது என்னிடம், "நான் தேவனை சந்திக்க கண்டிப்பாக ஆயத்தப்பட்டாக வேண்டும்” என்று பேசுகிறது. அபாயச் சங்கு (siren) ஊதப்படுவதை நான் கேட்கும் ஒவ்வொரு தடவையும் நான் கண்டிப்பாக தேவனைச் சந்திக்க ஆயத்தப்பட்டாக வேண்டும் என்று அறிகிறேன். இது ஒரு ஆயத்தப்படும் நேரமாகும். ஒரு மரணத்தைக் குறித்தோ அல்லது எதைக் குறித்துமோ நான் கேள்விப்படும் ஒவ்வொரு தடவையும், அது ஒரு ஆயத்தப்படும் நேரமாக இருக்கிறது, தேவன் ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் அந்தக் காரியங்களைக் காணும் போது, வியாதியை நீங்கள் காணும் போது, மருத்துவரின் அலுவலகத்தை நீங்கள் காணும் போது, நீங்கள் அந்தக் காரியங்களைக் காணும் போது, தேவனைச் சந்திக்க ஆயத்தப்படு என்ற ஒரு எச்சரிக்கையாக அது - அது இருக்கிறது, அது சமீபமாயுள்ளது. 45. நீங்கள் இங்கே இந்த வாரத்தில், ஒரு மனிதனை, ஒரு வாலிபனைக் காண்கிறீர்கள், திரும்பிப் பாருங்கள், அதற்கு எந்த நேரமும் இல்லாதது போன்று தோன்றுகிறது, அங்கே அவன் ஒரு முடிவுக்கு வருகிறான், அவனுடைய தலைமயிர்கள் நரைத்துக் கொண்டிருக்கின்றன, மேலும் அந்த அழகான வாலிப பெண், அவள் வயதாகி தளர்வுற்றுக் கொண்டிருக்கிறாள், தேவனை சந்திக்க ஆயத்தப்பட அது ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது. ஆம், ஐயா, அதை நோக்கி உங்களைச் சுட்டிக் காட்டும் எல்லாமே நியாயத்தீர்ப்பு நாளிலே உங்களுக்கு எதிரான சாட்சியாக இருக்கும். நான் பாதையின் முடிவுக்கு வரும்போது, நீங்கள் பாதையின் முடிவுக்கு வரும்போது, நாம் அங்கே அடையும் போது, இங்கேயிருக்கும் எல்லாமே, மரங்களும், எச்சரிக்கை செய்யும் ஒவ்வொன்றும் நியாயத் தீர்ப்பில் நமக்கு எதிராக எழும்பும்படி தேவன் செய்யப் போகிறார். துன்மார்க்கரின் கூக்குரல்களும் கூட உங்களைக் குற்றவாளிகளென்று தீர்க்கும். நரகத்தில் இருக்கும் துன்மார்க்கரின் கூக்குரல்களும், நீங்கள் அங்கே நின்று கொண்டிருக்கும் போது, "நல்லது நான்... நான் சரியானதையே செய்யக் கருதினேன், நான் -நான்-நான்...” அங்கே நரகத்தில் அவர்களில் இலட்சக்கணக்கானோர் (millions) இருப்பார்கள், அவர்கள், "நீர் அவனைக் குற்றவாளியாகத் தீர்த்திருக்க வேண்டும், ஏனென்றால் நானும் அதே நோக்கத்தைக் கொண்டிருந்தேன், நீரோ என்னை இங்கே கீழே அனுப்பி விட்டீரே. நீர் நீதிபரர் அல்ல, தேவனே, நீர் அதனோடு அவனை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டீரே” என்று கூறுவார்கள். 46. கன்னி மரியாளே மேலறைக்கு ஏறிப்போய், மதுவின் கீழாக குடித்து வெறித்த ஒரு பெண்ணைப் போல தள்ளாடும் அளவுக்கு, அவள் அப்படிப்பட்ட ஒரு வழியில் பரிசுத்த ஆவியினால் நிறைக்கப்படும் வரையில், அங்கே தங்கி இருந்திருக்க வேண்டியிருந்திருக்குமானால், அதைக் காட்டிலும் குறைவான எதையும் கொண்டு நீங்கள் எப்படி உள்ளே பிரவேசிக்கப் போகிறீர்கள்? ஆம், ஐயா, சகோதரனே, நாம் அதனோடு முட்டாளாக்கிக்கொள்ளுவதை நிறுத்தி, துரிதமாக வந்து தேவனோடு சரிப்படுத்திக்கொள்ளுங்கள். அப்போது தேவனுடைய வல்லமை நம்முடைய ஜீவியங்களுக்குள் வரும். அது உண்மையாக இருக்கிறது. ஆமாம். 47. ஆகாப், அவன் எலியாவுக்கு செவிகொடாமற் போனான். எலியா நடந்து சென்று.... இப்பொழுது அவ்விதமாகத் தோற்றமளிக்கிற ஒரு மனிதனை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? வயதான பலமுள்ளவனாகத் தோற்றம் அளிக்கிற மனிதன், அவனுடைய சிறிய வயதான சரீரமானது அங்கே நடந்து சென்று, இராஜாவின் முகத்தை நோக்கி தன்னுடைய விரலை நீட்டி (pointed), "நான் அழைக்கும் மட்டுமாக வானங்களிலிருந்து பனியும் கூட பெய்யப் போவதில்லை” என்றான். நல்லது, அதற்கு அந்த இராஜா, "நல்லது, யார் நீ?” என்று கூறுவதை நான் கற்பனை செய்கிறேன். ஆனால் அவன் எதைக் குறித்துப் பேசிக் கொண்டு இருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் கர்த்தருடைய வார்த்தையை அறிந்திருந்தான். அக்காரணத்தினால் தான் இன்று ஊழியக்காரர்களும் மற்றும் எல்லாமே, தேவனை சந்திக்க ஆயத்தப்படு என்று உன்னிடம் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கின்றன, ஏனென்றால் அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை அறிந்திருக்கிறார்கள், இவைகள் எல்லாவிடங்களிலும் எச்சரிக்கைகளாக இருக்கின்றன என்பதையும் அறிந்திருக்கிறார்கள். பஞ்சங்களும், கொள்ளை நோய்களும், பூமி அதிர்ச்சிகளும், மற்றும் அதைப் போன்றவைகளும், அவர், "இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். அப்பொழுது அவர்கள் உங்களை ஒப்புக் கொடுத்து விடுவார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்” என்று சொல்லி இருக்கிறார். 48. நண்பர்களே, இன்று இங்கே அமெரிக்காவில் பாருங்கள், இதில் நாமெல்லாரும் ஒரு பக்தியுள்ள தேசத்தைக் குறித்துப் பேசுகிறோம், அவர்கள் சிகாகோவில் சற்று முன்பு, ஒரு அஞ்ஞான தேவனுக்கு ஆலயத்தைக் கட்டிவிட்டார்கள், அதற்கு இலட்சக்கணக்கான டாலர்கள் (millions of dollars) செலவானது. அனேக நேரங்களில், இயேசு கிறிஸ்துவின் உண்மையான சுவிசேஷமானது, சிறிய பழமையான மிஷன் ஊழியங்களிலும், தெருவின் பக்கமாக உள்ள காரியங்களிலும் தான் பிரசங்கிக்கப்பட்டது; அவர்களுடைய செயல்முறை திட்டங்களை ஆதரிக்க ஒரு அமெரிக்க காசு (dime) கிடைப்பதே கஷ்டமாக இருந்தது. கொஞ்ச காலத்திற்கு முன்பு, இங்கேயுள்ள இந்தச் சிறிய சபைக்கு 30,000 டாலர்கள் கடன் இருப்பதாக இங்கேயுள்ள அந்த மேய்ப்பர் கூறினார், அமெரிக்காவிலுள்ள கிறிஸ்தவர்களாகிய நாம், அஞ்ஞானிகள் வந்து பத்து இலட்சம் டாலர்கள் செலவில் கோவிலைக் கட்டும் போது, நாம் நம்மையே ஒரு கிறிஸ்தவ தேசம் என்று அழைத்துக் கொள்கிறோம். மேலும் அங்கே மேலே அந்த கோவிலினூடாக தொடர்ச்சியாக நடந்து சென்றேன், பிசாசு மிகவும் சக்தி வாய்ந்தவனாக இருந்த போதும், உங்களால் அதை எல்லா இடங்களிலும் தாக்க முடிந்தது. நீங்கள் ஆவிக்குரியவர்களாக இருந்தால், நான் என்ன கூறக்கருதுகிறேன் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள். அங்கே அது இருந்தது, அங்கே உள்ளே, சொன்னார்கள், அவர்கள், "இதோ முகம்மது இருக்கிறார், இங்கேயிருக்கும் இதற்காக இதுவும், அங்கே இருக்கும் அதற்காக இதுவும் இருக்கிறது” என்று கூறினார்கள். அது ஒருபோதும் கிரியை செய்யாது, இல்லை, ஐயா. அங்கே ஒரே ஒரு வழி தான் உண்டு, அதுதான் இயேசு கிறிஸ்து, தேவ குமாரன் தான் வாசலாகவும் வாயிற்கதவாகவும் இருக்கிறார். கிறிஸ்து மரித்தவராக இல்லை, அவர் தமது ஜனங்களுக்குள் ஜீவிக்கிறார். 49. எலியா அந்த மலைக்குப் போகிறான். தேவன் அவனிடம் சொன்னார், "இந்த மலையின் உச்சிக்கு அங்கே மேலே ஏறிப்போ” என்றார், (அவை எல்லாவற்றிலுமே மிகவும் வறண்ட இடம் அங்கே இருந்தது), அங்கே மேலே அந்தச் சிறு கேரீத் ஆற்றண்டையில் உட்கார்ந்து கொள். உன்னை போஷிக்க நான் காகங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறேன்” என்றார். அதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அப்போது ஜனங்கள், "நல்லது, நாம் சரியாக முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறோம்” என்று கூற, ஒரு வறட்சி தொடங்கி விட்டது. 50. கவனியுங்கள், அது வரும் என்று தேவனுடைய வார்த்தை சொன்னவிதமாகவே காரியங்கள் வரத்துவங்குகிறது. இப்பொழுதோ அவர்கள் வியப்படைந்தார்கள்..... அந்த மனிதன் பைத்தியக்காரன் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அவனோ அங்கே மேலே உட்கார்ந்தபடி, நாளுக்கு மூன்று வேளையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். காகங்கள் வந்து அவனைப் போஷித்தன. நல்லது, அவர்கள்.... இங்கேயிருக்கும் ஜனங்களாகிய உங்களில் மிக அநேகரைப் பார்க்கிலும் மேலான நிலையில் அவன் இருந்தான். அவனுக்கு சில கறுப்பு நிற சுமை தூக்குபவர்கள் இருந்தார்கள். இங்கேயிருக்கும் உங்களில் எவருக்கும் வேலைக்காரர்கள் இருக்கிறார்களா என்பது அரிதான விஷயம் தான் என்பதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். ஆனால் அந்த மனிதனோ அங்கே மேலே வனாந்திரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான், தேவனோ காக்கைகள் வரும்படி செய்து, அவனைப் போஷித்தார். இப்பொழுது நீங்கள், எங்கிருந்து.... அந்தக் காக்கைகள் அவனிடம் கொண்டு வந்து கொண்டிருந்த அந்த சான்ட்விச்சுகள் எங்கிருந்து அவைகளுக்குக் கிடைத்தன?” என்று கேட்டீர்கள். நல்லது, எனக்குத் தெரியாது, அதை அறிவது எனக்கடுத்ததல்ல, என்னால் உங்களிடம் கூற முடியாது. எனக்குத் தெரிந்த ஒரே காரியம் என்னவென்றால், அவைகள் ஏதோவொரு இடத்திலிருந்து அவைகளுக்குக் கிடைத்தன. அவைகள் அவைகளை எலியாவிடம் கொண்டு வந்தன. அவன் அவைகளைப் புசித்து, மூன்று வருடமும் ஆறு மாதமுமாக உயிருடன் இருந்தான். ஆமென். எனக்குத் தெரிந்த ஒரே காரியம் என்னவென்றால், காகங்கள் அவைகளைக் கொண்டு வந்தன, எலியா அதைப் புசித்தான். நீங்கள், "சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள் ஆழமான உத்தமத்தோடு விசுவாசிக்கும் ஒரு மார்க்கத்தைப் நீர் பிரசங்கிக்கையில், அங்கே அப்படிப்பட்ட ஒரு காரியம் இருக்கிறது என்று என்னிடம் சொல்ல வருகிறீரா?" என்று கேட்கலாம். 51. ஆம், ஐயா. நான் அதை விசுவாசிக்கிறேன். நீங்கள் அவ்வாறு உணரவில்லை என்றால், நீங்கள் அதைப் பெற்றிருக்கவில்லை . ஒரு காரியம் நிச்சயம். இந்த மேல் கோட்டை என்னால் உணர முடியாதிருந்தால், நான் இதை அணிந்திருக்கிறேனா என்பதை அறிந்திருக்க மாட்டேன். அது முற்றிலும் சரியே. 52. ஒரு சமயம் ஒரு மனிதர் சொன்னார்.... இது நகைச்சுவை அல்ல, பிரசங்க பீடத்தில் நான் வேடிக்கை பேச்சுக்களைப் பேசுவதில்லை, நான் அதை நம்புவதில்லை, எனக்கு அதில் நம்பிக்கை கிடையாது. இது நகைச்சுவை பேசும் இடமல்ல, இது தேவனுடைய வார்த்தைக்கான ஒரு இடமாக இருக்கிறது. ஒரு வயதான கறுப்பின மனிதர், "நான் இந்த வேதாகமத்தை சுமந்து செல்கிறேன்” என்றாராம். அதற்கு, உம்மால் அதை வாசிக்க முடியாதே. நீர் எதற்காக இதைச் சுமந்து செல்கிறீர்” என்று கூறப்பட்டதாம். 53. அதற்கு அவர், "நான் இதை விசுவாசிக்கிற காரணத்தினால் இதை சுமந்து செல்கிறேன். நீர், நல்லது, அந்தக் காரணத்திற்காக நான் இதை சுமந்து செல்கிறேன். என்னால் அதை வாசிக்க முடியாது; அதன்மேல், 'பரிசுத்த வேதாகமம்' என்று எழுதப்பட்டுள்ளது என்று கூறுகிறேன், அது பரிசுத்தமுள்ளது என்று நான் அறிவேன்" என்று கூறினானாம். அவனோ, "நல்லது, நீ விசுவாசிக்கிறாய் - நீ விசுவாசிக்கிறாய்..." என்று கூறினானாம். அவருடைய முதலாளி, ஒரு மனிதன் ஆழமான உத்தமத்தோடு விசுவாசிக்கும் மார்க்கத்தைக் கொண்டிருக்க முடியும் என்று நீ நம்புகிறாயா?" என்று கேட்டான். அதற்கு அவர், "ஆம், முதலாளியே” என்றார். அவன், "நல்லது, எப்படி... ஆழமான உத்தமத்தோடு விசுவாசிக்கும் மார்க்கமாக அப்படிப்பட்ட ஒரு காரியமே அங்கு கிடையாது” என்றானாம். அவர், "நீர் ஒரு வார்த்தையைத் தவற விட்டீர். உமக்குத் தெரிந்த வரையில், ஆழமான உத்தமத்தோடு விசுவாசிக்கும் மார்க்கமாக அப்படிப்பட்ட ஒரு காரியமே அங்கு கிடையாது” என்றார். ஆனால் அவனுக்கு வித்தியாசம் தெரிந்திருந்தது. ஒருநாள் அவன், எப்போது.... எங்கு.... ஆழமாக உத்தமத்தோடு விசுவாசிக்கும் அந்த மார்க்கத்தை நான் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். இது மழை பெய்யும் ஒரு நாளாக இருக்கிறது. நம்மால் வேலை செய்ய முடியாது" என்றான். அவர், "வேகமாக வாரும்" என்றார். அவர் அவனை வெளியே அந்த சோள மாட்டுத்தொழுவத்திற்கு அழைத்துச் சென்றார். அது அருமையானதாகவும் உலர்ந்ததாகவும் இருந்தது. அவன், "என்னால் அதை இங்கே பெற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்டான். அந்த வயதான கறுப்பின மனிதன் (darkie), “இல்லை , ஐயா” என்றார். அவன் மேலே வைக்கோல் பரணில் ஏறிச்சென்று, "என்னால் அதை இங்கே பெற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்டான். அவர், “இல்லை , முதலாளியே” என்றார். அதற்கு அவன், "நாம் அதை எங்கு பெற்றுக்கொள்ளலாம்?” என்றான். 54. அவர் தன்னுடைய காற்சட்டையின் கால்பகுதியை மேலே இவ்விதமாக சுருட்டி விட்டுக்கொண்டு, இவ்விதமாக பன்றிகளை அடைத்து வைக்கும் சேற்றுக்குள் நடந்து சென்று, "முதலாளியாரே, வேகமாக வாரும். இங்கே தான் நீர் அதைப் பெற்றுக்கொள்ளலாம், இங்கே வெளியே தான்" என்றாராம். அவனோ, "அதைப் பெற்றுக்கொள்ள என்னால் அங்கே வர முடியாது. அங்கே வெளியே எனக்கு அது வேண்டாம்” என்று கூறினானாம். அதற்கு அவர், "நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள குறிப்பிட்ட அளவு முயற்சி தேவை (You don't want it bad enough). அதுதான காரணம் என்றாராம். 55. சகோதரனே, ஒரு மனிதன் உண்மையாகவே தேவனுக்காக பசியும் தாகமும் பெற்றுக்கொள்ளும் போது, அவன் அதைப் பெற்றுக்கொள்வான் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். அதைக் குறித்த தொல்லை என்னவென்றால், சபையானது இன்றிரவு தேவனுக்காக போதுமான அளவு பசியாக இல்லை, இன்றிரவு பரிசுத்த ஆவியானவர் சபைக்குள் அசைவாடாமல் இருப்பதற்கு அதுதான் காரணம். அப்போஸ்தலர்களுடைய... அடையாளங்களுக்கு அதுதான் காரணம். சிலசமயங்களில் அவர்கள், சகோதரன் பிரன்ஹாமே, இந்த சுகமளித்தல்களையும் அற்புதங்களையும் அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்வது எப்படி? " என்று கேட்கலாம். நீங்கள் அதை விசுவாசித்தால், அது கிரியை செய்யும். நீங்கள் தேவனை அவருடைய வார்த்தையில் எடுத்துக் கொள்வீர்களானால், அது உண்டாக்கும். அது உண்மை என்று உலகத்தைச் சுற்றிலும் அதை நிரூபிக்கும்படியாக தேவன் என்னை வாழச் செய்திருக்கிறார். எனவே இன்றிரவும் ஒரு வறட்சியிலோ அல்லது மற்ற எதிலுமோ அது கிரியை செய்யும். நீங்கள் தேவனுடைய நிபந்தனையை சந்திப்பீர்களானால், அந்த நிலத்தில் தேவன் உங்களைச் சந்திப்பார். ஆனால் நீங்கள் அவருடைய நிபந்தனைகளுக்கு வந்தே ஆக வேண்டும். 56. கவனியுங்கள், எலியா அங்கே மேலே இந்தக் குட்டையின் அருகில் உட்கார்ந்தபடி, தான் விரும்பும் போது, பருகிக் கொண்டிருந்தான், காகங்கள் அவனைப் போஷித்துக் கொண்டிருந்தன. அதன்பிறகு அவர்கள்.... எலியாவுக்காக தொடர்ந்து தேடத் துவங்கும் நேரம் வந்தது, அவர்களுக்கு எலியா தேவைப்பட்டது. அவர்கள் இந்த தேவனுடைய மனிதனைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும்படியாக வெளியே சென்றார்கள். இப்பொழுது, ஒரு ஆயத்தம் செய்வதற்காக அவன் அவர்களுக்கு என்ன கூறினான் என்று நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஒரு ஆயத்தம் பண்ணுவதற்காக அந்நாளில் கிரியை செய்த அந்த காரியம், கென்டக்கியில் உள்ள லூயிவில்லிலும் கிரியை செய்யும். மழைக்காக ஜெபம் செய்வதற்கு இந்த அடுத்து வருகிற செவ்வாய்க்கிழமை இரவோ செவ்வாய் பிற்பகலோ இங்கே வரப்போகிற ஜனங்களாகிய உங்களுக்கு அது கிரியை செய்யும். 57. இப்பொழுது, கூர்ந்து கவனியுங்கள். எலியா, "முதலாவது, போய் அந்த தீர்க்கதரிசிகளில் நாநூறு பேரை அழையுங்கள். போய் உங்கள் எதிரான காரியத்தை (opposition) இங்கே அழைத்துக்கொண்டு வாருங்கள். நீங்கள் அதை இங்கே மேலே கொண்டு வரும்போது, ஒரு காளையை நாம் இரண்டாக துண்டித்து, நீங்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், அவர்கள் தங்கள் தேவனை கூப்பிடட்டும். அதன்பிறகு என்னுடைய தேவனைக் கூப்பிடும்படியான ஒரு வாய்ப்பை எனக்குக் கொடுங்கள்” என்றான். நீங்கள் இதைக் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், அவர்கள் ஊற்றின பிறகு.... மேலே ஏறிச்சென்றனர், அஞ்ஞானிகள் தங்களுடைய மார்க்கத்தையும் மற்றவற்றையும் கொண்டு சென்றார்கள். அது - அது மரித்ததாக இருந்தது. அங்கே எதுவுமே இல்லாதிருந்தது, எலியா வெளியே நடந்து சென்று, தன்னுடைய கரங்களை தன்னுடைய நெஞ்சில் வைத்து, ஒருக்கால் இந்தவிதமாக இருந்திருக்கும், "நீங்கள் ஏன் கொஞ்சம் உரத்த சத்தமாகக் கூப்பிடக் கூடாது? அது அவன் ஒருக்கால் அலுவலாயிருப்பான். அவன் ஒருக்கால் யுத்தம் செய்து கொண்டிருப்பான். நீங்கள் ஏன் அவனிடம் பேசக் கூடாது?" என்றான். ஆம், ஐயா. 58. இப்பொழுது, உங்கள் உல்லாசத்தைத் துவங்குவதற்கு இங்கே உங்களுக்கு ஒரு பீர் பார்ட்டி இருக்கிறது, அல்லது ஏதோவொரு இடத்தில் ஒரு பெரிய பிக்னிக் போவதற்கு உங்களுக்கு இருக்கிறது, முழு உலகமும் அடங்கிக் கீழ்ப்படியட்டும், அது பூமியின் மேல் மழையைக் கொண்டு வரும். நீங்கள்.... இன்றிரவு அதை முயற்சித்துப் பாருங்கள். நீங்கள் அப்படியே ஒவ்வொரு மதுக்கூடத்தையும் திறந்து, அவர்களால் கூடுமான எல்லா மதுபானத்தையும் எல்லாருக்கும் கொடுத்து, கிறிஸ்தவனை வீட்டிலே தரித்திருக்கச் செய்து, ஜெபிக்காமலும் அதைப் போன்ற ஒவ்வொன்றையும் செய்யாமலும் இருந்து, உங்களால் மழையையும் செழிப்பையும் தேசத்தின் மேல் வருவிக்க முடிகிறதா என்று பாருங்கள். அது சரியே. ஆனால் பிறகு நீங்கள் அவைகள் ஒவ்வொன்றையும் அடைத்து, உங்களுடைய இழிவான காரியங்கள் எல்லாவற்றையும் மற்றும் ஒவ்வொன்றையும் நிறுத்தி, உங்களுடைய முழங்காலில் நின்று, தேவனை நோக்கி உரத்த சத்தமிட்டு அழுது, என்ன சம்பவிக்கிறது என்று கவனித்துப் பாருங்கள். பதில் கொடுக்கும் தேவனே தேவன். நாம் ஒரு சோதனை செய்து பார்ப்போம். 59. நான் அநேக நேரங்களில் அதை முயற்சித்துப் பார்த்திருக்கிறேன். நான், "நீங்கள் நபர்களில் ஒருவரை எடுத்துக் கொள்ளுங்கள், வியாதியஸ்தர்களையும் துன்பப்படுகிறவர்-களையும் கொண்டு வந்து யார் தேவன் என்று கண்டு பிடியுங்கள்” என்றேன். தேவன் இதிலும் அதே காரியமாகவே இருப்பார். இந்தப் பிரதேசத்தைச் சுற்றியுள்ள ஜனங்களாகிய உங்களுக்கு ஒரு பழைமை நாகரீகமான மழை ஊற்றப்பட வேண்டுமானால், நீங்கள் அப்படியே உங்கள் முழங்கால்களில் நின்று, இங்கே சுற்றிலுமுள்ள எல்லாரும் ஒரு உத்தமமான இருதயத்தோடு கூட தேவனை நோக்கி உரத்த சத்தமாகக் கூப்பிடத் (calling out) தொடங்குங்கள். உங்கள் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் சுட்டெரித்து அழித்துப் போடுங்கள், அந்த பீர் பாட்டில்களை குளிர்சாதனப்பெட்டியை விட்டு வெளியே எடுத்து, அந்தச் சீட்டுக்கட்டுகளை தூர எறிந்து விடுங்கள். பிள்ளைகளை ஞாயிறு பள்ளிக்கு அழைத்துச் செல்லுங்கள், அடுத்து.... வெளியே ஓடிக்கொண்டிருப்பதற்கும் இங்குமங்கும் ஓடிக்கொண்டிருப்பதற்கும், நீங்கள் செய்யும் விதமாக இன்பத்தைத் தேடி அலைவதற்கும் பதிலாக ஜெபத்திலேயே தரித்திருங்கள். முழங்காலூன்றி ஜெபிக்கத் தொடங்குங்கள், அப்போது தேவன் ஒரு மழையை உங்களுக்கு அனுப்புவார். அது சரியே, ஆயத்தம் செய்தல். 60. வயதான எலியாவை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். ஓ, என்னே. உணர்ச்சிவசப்பட வேண்டாம். ஆமென் என்பதற்கு அப்படியே ஆகக்கடவது" என்று அர்த்தம். அது உங்களைப் புண்படுத்தாது. அது இதுவரையிலும் யாரையும் புண்படுத்தினதில்லை. கவனியுங்கள், நான் சற்று உணர்ச்சி வசப்பட்டு விட்டேன், ஒருக்கால், சில சமயம், ஆனால் எனக்குள்ளாக இருக்கும் ஏதோவொன்று என்னை உணர்ச்சி வசப்பட செய்கிறது. உங்களுக்கு அதில் விசுவாசம் உண்டா? நிச்சயமாக, உங்களுக்குள்ளேயிருக்கும் ஏதோவொன்று உணர்ச்சிவசப்பட செய்கிறது. ஒருமுறை நான்.... நான் இன்றிரவு இங்கே வெளியே சென்று, சந்திரன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். சந்திரனே, நீ எதைக்குறித்து பிரகாசித்துக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்பேன் என்றால், அந்தச் சந்திரன், "பிரகாசிப்பது நானல்ல. சூரியன் தான் என்மேல் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது'' என்று கூறும். அதுதான் அது. பரிசுத்த ஆவியின் வல்லமையானது உங்கள் மேல் விழக்கூடும் வண்ணமாக நீங்கள் போதுமான அளவு தேவனோடு நெருங்கி ஜீவிப்பீர்களானால், அது தேவனுடைய பிரசன்னத்தை பிரதிபலிக்கும். ஆமென். 61. அந்த மலையின் மேலே, நான் வேட்டைக்குப் போகும்போது, ஓ, நான் இயற்கையை நேசிக்கிறேன். நான் வழக்கமாக அங்கே வெளியிலிருக்கும் ஒரு பழைய நீரூற்றுக்கு செல்வதுண்டு. நான் எப்பொழுதும் கண்டதிலேயே அது மிக மகிழ்ச்சியாக நீரூற்றாக இருந்தது. அது எல்லா நேரமும் கொப்பளித்து, கொப்பளித்து, கொப்பளித்துக் கொண்டேயிருந்தது. நான் ஒருநாள் அதன் அருகில் உட்கார்ந்து, எது உன்னை மிகவும் சந்தோஷமடையச் செய்கிறது. அந்த அதிகமான ஆற்றலைக் கொண்டிருக்க நான் விரும்புகிறேன். நீ எல்லா நேரமும் துள்ளிக்குதித்துக்கொண்டும், கொப்பளித்துக்கொண்டும் இருக்கிறாய் என்றேன். நான்-நான், "மான்கள் உன்னிடத்தில் குடிக்கிற காரணத்தினாலா நீ சந்தோஷமாயிருக்கிறாய்?" என்று கேட்டேன். அது, “இல்லை ” என்று கூறியிருக்கும். நான், "கரடிகள் குடிக்கிறதின் நிமித்தமாகவா?” என்று கேட்டேன். "இல்லை.” "ஒருக்கால் நான் அங்கே குடிக்கிற காரணத்தினால் அது இருக்குமோ?” "இல்லை.” அதனால் பேச முடிந்து, நான், "எது உன்னை மிகவும் சந்தோஷமாக இருக்கச் செய்கிறது?" என்று கேட்டிருப்பேன் என்றால். 62. அது, "சகோதரன் பிரன்ஹாமே, கொப்பளித்துக் கொண்டு வருவது நானல்ல. எனக்குப் பின்னால் இருக்கும் ஏதோவொன்று என்னை உந்தித் தள்ளிக் கொண்டிருந்து, என்னைக் கொப்பளிக்கச் செய்கிறது" என்று கூறியிருக்கும். தேவனோடு சரியாயிருக்கும் ஒரு மனிதனோடும் அது அந்தவிதமாகத்தான் இருக்கிறது, அவனை உந்தித் தள்ளி, அவனைப் பொங்கிக் கொண்டிருக்கச் செய்வது, அவனுக்குப் பின்னாலிருக்கும் ஏதோவொன்றாக இருக்கிறது. அது அவனை சாட்சி கூறச் செய்கிறது. அது உங்களை அழச் செய்கிறது. அது உங்களை தேவனோடு சரிப்படுத்த வைக்கிறது. அது தேவனிடத்தில் உங்களை விசுவாசிக்க வைக்கிறது, ஏனென்றால் அதே காரணம்.... இன்றிரவு என்னால் அந்த ஒளிவிளக்கினிடத்தில், "நீ எதற்காக பிரகாசித்துக் கொண்டிருக்கிறாய்" என்று கேட்க முடிந்திருக்குமானால் என்னவாகியிருக்கும்? 63. அது என்னிடம் சொல்லியிருக்கும், அதுவால் பேச முடிந்திருக்குமானால், அது, "சகோதரன் பிரன்ஹாமே, பிரகாசித்துக் கொண்டிருப்பது நானல்ல, நான் வெறுமனே ஒரு கம்பியாகவும் ஒரு விளக்காகவும் தான் இங்கேயிருக்கிறேன். ஆனால் என்னைப் பிரகாசிக்கச் செய்ய என்னூடாக ஓடிக் கொண்டிருக்கிற ஏதேவொன்றாக அது இருக்கிறது" என்று கூறியிருக்கும். அதாவது தேவனுடைய ஆவியால் பிறந்த ஒவ்வொரு மனிதனும்: தேவன் காரியங்களைச் செய்கிறார் என்று விசுவாசிப்பதிலிருந்து விலகியிருக்க முடியாது, ஏனென்றால் அவன் தேவனுடைய வல்லமையைக் கொண்டிருக்கிறான், அதோ அங்கிருக்கிற ஒரு மகத்தான மின்னோட்டம் உண்டாக்கும் இயந்திரத்திலிருந்து, அந்த மனிதனுடைய மிகவும் உள்ளேயிருக்கிற ஜீவனுக்குள் அசைந்து கொண்டிருக்கிற ஒரு மின் ஆக்கியாக அது இருக்கிறது, தேவனுடைய மகிமைக்கான ஒரு சாட்சியில் அவன் வெளிப்புறமாக பிரகாசிக்க வேண்டியிருக்கிறது. ஆமென். நமக்கு என்ன தேவையாயிருக்கிறது என்றால், ஒரு பழைமை நாகரீகமான உடைக்கப்படுதல் தான் (breaking up). நமக்குத் தேவையாக இருப்பது என்னவென்றால் ஒரு சுத்தப்படுத்துதல்தான். நமக்கு என்ன அவசியமாயிருக்கிறது என்றால், பூசிமறைத்து வெள்ளையடிக்கும் ஒன்றல்ல, ஆனால் வெண்மையாக கழுவுதல் தான் அவசியமாயிருக்கிறது. நமக்கு அவசியமாயிருப்பது எதுவென்றால், இந்தக் காரியங்களை தூர எறிந்து விடுதல்தான்.... வேதாகமம், பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” என்று கூறுகிறது. 64. எலியா, "நீங்கள் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிற முதலாவது காரியம் என்னவென்றால், யார் தேவன் என்று நிரூபிக்கும்படி என்னுடைய பலிக்காக நீங்கள் ஆயத்தப்படும் போது, இங்கே சுற்றிலும் கொஞ்சம் மழையை நீங்கள் காண விரும்பினால், இப்பொழுது நீங்கள் செய்யும்படி நான் விரும்பும் முதலாவது காரியம் என்னவெனில், நீங்கள் போய், எனக்காக பன்னிரண்டு கற்களை எடுத்து வாருங்கள்” என்றான். பன்னிரண்டு கற்கள் பன்னிரண்டு கோத்திரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தின. நாம் எப்பொழுதாவது அமெரிக்காவில் ஒரு எழுப்புதலைக் கொண்டிருப்பதற்கான ஒரே வழி அதுதான். நாம் திரும்ப வேண்டிய விதமாக நாம் தேவனிடம் எப்பொழுதாவது திரும்பி வரும்படியான ஒரே வழி அதுதான். மெதோடிஸ்டுகள் பாப்டிஸ்டுகளை அடையாளம் கண்டு கொண்டாக வேண்டும். பாப்டிஸ்டுகள் பிரஸ்பிடேரியன்களை அடடையாளம் கண்டு கொள்ள வேண்டும், மற்றும் நாம் கிறிஸ்துவுக்குள் சகோதர சகோதரிகளாக ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டுகொண்டு, இவ்விதமாக நம்மை நாமே தனிமைப்படுத்தி பிரித்து வைத்துக்கொள்வதை விட்டுவிட வேண்டும், அப்பொழுது ஒரு பழைமை நாகரீகமான எழுப்புதலைக் கொண்டிருப்போம். ஆமென். 65. ஒரு பழைமை நாகரீகமாக, தேவனால் அனுப்பப்பட்ட, sky-blue, பாவத்தைக் கொல்லும் மார்க்கம் ஆம், ஐயா, சகோதரனே, அதுதான் நீங்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி உங்களை ஆக்கும். சபை...யில் ஒரு பழைமை நாகரீகமான சாட்சி கூட்டத்தை தொடங்குங்கள். நல்லது, இனிமேலும் உங்களால் ஒரு சாட்சி கூட்டத்தைக் குறித்து கேள்விப்படவே முடியாது, பல இடங்களுக்கு பிரயாணம் செய்கையில், சபையானது மிகவும் குளிர்ந்து போய், ஆவிக்குரிய உஷ்ணமானி பூஜ்யத்திற்குக் கீழே நாற்பதுக்குப் போகிறது. அங்கே உள்ளே யாருமே ஜெபிப்பது கிடையாது, நீங்கள் சபைக்குள் வரும்போது, அவர்கள் எல்லாருமே ஒருவர் மற்றவரோடு உரசல் ஏற்படுத்திக்கொண்டும், கிண்டலடித்துக் கொண்டும், ஆலயத் தூண்களுக்கு இடைப்பட்ட நடைபாதையில் மேலும் கீழும் நடந்து கொண்டும், மெல்லும் பிசினை மென்று கொண்டும், கழுவுதலைக் குறித்தும் (washing), இந்த மற்ற காரியத்தைக் குறித்தும் அதைக் குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆமென். 66. ஆகையால் தான் தேவனால் இருதயங்களை ஆளுகை செய்ய முடியவில்லை, காரணம் என்னவென்றால் மனிதர்கள் அவரை அனுமதிக்க மாட்டார்கள். உங்களுடைய ஜீவியம் முழுவதுமாக வேறு ஏதோவொன்றோடு முழுவதும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளது, அப்படிப்பட்ட ஜீவியத்தை தான் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். ஏதோவொரு வித ஸ்தாபனம் அல்லது, “நீங்கள் கட்டாயம் இதைச் செய்ய வேண்டும்.” "நல்லது, மெதோடிஸ்டுகள் அல்லது பாப்டிஸ்டில் ஒரு எழுப்புதலை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்." "ஆ, அது என்னுடைய சபை அல்ல. நான் அங்கே போக மாட்டேன்." நிச்சயமாக, நீங்கள் அந்தச் சபையின் ஒரு அங்கத்தினனாயிருக்கிறார்கள். தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்த ஒவ்வொரு மனிதனும் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினனாயிருக்கிறான். ஆமென். தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கிறிஸ்தவ சகோதரனைக் குறித்த அந்தவிதமான ஒரு - ஒரு -ஒரு நோக்கத்தைக் கொண்டிருக்கிறான். நீங்கள் சின்னஞ்சிறு காரியங்களில் வேறுபாடு கொண்டிருக்கலாம், ஆனால், அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது? நீங்கள், "நல்லது, மெதோடிஸ்டுகள் தெளிக்கிறார்கள், நாங்களோ ஞானஸ்நானம் கொடுக்கிறோம்” என்று கூறலாம். அதற்கு அதனோடு செய்வதற்கு எதுவுமில்லை. சகோதரனே, செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால், அது உன்னுடைய சகோதரன் என்று உனது இருதயத்தில் உன்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் இருந்தால், தேவனோடு சரிப்படுத்திக்கொள்ள தேவனுடைய பலிபீடத்திற்கு ஒரு சிறு பிரயாணம் செய்வது உனக்கு அவசியமாயிருக்கிறது. "நல்லது, அவர்கள் திறந்த வாசலின் சபையில் இருக்கிறார்கள், நான் பாப்டிஸ்டு சபையைச் சேர்ந்தவன். மழைக்காக ஜெபிக்கும்படி நான் அங்கே போகத் தேவையில்லை." ஓ, சகோதரனே, அதைச் செய்யாதே. நீ அவ்வாறு செய்வாயானால், நீ ஒருபோதும் மழையைப் பெற்றுக்கொள்ள மாட்டாய். நீ மறுபடியுமாக வானங்களை அடைப்பாய். ஆம், ஐயா. 67. எலியா, "இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற பன்னிரண்டு கற்களை எனக்காக கொண்டு வாருங்கள்' என்றான். அவன் அவர்களை ஒன்றாக ஏற்றிவைத்து, ஒன்றின் மேல் ஒன்றாக அவைகளை உருட்டி வைத்தான், அந்தக் கற்கள் ஒன்றாக வந்த போது, அந்தக் கோத்திரங்கள் ஒன்றாக வருவதைப் பிரதிநிதித்துவப்படுத்தினது. அதன்பிறகு அந்த பலியாகிய காளையானது அந்தக் கற்களின் மேல் வைக்கப்பட்டது. அது இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது அவருடைய பிள்ளைகள் எல்லாரையும் மூடிக்கொள்வதாகும். அதன்பிறகு அவன், இப்பொழுது, அது பொய்யல்லவென்றோ அல்லது அதைக் குறித்து எதுவாகவுமாக இருப்பதாக நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டியது" என்றான். தேவன் செய்கிற ஒவ்வொன்றும் உள்ளேயும் பலகைக்கு மேலேயும் இருக்கிறது. அவன், இப்பொழுது, ஏழு குடம் (seven barrels) தண்ணீ ர் எனக்குக் கொண்டு வாருங்கள்" என்றான். அவர்கள் அந்த பலிகளின் மேல் குடங்கள் தண்ணீரை ஊற்றினார்கள், அவர்கள் ஒரு வாய்க்காலை உண்டாக்கி, தண்ணீரானது அவ்விதமாக சுற்றிலும் எல்லாவிடங்களிலும் ஓடினது. "நீங்கள் பாருங்கள், அதைச் சுற்றிலும் எந்த அக்கினியும் இல்லை . அது முற்றிலுமாக உண்மையாக இருக்கிறது" என்றான். சபைகள் ஒன்றாக இருந்து, பலியானது இரத்தம் வழிய வைக்கப்பட்டிருந்தது, இப்பொழுது எலியா நடந்து வந்து, "தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய கட்டளையின்படியே நான் இவை எல்லாவற்றையும் செய்திருக்கிறேன். நீரே தேவன் என்றும் நான் உம்முடைய தீர்க்கதரிசி என்றும் இன்று அறியப்படட்டும்" என்றான். ஏறக்குறைய அந்த நேரத்தில், தேவனுடைய அக்கினி விழுந்து, பலியையும் சுற்றிலுமிருந்த தண்ணீர் யாவற்றையும் நக்கிப்போடத் தொடங்கியது; அந்த பலியை மேலே எடுத்து, அவனுடைய பிரயாசங்களைப் பெற்றுக் கொண்டார். அப்போது தேவனுக்கு விரோதமாய் அங்கேயிருந்த ஆசாரியர்கள் எல்லாரையும் எலியா கொன்று போட்டான்; அதன்பிறகு அவன் அங்கே இறங்கிச் சென்று, அந்த மலையின் பக்கவாட்டுக்கு அருகில் அமர்ந்து கொண்டு, "இப்பொழுதும், கர்த்தாவே, நீர் சொன்ன இவை எல்லாவற்றையும் நான் செய்திருக்கிறேன். ஜனங்கள் எங்களை ஏற்றுக்கொண்டு விட்டார்கள், அவர்கள் எல்லாரும் ஒரே இசைவுடன், "தேவனே தேவன். தேவனே தேவன்” என்று உரத்த சத்தமிட்டார்கள்” என்றான். 68. அதன்பிறகு ஜனங்கள் ஒரே இசைவுடன் அழத் தொடங்கினார்கள். அப்போது எலியா அங்கே கீழே இறங்கிச் சென்று, "இப்பொழுது, கர்த்தாவே, நோக்கிப் பாரும், உமது ஜனங்கள் எல்லாரும் ஒரே இசைவோடு இருக்கிறார்கள். புல்லின் சிறு கிளையாவது வளர்ந்து மூன்று வருடமும் ஆறு மாதங்களும் ஆகிறது, அல்லது எதுவுமேயில்லை. எல்லாமே மரித்துப் போய் விட்டது, ஜனங்கள் ஏறக்குறைய அழிந்து போக இருக்கிறார்கள். எல்லா தண்ணீரும் தீர்ந்து போய் விட்டது, கையிருப்பில் வெறுமனே ஒரு சில கழுதைகளும் மற்றவைகளும் தான் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. இது எப்படிப்பட்ட ஒரு நேரமாக இருக்கிறது என்பதை நோக்கிப் பாரும், இப்பொழுது அவர்கள் மனந்திரும்பியிருக்கிறார்கள், அவர்கள் உமக்குப் பின்னே வந்து கொண்டிருக்கிறார்கள். ஓ தேவனாகிய கர்த்தாவே, மழையை அனுப்பும்” என்றான். அவன், "கேயாசியே, மேலே போய்ப் பார்” என்றான். அவன் நோக்கிப் பார்த்து, "வானம் வெண்கலத்தைப் போன்று இருக்கிறது” என்று கூறினான். 69. ஓ, சரியாக இப்பொழுதே, வெண்கலம் என்றால் என்ன அர்த்தம் என்ற அதற்குள் போக எனக்கு நேரம் இருக்க வேண்டுமென்று விரும்பினேன். வெண்கலம் என்பது "தெய்வீக நியாயத்தீர்ப்பைக்” குறித்தே பேசுகிறது. பலிபீடத்திலுள்ள தொட்டியில், அதில்தான் பலியானது செலுத்தப்பட்டது, அது ஒரு வெண்கல பலிபீடமாக இருந்தது, அங்கு ஆட்டுக்குட்டிகள் போடப்பட்டன, பலி, நியாயத்தீர்ப்பு, தெய்வீக நியாயத்தீர்ப்பு. அங்கே பின்னால் நோக்கிப் பாருங்கள்... மோசே, அவன் வனாந்தரத்தில் வெண்கல சர்ப்பத்தை உயர்த்தின போது, அந்தக் கம்பத்தின் மேலுள்ள கோலானது. அந்தக் கோலானது சிலுவையைப் பிரதிநிதித்துவப்படுத்தினது. சர்ப்பமானது தனக்குள்ளே, சர்ப்பமானது, "ஏதேன் தோட்டத்திலிருந்து பாவமானது ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டது" என்பதைப் பிரதிநிதித்துவப்படுத்தினது, மேலும் வெண்கலம் என்பது "தெய்வீக நியாயத்தீர்ப்பைப்” பிரதிநிதித்துவப்படுத்தினது. தெய்வீக நியாயத்தீர்ப்பு, கிறிஸ்து, அந்த .... என்ன... இது அவருடைய குமாரனை பிரதிநிதித்துவப்படுத்தும்படி தேவன் அனுமதித்தது வினோதமாக தோன்றுகிறது. ஆனால் ஒரு பாம்பு. பாம்பு என்பது பாவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது மற்றும் தெய்வீக நியாயத்தீர்ப்பின் மூலமாக நியாயந் தீர்க்கப்பட்ட பாவமானது கம்பத்தின் மேலுள்ள வெண்கல சர்ப்பமாக இருந்தது. ஆமென். நான் அதை நேசிக்கிறேன். 70. தேவன் நம்மை தம்மிடம் ஒப்புரவாக்கும்படி, அவர் தம்முடைய சொந்த குமாரனென்றும் பாராமல், ஆனால் பாவ மாம்சத்தின் சாயலில் உண்டாக்கப்பட்ட அவரை அனுப்பினார். தேவன் எப்படியாக தம்மைத்தாமே வெளிப்படுத்தி, காலங்களினூடாக மனிதனுடைய இருதயத்திற்குள் வர முயற்சித்துக் கொண்டிருந்தார். ஓ, ஒரு சாக்குப்போக்கும் இன்றி your left. அங்கே முற்காலத்தில் தேவன் எப்படியாக அந்த அக்கினிஸ்தம்பத்தில் இருந்து, மனிதனிடமிருந்து தூரத்திலிருந்து, ஆனால் கீழே நோக்கிப்பார்த்துக் கொண்டு இருந்து, மனிதனை நேசித்தார். அவர் இறங்கி வந்த அந்த மலையை எவராலும் தொட முடியவில்லை. புகையும் அக்கினியும் மின்னல்களும் எல்லா திசைகளிலும் பறந்தன, யாருமே அந்த மலையின் பக்கத்திலும் வர முடியவில்லை, ஒரு மிருகம் அதைத் தொட்டாலும் கூட, அது கட்டாயம் கொல்லப்பட்டு விடும். 71. கவனியுங்கள், தேவன் இஸ்ரவேல் புத்திரருக்கு தம்மைத்தாமே ஒரு அக்கினிஸ்தம்பத்தில் வெளிப்படுத்தின பிறகு, அந்த அதே தேவன் இயேசு கிறிஸ்து என்னும் ஒரு சரீரத்தில் தம்மைத்தாமே வெளிப்படுத்தினார். தேவன் நம்மோடு கூட இருந்து, இங்கே தம்மைத்தாமே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்பொழுது தொடப்படக் கூடாத ஏதோ ஓன்றிலிருந்து, ஒரு கன்னிப்பிறப்பு சரீரத்திற்கு தம்மைத்தாமே வெளிப்படுத்தினார், மரித்து தூர சென்று விட்டு மறுபடியுமாக திரும்பி வரும்படி ஒரு பலியாக இச்சரீரத்தைக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்திற்காக அவர் அவ்வாறு செய்தார். மேலும் இப்பொழுது தேவன் தம்மைத்தாமே அக்கினி ஸ்தம்பத்தில் ஒரு கன்னிப்பிறப்பு சரீரத்திற்குள் வெளிப்படுத்தினார், இப்பொழுதோ இந்த பலியின் இரத்தத்தின் மூலமாக மறுபிறப்பு அடைந்திருக்கிற பாவியான மனுஷர்களின் இருதயங்களுக்குள் வெளிப்படுத்தியிருக்கிறார். அது இன்னும் அதிகமாக இருக்கிறது.... என்னால் அதை விளக்கிக்கூற முடியவில்லை . 72. தேவன் எப்படியாக ஜனங்களை அவ்வண்ணமாக நேசிக்க முடிந்தது. இக்காரியங்கள் எல்லாமும் கொள்ளை நோய்களும் மற்றும் காரியங்களும் நமக்கு ஒரு - ஒரு எச்சரிக்கையை மாத்திரமே கொண்டு வருகிறது, அது நீங்கள் தேவனைச் சந்திக்க ஆயத்தப்படும்படியாக உங்களுக்கு ஒரு அன்பின் அடையாளத்தை மாத்திரமே கொண்டு வருகிறதாயிருக்கிறது. இப்பொழுது, நீங்கள் வீட்டிற்குப் போகும் போது, அங்கே பாளயத்தில் பாவம் இருக்குமானால், அதை அக்கினியால் சுட்டெரித்து அழித்து விட்டு, ஒரு எழுப்புதலுக்காக ஆயத்தப்படுங்கள். கோடிக்கணக்காக (billions), இலட்சக்கணக்கான (millions) டாலர்கள் மதிப்புள்ள பொருட்கள் அழிக்கப்பட்டிருக்கும் போது, இங்கே வந்து, காரியங்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச இங்கே பூமியின்மேல் ஒரு மழைக்காக மாத்திரம் ஜெபிக்க வேண்டாம். ஏன்? ஏன் அது இருக்கிறது? 73. இங்கே ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு முன்பு, எத்தனை ஆயிரம் கிராமப்புற சபைகள் ஆட்டுக் கொட்டகைகளாக மாற்றப்பட்டன என்பதை மறந்து விட்டேன். அந்த அதே வருடம், அது இரண்டு வருடங்களுக்கு முன்பாக, நான் அதைக் குறித்த புள்ளிவிவரங்களை வாசித்துக் கொண்டிருந்தேன், அந்த அதே வருடத்தில் அங்கே பதின்மூன்று மில்லியன் மத நம்பிக்கையற்ற நாஸ்திகர்கள் பொரிந்து வெளிவந்தார்கள் (hatched out). ஏன்? ஏன், மனிதர்களே, பெண்களே? ஏன் அது அனுமதிக்கப்படுகிறது? ஏனென்றால் பிசாசு இங்கே உள்ளே வந்து விட்டான், மேலும் அவன் நம்மெல்லார் மேலும் சவாரி செய்து கொண்டு, பெரிய காட்சிகளை மேற்கோள் காட்டி, அற்புதமான காரியங்களை வரைந்து கொண்டிருக்கிறான், அதோ அங்கிருக்கிற, கர்த்தருடைய வருகையை உங்களால் காண முடியாமல் போகும் அளவுக்கு உங்களை மிகவும் குருடர்களாக அவன் வைத்திருக்கிறான். 74. வாலிப ஜனங்களே, வயதான ஜனங்களே, நீங்கள் யாராயிருந்தாலும், ஆயத்தமாகுங்கள், தேவனைச் சந்திக்க ஆயத்தப்படுங்கள். உங்களை நீங்களே ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள், கடைசி நேரத்திற்காக ஆயத்தமாகுங்கள். நாம் பாதையின் முடிவில் இருக்கிறோம். இந்நாட்களில் ஒன்றில்.... இந்த உலகம் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டு அழிக்கப்படப் போகிறது என்பதை வேதாகமம் முன்னுரைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? கடைசி நாட்களில் மனுஷர் பூமிக்குள் போகும்படியாக துளைகளை தோண்டி தேவ கோபாக்கினையிலிருந்து தங்களைத் தாங்கள் மறைத்துக் கொள்ளும்படி முயற்சிக்கும் அளவுக்கு உஷ்ணமானது மிகவும் அதிகமாக இருக்கும் என்று வேதாகமம் கூறுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? கடைசி நாட்களில், பெரியோர்களுக்கும் சேனைத் தலைவர்களுக்கும் அதைப் போன்ற மற்றவர்களுக்கும் தோல் வெடிப்புகள் ஏற்பட்டு (break out), அவர்கள் தங்கள் மாம்சத்திலேயே அழுகி, கீழே பறக்கும் வானத்துப் பறவைகள் அவர்கள் சாகும் முன்பே அவர்களுடைய சரீரங்களைப் புசிக்கும் அளவுக்கு வியாதிகள் வரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்து என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள், அந்தக் காரியங்கள் எப்படியிருக்க முடியும்?” என்று கேட்கலாம். அது உங்களுக்கு பரம இரகசியமாய் இருக்கிறது. அவ்விதமே குதிரை இல்லாத வண்டியும் உங்களுக்கு ஒரு மர்மமாக இருந்தது. அவ்விதமே மின்சார விளக்குகளும் இருந்தன. அவ்விதமே ஆகாய விமானங்களும் மற்றவைகளும் ஒரு மர்மமாக இருந்தன. 75. மிஷனரிகள் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்குப் பிரயாணம் பண்ணி, தேசத்திற்குள் போய், அவர்களுக்குப் பின்னால் ஒரு தடயத்தையும் விட்டு வைக்காமல், ஆகாய விமானம் மூலமாக வருகிறான் என்று இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, தீர்க்கதரிசி பேசுகிற போது. 2500 வருடங்களுக்கு முன்பு, அப்படிப்பட்ட ஒரு காரியம் என்ற எண்ணம் அங்கே இருந்ததற்கு முன்பே. நாகூம், 4000 வருடங்களுக்கு முன்பு, இரதங்கள் வீதிகளில் கடகடவென்றோடி, அவைகளுடைய முகப்பு விளக்குகள் தீவட்டிகளைப் போல விளங்கி, மின்னலைப் போல பளிச்சிடும். யாராவது எப்பொழுதாகிலும் கிழக்கத்திய தேசங்களில் இருந்திருப்பார்களானால், அவர்களுடைய சிறு பழைய தெருக்கள் அங்கே அதனூடாக உள்ள அந்த - அந்த இருக்கை நடைப்பாதையைக் காட்டிலும் அதிக அகலம் கொண்டதாக இருக்காது, அங்கே தான் ஒரு குதிரை வீரன் போக முடிந்தது, அல்லது-அல்லது ஒரு வண்டியானது (carriage) போக முடிந்தது. அவனோ பெருவீதிகளைக் (broad ways) கண்டான், அவர்கள் - வண்டிகள் பெருவீதிகளில் கடகடவென்றோடும் என்று அவன் கூறினான். தேவனுடைய வல்லமையின் மூலமாக, அந்தத் தீர்க்கதரிசி, தேவனுடைய ஒரு கண்ணினூடாக நோக்கிப் பார்த்துக்கொண்டு அங்கே இருக்கும் என்று கூறினான், வேறு வார்த்தைகளில் சொன்னால், அங்கே தானியங்கி மோட்டார் வாகனம் இருக்கும், அங்கே ஆகாய விமானங்கள் இருக்கும் என்றும் கூறினான், மேலும் மனுஷர்கள் கடைசி நாட்களில் வருவார்கள், அங்கே அவர்கள் இவ்வாறு இருப்பார்கள், துணிகரமுள்ளவர்களாகவும், இறுமாப்புள்ளவர்களாகவும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், இணங்காதவர்-களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கம் இல்லாதவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்: இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.” அது வேதவாக்கியமாயுள்ளது. நண்பனே, நாம் கடைசி நேரத்தில் இருக்கிறோம். 76. கவனியுங்கள், நீங்களும் நானும் செய்வதை எலியாவைப் போன்று செய்வோம் என்று உங்களுக்குக் கூறுகிறேன். காரியங்களைச் சரிப்படுத்திக் கொள்வோம். தேவனிடம் திரும்புவோம். அதன் பிறகு எலியா தன்னுடைய தலையைத் தாழ்த்தி ஜெபம் பண்ணினான். அவன், "ஓ தேவனே, மழையை அனுப்பும்” என்றான். அவன் மேலேறிச் சென்றான். கேயாசி திரும்பி வந்து, அது வெண்கலத்தைப் போன்று காணப்படுகிறது” என்றான். அவன் ஏழாவது தடவையாக போகும் மட்டுமாக மறுபடியும் மறுபடியும் போனான். அவன் ஏழாம் முறை போன போது, அவன், "சமுத்திரத்திலிருந்து ஒரு மேகம் எழும்பி வரக் காண்கிறேன், அது ஒரு மனிதனுடைய உள்ளங்கை போன்று காணப்படுகிறது” என்றான். உடனே எலியா, "பெருமழையின் இரைச்சல் எனக்குக் கேட்கிறது. நீ போய் ஆகாப் தன் அரையைக் கட்டிக்கொண்டு யெஸ்ரயேலுக்கு போய் விடும்படி சொல்லு, ஏனென்றால் அங்கே ஒரு பெருமழை வருகிறது" என்றான். 77. அப்படியானால் அவிசுவாசம் என்ன செய்துள்ளது என்று பாருங்கள். இன்றைக்கு அவிசுவாசம், அதனுடைய 1953ம் ஆண்டு வடிவமானது (version), "உங்களால் அனுப்ப முடிந்ததெல்லாம் அவ்வளவு தான் என்றால், நல்லது, அப்படியே அதை திரும்ப எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறுகிறது. ஆனால் தேவனுடைய கரத்தின் முதலாவது அசைவை எலியா கண்ட போது, அவன், "பெருமழையின் இரைச்சலை நான் கேட்கிறேன்" என்றான். பாருங்கள், ஒரு மனிதனுடைய உள்ளங்கையைப் போன்று. இதோ பாருங்கள், இ-யே -சு. அது ஆகாயத்தில் நின்று கொண்டிருப்பதை அவன் கண்டபோது, எல்லாமே சரியாக இருந்ததை அவன் அறிந்துகொண்டான். அது சரியே. எல்லாமே சரியாக இருந்தன. இயேசு காட்சியில் வருவதை அவன் கண்டபோது. 78. சகோதரனே, இந்த வறட்சியை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கும், இந்தக் கொள்ளை நோயை முடிவுக்கு கொண்டுவரவும், இந்தத் தேசத்திற்கு என்ன தேவையாயிருக்கிறது என்றால்..... மருத்துவர்களுக்கு அவை என்னவென்று கூடத் தெரியாத போதே வியாதிகள் எதிர்பாராமல் திடீரென்று வெடித்துக் கிளம்புவதைப் பாருங்கள். இதோ பாருங்கள், நாம் மருந்துகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம்... இப்பொழுது நான்... நான் தெய்வீக சுகமளித்தலைப் பிரசங்கம் பண்ணுகிறேன், நான் மருந்துகளுக்கு எதிரானவன் அல்ல, நீங்கள் அதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். இல்லை, ஐயா. அவைகள் தேவனால் அளிக்கப்பட்டவை, ஆனால் இன்றோ அவைகள் ஒரு... ஆக ஆகிவிட்டன. அதை எப்படி அழைப்பது என்று எனக்கு - எனக்குத் தெரியவில்லை. இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, சாலையில் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தேன், அப்போது ஒரு பிரதிநிதியை வாகனத்தில் ஏற்றினேன், ஒரு பெட்ரோல் நிறைக்கும் இடத்தில் நாங்கள் ஒன்றாக பேசிக் கொண்டு இருந்தோம். மருத்துவ மோசடிகள் நாட்டில் மிக அதிகமாக ஆகிவிட்டன. அவைகள் உதவிபுரிவது போலவே அநேகம் பேரைக் கொல்லவும் செய்கின்றன. அவர்கள் பெனிசிலின் ஊசி போடுகிறார்கள், அது ஒரு மோசமான சளியை துரத்தியடிக்க உங்களுக்கு உதவி செய்து விட்டு, உங்களுடைய ஜீவனை எடுத்துப் போடும் வேறு ஏதோவொன்றையும் உருவாக்கி விடுகிறது. 79. இதோ நான் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தேன், ஜெபர்ஸன்வில்லிலுள்ள என்னுடைய நண்பராகிய மருத்துவர் அடேயர், அவர், "பில்லி, நான் உங்களுக்கு பென்சிலின் கொடுக்க விரும்பவில்லை. நான் உங்களுக்குக் கொஞ்சம் குளோரோமைசெடின் கொடுக்கிறேன்" என்றார். நான் அங்கே மேலே வியாதியஸ்தருக்காக ஜெபித்துக்கொண்டும் மற்றும் எல்லாவற்றையும் செய்து கொண்டும் இருந்தேன். மேலும் நான் சுற்றிலும் தும்மிக் கொண்டிருந்தேன்; மனைவி, "நல்லது, நீர் அந்த உஷ்ணமான சீதோஷ்ண நிலையிலிருந்து வெளியே வந்து, பெற்று.... கொஞ்சம் மருந்து எடுத்துக்கொள்ளும்” என்றாள். நான் அந்தக் காரியங்களை எடுத்துக்கொண்டேன் மேலும் நான்... அது எனக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. நான் சென்று அவைகளை உடைய வேறொரு பாட்டில் மருந்தைப் பெற்று, அவைகளை எடுத்துக்கொண்டேன், எனக்கு மிகவும் தலைசுற்றும்படியாக இருந்தது, என்னால் எழுந்து நிற்கவே முடியாதிருந்தது. நான் அழைத்தேன், நான், "டாக், அந்தக் காரியங்கள் என்னை தலைசுற்றும்படியாக ஆக்கிவிடுகிறது என்பது உங்களுக்குத் தெரியும்” என்றேன். அவர், "நீங்கள் எத்தனை எடுத்துக் கொண்டீர்கள்?” என்று கேட்டார். நான், இரண்டு பாட்டில் மருந்துகள்" என்றேன். 80. அவர், "இரக்கம், கருணை, அது உங்களைக் கொன்றுபோட போதுமானது. அவைகளை எடுத்துக்கொள்வதை நிறுத்தி விடுங்கள்" என்றார். ஒரு மோசமான சளியைக் குறித்து ஒரே ஒரு காரியம் மட்டுமே உண்டு, அதற்காக நீங்கள் மருந்து எடுத்துக்கொண்டால், அது உங்களுக்கு ஏழு நாட்கள் இருக்கும். நீங்கள் அதை தனியே விட்டு விடுவீர்களானால், நீங்கள் அதை ஒரு வாரத்திற்கு கொண்டிருப்பீர்கள். எனவே, அப்படியானால், நீங்களே உங்களை பொருத்திக்கொள்ளுங்கள். எனவே இப்பொழுது, அதுதான் அது. 81. ஆனால், சகோதரனே, நான் இதை உன்னிடம் கூறட்டும்.... கவனியுங்கள், அதன்பிறகு அங்கே மேலேயிருக்கும் மூடி வேதாகமக் கல்வி நிறுவனத்தில், நான் அங்கே மேலே, சிகாகோவில், ஒளிபரப்பில் இருந்தேன், மருத்துவ விஞ்ஞானமானது ... பேரிலான தங்களுடைய மதிப்பீட்டைக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, அவர்களுடைய ..... மருந்துகளைக் குறித்து. அவர்கள், "குளோரோமைசெடின் மருந்தை எடுக்க வேண்டாம், ஏனென்றால் அது ஒரு அரிய இரத்த நோயை உண்டாக்கி விடுகிறது, அங்கே அதற்கு எந்த மருந்தும் கிடையாது” என்று கூறினார்கள். ம்ம், நான் வியப்படைகிறேன்... இந்த நாட்களில் நீங்கள் இங்கே காணலாம்.... 82. மொத்த அமெரிக்காவே, நான் உன்னிடம் கூறட்டும். இதற்குச் செவிகொடு, உன்னைத்தான்! (சகோதரன் பிரன்ஹாம் மூன்று தடவைகள் தட்டுகிறார் - ஆசிரியர்.) கவனியுங்கள்! நான் அன்றொரு நாள் ஒரு மருத்துவ நாளேட்டில், இங்கே அதைக் கண்டிருக்கிறேன், அங்கே மருத்துவர்கள் குறிப்பிட்ட - குறிப்பிட்ட சிகரெட்டுகளை பரிந்துரைக்கிறார்கள் என்ற இந்தக் காரியங்களை இந்த சிகரெட்டு கம்பெனிகள் விளம்பரம் செய்த பிறகு, அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள் என்று கூறப்பட்டிருந்தது. எந்த உண்மையான மருத்துவரும் அதைப் போன்ற எதையும் பரிந்துரைக்கவே மாட்டார்கள். அது பிசாசின் தந்திரமேயன்றி உலகத்தில் வேறு எதுவும் இல்லை. இங்கேயுள்ள இதை, இந்த மாத ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையை நோக்கிப்பாருங்கள். அவர்கள் மிஷௌரியிலுள்ள செயின்ட் லூயிஸில் மருத்துவ ஆராய்ச்சியில், இங்கே ஏழு எலிகளை எடுத்துக்கொண்டு, அந்த ஏழு எலிகளையும் அங்கே உள்ளே வைத்திருந்து, ஒரு வருட காலமாக நாளுக்கு ஒரு சிகரெட்டு வீதம் அவைகளுக்குக் கொடுத்தார்கள், அந்த வருஷத்தின் முடிவில் எல்லா ஏழு எலிகளுமே புற்றுநோயைக் கொண்டிருந்தன. இப்பொழுது அவர்கள் உரிமை கோருகிறார்கள், எத்தனை என்று எனக்கு மறந்து விட்டது; 80,000 நோயாளிகளுடைய தொண்டை மற்றும் நுரையீரம் புற்றுநோய்க்கு புகைப்பிடித்தல் தான் காரணமாக இருக்கிறதாம். சிகரெட்டு நிறுவனம், தாங்கள் அதைச் செய்து விட்டதாக திருப்திபடுத்த ஒரு பெண்ணைப் பெற்றுக்கொள்ள முடிந்த உடனேயே அவர்கள் அறிந்து கொண்டார்கள். பெண்களுக்கு சிகரெட்டினால் புற்றுநோய் வருவதைக் காட்டிலும் அங்கே அதிகமான மனிதர்களுக்கு சிகரெட்டு புற்றுநோய் இருக்கிறது, ஏனென்றால் ஸ்திரீகளைக் காட்டிலும் மனிதர்கள் அதிக நேரம் புகைப்பிடிக்கிறார்களாம். 83. நான் இன்று ஒரு காரியத்தை உங்களிடம் கூறட்டும், சகோதரனே, அமெரிக்கா அந்த முட்டாள்தனத்தினால் சுமை ஏற்றப்பட்டிருக்கிறது. அவர்கள் எல்லாருமே செயல்முறைத் திட்டங்களையும், ரேடியோ நேரத்தையும், அதைப்போன்று அப்படிப்பட்ட விற்கப்பட்ட ஒவ்வொன்றையும் பெற்று இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் உலகத்தின் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். அது சரியே. ஏன், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷமானது அதனுடைய வல்லமையில் பிரசங்கிக்கப்பட்டாக வேண்டும்; மனிதர்களும் பெண்களும் மறுபடியும் பிறந்து அதைப் போன்ற அப்படிப்பட்ட பயனற்ற காரியங்களிலிருந்து தூர போய் விட்டு, தேவனுக்காக ஜீவியுங்கள். சகோதரனே. நான் உன்னிடம் ஒன்றைக் கூறட்டும், நீ, "இப்பொழுது, சகோதரன் பிரன்ஹாமே, நீர் ஒழுக்கத்தைப் பற்றி போதிக்கப் போகிறீர்” என்று கூறலாம். நீங்கள் அப்படியே பரிசுத்த ஆவியின் பழைமை நாகரீகமான ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது தேவன் உங்களுக்காக என்ன செய்வார் என்பதைக் கண்டு பிடித்துக் கொள்வீர்கள். 84. நீங்கள், "சகோதரன் பிரன்ஹாமே, நான் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ள புகைப்பிடிப்பதை விட்டு விட வேண்டியிருக்குமா?" என்று கேட்கலாம். கவனியுங்கள், வசந்த காலம் வரும்போது, நாம் இங்கே இந்த தேசத்தில் ஜீவிக்கிறோம், அங்கே நிறைய சிறு வயதான புதர்நில கருவாலி மரங்கள் உள்ளன. இங்கே சுற்றிலும் அது என்னவாக இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அது ஏறக்குறைய வருடம் முழுவதும் அதனுடைய இலைகளைப் பெற்று இருக்கிறது. அவைகள் சரியாக இப்பொழுதே பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கின்றன. அவைகள் அடுத்த வசந்த காலம் வரையில் பற்றிக்கொண்டிருக்கும். இப்பொழுது, வசந்த காலம் வரும்போது, நீங்கள் வெளியே போய், பழைய இலைகள் எல்லாவற்றையும் பறிக்க வேண்டியதில்லை. என்னே, புதிய ஜீவன் மேலே வரட்டும், அப்பொழுது பழைய இலையானது விழுந்து விடும். தேவன் உங்கள் இருதயத்தை பரிசுத்த ஆவியால் நிரப்பி, அந்த பயனற்ற காரியங்களுக்காக உங்களுக்கு அதற்கு மேலும் நேரமே இல்லாமல் போகும் வரைக்கும், அப்படியே இங்கே பலிபீடத்தில் முழங்கால்படி இட்டு, செவ்வாய்க்கிழமை தரித்திருங்கள். நீங்கள் அதற்கு எதிராக பிரசங்கிக்க வேண்டியிருக்காது அல்லது எதுவுமே செய்ய வேண்டியிருக்காது. அது தானே தன்னைக் குறித்து பொறுப்பு எடுத்துக் கொள்ளும். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.] "நான்... என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.” அவர், "என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார். நான், "சகோதரன் ரீட்ஹெட் என்ன விஷயம்?” என்று கேட்டேன். தன்னுடைய ஸ்தானத்தை உடைய ஒரு மனிதன். 85. அவர், "நான் உம்மிடம் வருகிறேன். கொஞ்ச காலத்திற்கு முன்பு, இந்தியாவிலிருந்து வந்த ஒரு இந்தியரின் அருகில் நின்று கொண்டிருந்தேன்” என்றார். அவர் இங்கே அமெரிக்காவில் கல்வி பயின்றிருந்தார். மேலும் நான், 'நீங்கள் ஏன் உங்கள் பழைய தீர்க்கதரிசியான முகம்மதுவை மறந்து, உயிர்த்தெழுந்த கர்த்தரை ஏற்றுக் கொள்ளக்கூடாது? என்று கேட்டேன்.” இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். அவன், "ஐயா, என்னுடைய மரித்துப் போன தீர்க்கதரிசி செய்வதைக் காட்டிலும் உங்களுடைய உயிர்த்தெழுந்த கர்த்தர் எனக்காக இனியும் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார். “ஏன்,” அவர், "எங்கள் உயிர்த்தெழுந்த கர்த்தர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார். அவர் எங்களுக்கு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் மற்றும் எல்லாவற்றையுமே தருகிறார்” என்று கூறினார். அவன், "இது சுத்தமாக மனோசாஸ்திரம் தான். எங்களிடமும் அதே காரியம் உண்டு. உங்களுடைய உயிர்த்தெழுந்த கர்த்தர் வாக்குப்பண்ணியுள்ளதை எங்கள் மரித்துப்போன தீர்க்கதரிசி ஒருபோதும் வாக்குப்பண்ணியிருக்கவில்லை” என்றான். 86. இப்பொழுது, முகம்மது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு மரித்தது முதற்கொண்டு, முகம்மதுவின் கல்லறையில் ஒரு வெள்ளைக் குதிரை நின்று கொண்டிருக்கிறது. அவர் மறுபடியும் உயிர்த்தெழுவார் என்பதாக அவன் உரிமை கோரினான். அவன், "உங்கள் ஆண்டவர் உயிர்த்தெழுந்து விட்டார். அவர் செய்த காரியங்களை நீங்களும் கூட செய்வீர்கள் என்றும் அதிலும் அதிகமானவைகளையும் செய்வீர்கள் என்பதாக அவர் வாக்குத்தத்தம் பண்ணி இருக்கிறார். எங்கள் முகம்மது உயிர்த்தெழட்டும், முழு உலகமும் அதை அறிந்து கொள்ளும். உங்களுடைய ஆண்டவர் உயிர்த்தெழுந்து 2000 வருடங்கள் ஆகிவிட்டது, ஜனங்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர்கள் அவருடைய பெயரை ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை” என்று கூறினான். 87. என்ன விஷயம்? நீங்கள் பரிசுத்த ஆவிக்குப் பதிலாக வேத சாஸ்திரத்தை மாற்றாக பெற்றிருக்கிறீர்கள். அது முற்றிலும் சரியே. நீங்கள் சபைக் கோட்பாட்டை எடுத்து, அந்த இடத்தில் எடுத்துக்கொண்டு விட்டீர்கள், சபையை வழிநடத்த பரிசுத்த ஆவியானவர் சபையில் வழியைக் கொண்டிருக்க வேண்டி இருக்கும் போது, சபைக் கோட்பாடுகள் சபையை ஆளுகை செய்ய அனுமதிக்கிறீர்கள். அது முற்றிலும் சரியே. தேவன் எப்பொழுதாகிலும் எதிலாவது திரும்பக் கூடும் முன்பே, தேவனுடைய செயல்முறைத் திட்டத்திற்கு நீங்கள் திரும்பி வர வேண்டியிருக்கும். அது உங்களுக்குள் தேவன் இருக்க வேண்டும் என்பதாகும். ஆமென். 88. அவர் அங்கேயே தோற்கடிக்கப்பட்டு, விஷயத்தையே மாற்றி விட்டதாக அவர் கூறினார். அவர் அங்கே அந்த அறையில் நின்று, "சகோதரன் பிரன்ஹாமே, நான் பெந்தெகோஸ்தேகாரர்களிடமும் மற்றும் எல்லாரிடமும் இருந்திருக்கிறேன்' என்றார்; ஆனால், "நான் உம்மிடம் ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன்: பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் உண்மை தானா?” என்றார். நான், "சகோதரன் ரீட்ஹெட் அவர்களே, தேவன் பரலோகத்தில் ஜீவிப்பது போன்று அது உண்மையாக இருக்கிறது” என்றேன். அவர், "அது... தானா?" என்றார். நான், அது உண்மையாக இருக்கிறது” என்றேன். அவர், "என்னால் அதைப் பெற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்டார். நான், 'ஆம், ஐயா, விருப்பமுள்ள எவனும், வரக்கடவன்' என்பதாக அது இருக்கிறது” என்றேன். அவர், "போதகர்கள் தவறாகவா இருந்திருக்கிறார்கள்” என்று கேட்டார். 89. நான், "நான் பயபக்தியுடனும், எனனுடைய இருதயத்தில் தேவனைக் குறித்துள்ள பயத்தோடும் இதைக் கூறுகிறேன். ஆம், ஐயா, அவர்கள் தவறாகத்தான் இருந்து வருகிறார்கள்” என்றேன். உங்களால் அதற்கு கல்விகற்றுக்கொடுக்க முடியாதிருந்த போதும், அவர்கள் அதற்குள் உங்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க முயற்சித்தார்கள். நீர் அதற்குள் பிறந்து இருக்கிறீர். ஆம், ஐயா, அதில் சேர்ந்து கொள்வதல்ல, நீர் அதற்குள் பிறக்கின்றீர்கள். நான் 44 வருடங்களுக்கு முன்பு பிரன்ஹாம் குடும்பத்தில் பிறந்த காரணத்தினால் ஒரு பிரன்ஹாமாக இருக்கிறேன். அவர்கள் அந்தக் குடும்பத்தில் சேர்ந்து கொள்ளும்படி ஒருபோதும் என்னிடம் கேட்டுக் கொள்ளவில்லை. நான் அதற்குள் பிறந்து விட்டேன். அந்த விதமாகத்தான் ஒரு எலியா மனிதன் தேவனுடைய இராஜ்யத்திற்குள் பிறக்கிறான், பரிசுத்த ஆவியின் ஞான ஸ்நானம் மூலமாக, அது அவனை தேவனுடைய இராஜ்யத்திற்குள் வைக்கிறது. அப்போது நீங்கள் இயேசு கிறிஸ்துவோடுகூட உடன் சுதந்தரராய் இருக்கிறீர்கள். ஆமென். நண்பர்களே, இன்றிரவு அதுதான் அவசியமாயிருக்கிறது. அது உண்மை என்று நீங்கள் அறிவீர்கள். ஆம், ஐயா. 90. அங்கேயே, டாக்டர் ரீட்ஹெட் அவர்கள் மேல் கரங்களை வைத்தேன், அவர் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் சரியாக இங்கே இந்த சபையிலே இருந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆம், ஐயா, டாக்டர் ரீட்ஹெட் அவர்கள், அவர் வெளியே சென்று, தொடங்கினார். இங்கே தெற்கத்திய மாகாணங்களில் நன்கு அறியப்பட்ட டான் வெல்ஸ் அவர்கள் அங்கே நடந்து சென்று, டென்னஸியிலுள்ள சாட்டனூகாவில் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் அங்கே மேலேயிருக்கும் என்னுடைய குகை அறையில் உட்கார்ந்து, "சகோதரன் பிரன்ஹாமே, அது உண்மை என்றும், அது தேவனிடமிருந்து தான் வருகிறது என்றும் நான் நம்புகிறேன்" என்றார். மேலும் இங்கே, லீயும் மற்றுமுள்ள அவர்களில் எல்லாரும் வந்து பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டனர். உலகம் முழுவதும் நூற்று நூற்றுக்கணக்கான மனிதர்களும் ஸ்திரீகளும்... இங்கே, அன்றொரு நாள், திரைப்பட ஸ்டுடியோக்கள் அங்கே மேலே இருந்து, அந்த இடத்தின் ஒரு புகைப்படத்தை எடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கையில், கென்டக்கியை விட்டு வந்து, கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த உங்கள் மிக முக்கியஸ்தர், என்னுடைய தலைவாயிலில் உட்கார்ந்திருந்தார். அவர், "சகோதரன் பிரன்ஹாமே, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் உண்மை தானா? சபை வேதசாஸ்திரத்தைக் குறித்து நான் சலிப்படைந்து விட்டேன். ஏதோ உண்மையான ஒன்று தான் எனக்குத் தேவை என்று கூறினார். 91. அது என்ன, சகோதரனே? மனிதர்களும் ஸ்திரீகளுமாகிய நாங்கள் பாதையின் முடிவில் வந்து, பசியாகவும் தாகமாகவும் இருந்து கொண்டிருக்கிறோம். தேவன் தமது ஆவியை ஊற்றிக் கொண்டிருக்கிறார், ஜனங்கள் அதைக் கண்டு, ஜீவனை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கிறார்கள். அதோ அங்கே மேலேயுள்ள கேரீத் மட்டுமாக வந்து கொண்டிருக்கிறார்கள், அங்கே அவர்களைப் போஷிக்க தேவன் காகங்களுக்குக் கட்டளை இட்டிருக்கிறார். அது சரியே. 92. பட்டணத்தைச் சுற்றியுள்ள இந்தச் சிறு பழமையான மிஷன் ஊழியங்கள், இந்த இடங்கள் ஒரு கூட்ட மத வெறியர்களாக கருதப்படுகிறது, சகோதரனே, கவனம் செலுத்து, சில சமயங்களில் அது உங்களுக்கு ஒரு சாப்பாட்டுச் சீட்டாக இருக்கலாம். அது முற்றிலும் சரியே. தேவனைத் தேடுங்கள். இப்பொழுது நீங்கள் இந்தக் கூட்டத்திற்கு வரும் போது... நான் வருந்துகிறேன், நான் உங்களை நீண்ட நேரமாக பிடித்துக் வைத்திருக்கிறேன். 93. ஆனால் நீங்கள் செவ்வாய்க்கிழமை இந்தக் கூட்டத்திற்கு வரும்போது, ஆயத்தமாக வாருங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நான் கூறுகிறேன், உங்களுடைய பழைய நீண்ட அங்கியை உடைய ஆசாரியர்கள் எல்லாரையும் அகற்றிவிடுங்கள். அவர்கள் சுற்றிலும் நின்று, "அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன. மனித இருதயத்தில் தேவனுடைய மகிமையைப் போன்ற அப்படிப்பட்ட எந்தவொரு காரியமும் கிடையாது. அவை எல்லாம் கற்பனை தான்” என்று கூறிக் கொண்டிருப்பார்கள். 94. நான் சரியாக இப்பொழுதே உங்களிடம் ஒரு காரியத்தைச் சொல்லட்டும், இயேசு கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்திருப்பாரென்றால், அவர் இன்றும் தமது சபையில் ஜீவித்துக் கொண்டிருக்கிறார், நாம் அவருடைய பிரதிநிதிகளாயிருக்கிறோம். இயேசு இங்கே இருப்பாரானால், கூட்டங்களில் கவனித்துப் பார்த்து, ஒருமுறை கூட்டங்களுக்கு வாருங்கள், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வரும்போது, அது இயேசு கிறிஸ்துவின் அதே ஜீவனை பிறப்பிக்காவிட்டால்: அதாவது சுகமளித்தல்; அறிந்து கொள்ளுதல்; முன்னுரைத்தல்; என்ன சம்பவிக்கும், என்ன சம்பவிக்காது என்பதைக் கூறுதல். அது உண்மை இல்லாமல் இருக்கிறதா என்று கவனியுங்கள். அது என்னவாக இருக்கிறது? இயேசு மரித்தவராயில்லை. அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார். அவர், இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் என்னைக் காணாது; ஆனால் நீங்களோ என்னைக் காண்பீர்கள்: நான் உங்களோடும், உங்களுக்குள்ளேயும் கூட உலகத்தின் முடிவு பரியந்தம் இருப்பேன்” என்றார். அவர் இன்றிரவும் இங்கேயிருக்கிறார். அது சரியே. 95. சாஸ்திரிகள், தாங்கள் அவரைப் பணிந்துகொள்ள செல்கையில், என்னால் அவர்களைக் காண முடிகிறது. அவர்கள் போக ஆயத்தப்பட்டுக் கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது. என்னால் அவர்களில் ஒருவன் கூறுவதைக் கேட்க முடிகிறது, ஓ, அவன், "நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் எந்த திசைகாட்டியையும் எடுக்கவில்லையே" என்றான், அவனுடைய மனைவியோ, "அந்தப் பள்ளத்தாக்கினூடாக நீங்கள் கடந்து போகக் போகிறீர்கள்? நீங்கள் எவ்வாறு அந்த மலைகளின் மேல் ஏறப் போகிறீர்கள்? அங்கே அவரைப் பணிந்து கொள்ளும்படி நீங்கள் எப்படி போகப் போகிறீர்கள்?” என்று கேட்டாள். 96. அதற்கு அவன், "மனைவியே, கவனி, மனிதனால் உண்டாக்கப்பட்ட உங்களுடைய எந்தப் பொருளும் எனக்குத் தேவையில்லை. தேவனால் அருளப்பட்ட வழியில் நான் போய்க் கொண்டிருக்கிறேன். அதோ அங்கே ஒரு நட்சத்திரம் தொங்கிக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன், அந்த நட்சத்திரம் தான் கிறிஸ்துவிடம் என்னை வழிநடத்தப் போகிறது. திசைகாட்டிகள் இனி தேவையில்லை. நான் அந்த நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருப்பான். அது அவனை சரியாக நேரமாக கிறிஸ்துவிடம் கொண்டு சென்றது. 97. மேலும் சகோதரனே, நீ இந்த சபையை ஏற்றுக்கொண்டு, இந்த சபையில் சேர்ந்து கொள்ளலாம், அந்த சபையில் சேர்ந்து கொள்ளலாம், சற்று நேரம் நீ மெதோடிஸ்டுகளிடம் போவாய். அவர்கள் அங்கே உனக்குப் பிடிக்காத ஏதோவொன்றைச் செய்வார்களானால், நீ உன்னுடைய பேப்பரை வெளியே எடுத்துக்கொண்டு சென்று, பாப்டிஸ்களிடம் போய், சேர்ந்து கொள்கிறாய். அங்கே அது உனக்குப் பிடிக்காவிட்டால், நல்லது, நீ இங்கே நசரீன்களிடம் வந்து, அவர்களைச் சேர்ந்து கொள்கிறாய். நீ பிரஸ்பிடேரியன்களிடம் திரும்பிச் சென்று, அவர்களைச் சேர்ந்து கொள்கிறாய், அல்லது கிறிஸ்டியன் சபையில் சேர்ந்து கொள்கிறாய். உன்னுடைய பேப்பர் கந்தலாகி போவது மட்டுமாக அதை நீ கொண்டு செல்கிறாய். நீ ஏன் அந்தக் காரியத்தை மறந்து, கிழித்தெறிந்து விட்டு, உன்னுடைய பெயரை பரலோகத்திலுள்ள ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் வைக்கக் கூடாது, அங்கிருந்து அது அகற்றப்பட முடியாது. அங்கே மெதோடிஸ்டு சகோதரனுடனும், பாப்டிஸ்டு சகோதரனோடும், பிரஸ்பிடேரியன் சகோதரனோடும், நீ ஐக்கியம் கொண்டு, இந்த ஐக்கிய கூட்டங்களில் ஒருமித்து வந்து, தேவனை ஆராதிக்கலாம், உன்னுடைய இருதயம் திறக்கப்பட்டு, எல்லா மனுஷருக்கும் ஒரு சகோதரனாக இரு. "சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக” என்று கூறு. அந்த மனிதன் தவறாயிருப்பான் என்றால் அவனைக் குற்றவாளி என்று தீர்க்காதே, எழுந்து நிற்கும்படியாக அவனுக்கு உதவி செய். 98. இந்தக் குடிகாரர்களையும் விபச்சாரிகளையும் நீங்கள் தெருவில் காணும்போது, உங்கள் வெறுப்புமிக்க விரலை நீட்டி, 'நான் அவர்களைக் காட்டிலும் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள். செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால், இப்பொழுது அவர்கள் எவ்வளவு கூடுமோ அவ்வளவு கீழான நிலைக்கு வந்திருக்கும் அந்த நபரை, அது எதுவாக இருந்தாலும், அவர்களைக் கரத்தால் பிடித்து, அவர்களைத் தூக்கி விட்டு, அவர்களை இரட்சிக்கக் கூடிய தேவ குமாரனாகிய கிறிஸ்து இயேசுவிடம் அவர்களைச் சுட்டிக்காட்டுங்கள். ஆனால், ஓ, "நான் சபைகளைச் சேர்ந்தவன், நாங்கள் எங்கள் சபைகளில் அதைப் போன்ற அப்படிப்பட்ட ஜனங்களைக் கொண்டிருக்க மாட்டோம்.” இப்பொழுது நாம் ஒரு எல்லைக்கோட்டை வரைந்திருக்கிறோம். நாம் ஒரு குறிப்பிட்ட வகை ஜனங்களை தான் நம்முடைய சபைகளுக்குள் வர அனுமதிக்கிறோம். அது சரியே. இன்று நமக்கு என்ன தேவையாயிருக்கிறது என்றால், நாடு முழுவதும் அந்தப் பழைமை நாகரீகமான, பரிசுத்த ஆவி எழுப்புதல் தான், அது நாம் எல்லாரையும் ஒருவரோடொருவர் கரங்களைக் குலுக்கி, ஒருவரை ஒருவர், "சகோதரனே சகோதரியே" என்று அழைக்கச் செய்கிறது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 99. நான் நம்புகிறேன்.... நான் -நான் ஒரு திறமை குறைந்த பிரசங்கி. ஒரு பொருளை எப்படி கொண்டு செல்வது என்பது எனக்கு - எனக்கு - எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு காரியம் எனக்குத் தெரியும், நான் தேவனை நேசிக்கிறேன். நான் அதை என்னுடைய முழு இருதயத்தோடும் அறிவேன். எனக்கு புதுப்பிறப்பு அருளும் அந்தப் பழைமை நாகரீகமான மார்க்கத்தை நான் அறிவேன், அது என்னை ஒரு - ஒரு சீர்கேடான வீட்டிலிருந்து வெளியே எடுத்துக்கொண்டு வந்தது, அது என்னை பாவ சாக்கடையை விட்டு வெளியே கொண்டு வந்து, என்னிலிருந்து ஒரு கிறிஸ்தவனை உண்டாக்கினது, அது என்னை இரட்சிக்குமானால் அது உங்களையும் இரட்சிக்கும். என்னுடைய சரீரத்திற்கு சுகமளித்தலைக் கொண்டு வரும் அது உங்களுடைய சரீரத்திற்கும் அதைக் கொண்டு வரும்; உலக காரியங்களிலிருந்து என்னுடைய முகத்தைத் திருப்பும்படி செய்து கிறிஸ்துவை நோக்கிப் பார்க்கும்படி செய்த அது. சகோதரனே, இன்றிரவு, என்னால் அதிலிருந்து விலகியிருக்க முடியாதிருந்தது, பாதையின் முடிவில் அவர் என்னைக் குற்றவாளியாகத் தீர்த்து, வில்லியம் பிரன்ஹாம், நீ நரகத்திற்குப் போ" என்று கூறுவாரானால். நான் நரக குழிகளுக்குள் இறங்கிப் போய் விடுவேன், அங்கே அன்பைப் போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியம் இருக்குமானால், நான் அங்கேயும் அவரை நேசிப்பேன். அது சரியே. என்னால் அதிலிருந்து விலகியிருக்க முடியாதிருந்தது. 100. இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, எனக்கு ஒரு சோதனை உண்டாயிருந்தது. அவைகள் எனக்கு விலையேறப்பெற்றதாக இருந்தது. நான் இந்த பிற்பகலில் அங்கே ஒரு வீட்டிலிருந்து ஒரு சிறு குழந்தையை கல்லறையில் அடக்கம் பண்ணினேன், அந்தச் சிறு குழந்தையானது பிறந்து, உடனடியாகவே மரித்துப் போய் விட்டது. சிறு தாயும் தகப்பனும், நான், "ஓ, அது அப்படியே ஒரு... அது என்ன? அது ஒரு - அது ஒரு சிறிய அடி. அது உங்களை தேவனிடம் நெருக்கமாக கொண்டு வரும்படியான ஏதோவொன்றாக இருக்கிறது" என்றேன். 101. என்னுடைய சிறிய மகள் மரித்துப்போன போது, அது எனக்கு நினைவிருக்கிறது, நான் அவளை என்னுடைய... அந்தத் தாயாரின் கரங்களின் மேல் கிடத்தி, அங்கே வெளியேயிருக்கும் கல்லறைத் தோட்டத்தில் அவர்களை அடக்கம் பண்ணினேன். என்னுடைய தகப்பனாரும் மரித்துப் போய் விட்டார். உடனடியாகவே என்னுடைய சகோதரனும் கொல்லப்பட்டான். அந்த எல்லா காரியங்களுமே ஒரே நேரத்தில் நடந்து விட்டன. ஒருநாள் நான் அங்கே மேலே சாலையில் போய்க் கொண்டிருந்தேன், அப்போது ஒரு ஜோடி காலணிகளை அணிந்திருந்தேன், அது சரியாக வெள்ளப்பெருக்கு வந்த பிறகு நடந்தது, நான் நடந்து சென்று கொண்டிருந்தேன், கண்ணீர் என்னுடைய கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது. அதனால் என்னால் நின்று சாலையில் நடந்து போவதும் கஷ்டமாயிருந்தது. அங்கே ஜெபர்ஸன்வில்லைச் சேர்ந்த திரு. இஸ்லர், அவர் - அவர் அங்கே அரசாங்க உத்தரவுப்படி, வேறு ஏதோவொன்றாக இருக்கிறார், நான்... மேல் சட்ட சபை (Senate) என்று நம்புகிறேன். எப்படியும், அவர் மேலே அந்த நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்தார். அப்போது அவர் என்னைக் கண்டு தம்முடைய காரை நிறுத்தினார். அவர் எப்போதாவது சபைக்கு வருகிறார், என்னுடைய சிறு சபைக்கு. அவர் தம்முடைய கரத்தை என்னைச் சுற்றிலும் போட்டுக்கொண்டு, "பில்லி, நான் உம்மிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்” என்றார். நான், "சரி, சகோதரன் இஸ்லர். அது என்ன?” என்றேன். 102. அவர், 'உமது தகப்பனார் உம்முடைய கரங்களிலேயே மரித்துப்போனார். உம்முடைய சகோதரன் நீர் அங்கே போய்ச் சேரக்கூடும் முன்பே மரித்து விட்டார். நீர் உம்முடைய மனைவி... இறந்த போது, அவளுடைய கரத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டே. அவளுக்கு பிரியாவிடை கொடுத்து, அவளை முத்தம் செய்து, நீர் அவளை அந்த வாசலில் சந்திப்பதாக கூறியிருக்கிறீர். மறுபக்கம் திரும்பி, அங்கே உள்ளே நடந்து சென்ற போது, தேவன் உமது குழந்தையை சரியாக உம்முடைய கரங்களிலிருந்தே எடுத்துக்கொண்டார், நீர் அங்கே நின்று கொண்டு அதற்காக ஜெபித்துக் கொண்டிருந்தீர். அவர் இன்று உமக்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளவராயிருக்கிறார்?” என்றார். நான், அவர் எனக்கு ஜீவனைக் காட்டிலும் மேலானவராக இருக்கிறார்” என்றேன். “இன்னும் நீர் அவரை நேசிக்கிறீரா?” என்று கேட்டார். நான், "சகோதரன் இஸ்லர் அவர்களே, நான் அவரை மறுதலிக்கக் கூடும் முன்பு நான் -நான் என்னைத்தானே மறுதலிக்க முடியும்” என்றேன். ஏன்? 103. நான், "ஒரு இரவில் அதோ அங்கே கீழேயிருந்த ஒரு சிறிய பழைய நிலக்கரி கொட்டாரத்தில், ஒரு பாவியான பையனாக, நான் ஒரு புல் கோணிப்பையின் மேல் முழங்கால்படியிட்டு, ஜெபித்துக் கொண்டிருந்தேன். இங்கே ஏதோவொன்று சம்பவித்திருக்கிறது. ஒரு புது சிருஷ்டி பிறந்து விட்டது. வில்லியம் பிரன்ஹாம் மரித்து கிறிஸ்து இயேசு உள்ளே வந்து விட்டார். அப்போது முதற்கொண்டு நான் அவரை நேசிக்கிறேன், திரு. இஸ்லர் அவர்களே” என்றேன். முழு உலகமும் என்னைப் புறக்கணித்து தள்ளிவிட்டாலும், நான் இன்னும் அவரை நேசிக்கிறேன். அவர் என்னை குற்றவாளியென்று தீர்த்தாலும், நான் இன்னும் அவரை நேசிக்கிறேன். 104. ஓ, தேவனுடைய அன்பு எவ்வளவு ஐசுவரியமுள்ளது, எவ்வளவு தூய்மையானது. ஒவ்வொரு நாளும் எனக்கு வயதாகிக் கொண்டே போகிறது என்பது எனக்குத் தெரியும், நான் பாதையின் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. என்னுடைய கடைசி செய்தியானது இந்நாட்களில் ஒன்றில் பிரசங்கிக்கப்படும் என்பதை நான் அறிவேன்; நான் என்னுடைய கடைசி நோயாளிக்கு ஜெபிப்பேன்; கொஞ்ச காலத்திற்கு முன்பு, ஒரு சபையைக் குறித்தோ அல்லது அதைப்போன்று வேறு ஏதோ ஓன்றைக் குறித்தோ அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள், நான், ஒரு மகத்தான சபையைக் கொண்டிருப்பதை நான் நேசிக்கிறேன். ஆனால் அங்கே ஒவ்வொரு மூலையிலும் பெரிய சபைகள் இருக்கும் போது, அதோ அங்கே ஆப்பிரிக்காவிலும், சுவிசேஷத்தை ஒரு முறையாகிலும் ஒரு போதும் கேட்டிராத இந்தியாவிலும் நீட்டப்படும் அந்தச் சிறு கருப்பு கரங்களை காணும்படி என்னால் எப்படி நிற்க முடியும்” என்றேன். ஓ, அது நியாயமானதாக இல்லை . 105. இந்நாட்களில் ஒன்றில், நான் பாதையின் முடிவுக்கு வரும்போது, நான் செய்து முடித்து விட்டேன், நீண்ட காலத்திற்கு முன்பே நான் கர்த்தரோடு அதை சரி செய்து விட்டேன். நான், "கர்த்தாவே, அந்தக் காலையில் நான் அங்கே வரும்போது, எந்தத் தொல்லையும் எனக்கு வேண்டாம். என்னுடைய ஜீவியத்தில் ஏதாவது தவறு இருக்குமானால், இப்பொழுதே நான் அதைச் சரி செய்யட்டும், நான் நதியண்டை வரும்போது? அதற்கு நேரமிருக்காது. எனக்கு அங்கே எந்தத் தொல்லையும் நேரிட எனக்கு விருப்பமில்லை" என்றேன். நான் பிரயாணம் பண்ணின போது, பெரும் எண்ணிக்கையிலுள்ள முட்கள் நிறைந்த செடிகளால் சிக்கலாகிப் போன அநேகம் எனக்கிருந்தது. நான் வெட்டப்பட்டிருக்கிறேன், இடித்து நசுக்கப்பட்டிருக்கிறேன், பறிக்கப்பட்டிருக்கிறேன், இகழப்பட்டேன், நகைக்கப்பட்டேன் மற்றும் எல்லா காரியமும் எனக்கு நேரிட்டது, ஆனால் நான் என்னுடைய கண்களை ஜனங்களை விட்டு விலக்கிக் வைத்திருக்கிறேன். என்னுடைய கண்கள் கிறிஸ்துவின் மேல் தான் இருக்கிறது. "கிறிஸ்து என்னும் திடமான பாறையின் மேல் நிற்கிறேன், மற்றெல்லா நிலங்களும் அமிழ்ந்து போகும் மணலே." 106. இந்நாட்களில் ஒன்றில், நான் அதோ அங்கே போகையில், ஒரு வயதானவனாக இருக்கும்படி நான் ஜீவிப்பேன் என்றால், மீதியாயிருக்கும் இந்தக் கொஞ்ச தலைமுடிகள் அநேகமாக கீழே தொங்கிக் கொண்டும், நரைத்துக் கொண்டும் வரும். பெரும்பாலான எல்லா பிரன்ஹாம்களுமே, அவர்களுக்கு வயதான போது, முடக்கு வாதம் கொண்டிருந்தார்கள், பயங்கரமாக நடுக்கம் உடையவர்களாய் இருந்தார்கள். ஒருக்கால், இந்தக் காலைகளில் ஒன்றில், அதோ அங்கேயுள்ள நதிக்கு அருகில் நின்று கொண்டிருப்பேன் என்றும், இந்த நரைத்த தலைமுடிகள் சுற்றிலும் தொங்கிக் கொண்டிருக்க, எனது கரங்களில் இந்தப் பழைய வேதாகமம் இருக்க நடுங்கிக் கொண்டும், நான் என்னுடைய கைத்தடியின் மேல் சாய்ந்து நின்று கொண்டிருப்பேன் என்றும் நினைக்கிறேன். மருத்துவர் அறையை விட்டு வெளியேறி, "அவர் போய் விட்டார், அவர்... அவருக்காக செய்வதற்கு எதுவுமில்லை. பாதையின் முடிவு வந்து விட்டது" என்று கூறுவார் என்று நான் அறிவேன். அதோ அங்கேயிருக்கும் கரைக்கு எதிராக அலைகள் மோதி அடிக்க கரையில் அலைகள் புரளுவதை (breakers) கேட்கும்படி அங்கே நின்று கொண்டிருக்கும் போது, நான் ஒரு பாதையில் திரும்பிப் பார்ப்பேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காக, அது ஒவ்வொரு முட்புதர் நிலத்தினூடாகவும் சித்திரம் செதுக்குவதை நான் காண விரும்புகிறேன். என்னுடைய நாட்கள் முடிவடைவதை நான் அறிந்து, என்னுடைய நேரம் வருவதை நான் அறிந்து கொள்ளும் போது, நான் என்னுடைய தலைச்சீராவை எடுத்து, அதை இவ்விதமாக கீழே கரையில் வைத்து விட்டு, அங்கே முழங்கால்படியிட்டு, அந்தப் பழைய பட்டயத்தை எடுத்துக்கொண்டு, நித்தியத்தின் உறையில் அதை சொருகிக் கொள்வேன் (stick it back). பிறகு என்னுடைய பலவீனமான கரங்களை தேவனை நோக்கி உயர்த்தி, "தேவனே, எப்படி செய்வதென்று எனக்குத் தெரிந்த சிறந்த முறையில் நான் செய்திருக்கிறேன். எப்படி செய்வதென்று நான் அறிந்து கொண்ட எல்லாவற்றையும் செய்திருக்கிறேன், பிதாவே, ஜீவியப் படகை தள்ளிவிடும் (shove out), நான் வீட்டிற்கு வர விரும்புகிறேன்" என்று கூறுவேன். 107. என்னைச் சந்திக்க அவர் அங்கேயிருப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் என்னைச் சந்திக்கும்படியாக அங்கேயிருப்பார் என்று விசுவாசிக்கிறேன். அந்த வேளையில், அவர் என்னை ஏமாற்றம் அடையச் செய்ய மாட்டார். அது சரியே, அவர் அங்கே நிற்பார் என்று விசுவாசிக்கிறேன். அந்த அடிப்படையின் பேரில் அவரை விசுவாசிக்கும் ஒவ்வொரு மனிதரோடும் ஸ்திரீயோடும் இங்கே இன்றிரவு அவர் நிற்பார் என்று விசுவாசிக்கிறேன். நீங்கள் அவரை அந்தவிதமாக விசுவாசிக்காமல் இருந்தால், இன்றிரவு அவரை விசுவாசியுங்கள். நீங்கள் அவ்வாறு விசுவாசிக்க மாட்டீர்களா? இப்பொழுது, அவரை உங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவு முதற்கொண்டு, உங்கள் இருதயத்தின் நோக்கமானது, நீங்கள் தேவனை சேவிக்கப் போவதாக இருக்கிறது. அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன. ஆழமாகவும் உத்தமத்தோடும் விசுவாசிக்கும் மார்க்கம்...” என்று கூறிக்கொள்ளும் எல்லா பழைய விசனகரமான காரியங்களையும் கிழித்தெறிந்து விடுங்கள். எலியா செய்ததைப் போன்று அந்தக் காரியங்களை அழித்துப் போட்டு விட்டு, வந்து பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் பதிலளிக்கும் ஒரு தேவனைத் தொழுது கொள்ளுங்கள். ஆமென். நாம் சற்று நேரம் நம்முடைய தலையைத் தாழ்த்துகையில், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆர்கன் இசைக்கருவியை இசைக்கும் சகோதரியே, உங்களுக்கு விருப்பமானால், சற்று நேரம், ஆர்கன் இசைக்கருவியிடம் செல்லுங்கள். உங்களுக்கு விருப்பமானால், சற்று நேரம் உங்கள் தலைகளைத் தாழ்த்துங்கள். 108. ஓ, பிதாவே, அன்பே, அவ்வளவு பிரம்மாண்டமான ஒரு நாளில் நாங்கள் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம், அதுவே எல்லா காலங்களிலும் மிகவும் மகத்தான நேரமாக இருக்கிறது. எங்களுடைய நாளைக் காண தீர்க்கதரிசிகள் எவ்வளவாய் ஏங்கியிருக்கிறார்கள், இயேசுவின் வருகை அறிவிக்கப்படுதல். உமது இரத்தத்தினால் கிரயத்தால் கொள்ளப்பட்ட சாவுக்குரிய மனிதர்களும் பெண்களும் இன்றிரவு இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் இப்பொழுது, அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும்படியாக இங்கே எங்களிடம் ஒப்புவித்திருக்கிறார்கள். பிதாவே, இந்தச் சில தொடர்ச்சி இல்லாத வார்த்தைகளை பெற்றுக்கொண்டு, ஏதோவொரு விதத்தில் அவைகளை ஒன்றாக சீர்படுத்தி, நீர் இல்லாமலும், நம்பிக்கை இன்றியும் இன்றிரவு இங்கேயிருக்கும் ஏதோவொரு இருதயத்திற்குள் அவைகளை வையும். வருடக்கணக்காக ஒரு கிறிஸ்தவனாக பாவனை செய்து இருக்கலாம், ஆனால் ஒருபோதும் மறுபடியும் பிறவாது இருந்திருக்கலாம், அதற்கு என்ன அர்த்தம் என்பதை அறியாமல் இருக்கலாம். தேவனே, இங்கே அந்த நபர் இருந்தால், சரியாக இப்பொழுதே நீர் பேச மாட்டீரா? ஒரு அன்புள்ள பிதா, அதோ அங்கிருக்கிற தண்ணீருக்கு மறு பக்கத்தில் காத்துக் கொண்டிருக்கிறார், நீட்டப்பட்ட கரங்களோடு, கீழ்ப்படியாதவர்களை அழைத்துக் கொண்டிருக்கிறார். பிதாவே, இதை சரியாக இப்பொழுதே அருளுவீரா? நாங்கள் இதை அவருடைய நாமத்தில் கேட்கிறோம். 109. நீங்கள் உங்கள் தலையை வணங்கியிருக்கையில், இங்கே உள்ளேயிருக்கும் ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ உங்கள் கரத்தை மேலே உயர்த்தி... என்று கூறுவார்களா என்று வியப்படைகிறேன். யாருமே பார்க்கவில்லை, இப்பொழுது, கர்த்தரும் நானும் பார்க்கட்டும். நீங்கள் உங்கள் கரத்தை மேலே உயர்த்தி, "சகோதரன் பிரன்ஹாமே, நான்..... நான் சரியாக இப்பொழுதே உத்தமமாக இருக்கிறேன், என்னுடைய இருதயம் தேவனுக்கு முன்பாக அவ்வாறு இருக்கிறது. நான் - நான் உண்மையாகவே, நான் அதைச் செய்ய வேண்டியிருந்தது என்பதை நான் அறிந்திருந்தால், இனிமேல் நான் திரும்பி வராதிருந்தேன், இதுவே என்னுடைய கடைசி இரவாக இருக்கிறது, நான் -நான் உண்மையிலேயே, நான் மனந்திரும்ப நிறையவற்றைக் கொண்டிருந்திருக்கிறேன், மற்றும் என்னுடைய ஜீவியம் இப்பொழுது எப்படியிருக்கிறதோ அதைக்காட்டிலும் அதை வித்தியாசமாகச் செய்ய நான் -நான் விரும்புகிறேன்" என்று கூறுவீர்களா. நீங்கள் அப்படியே உங்கள் கரத்தை மேலே உயர்த்தி, சகோதரன் பிரன்ஹாமே, தேவன் கேட்டிருக்கிற நிபந்தனைகளை நான் சந்திக்கும்படியாக, நீங்கள் எனக்காக ஜெபிப்பீர்களா?" என்று கூறுங்கள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக மற்றும் உன்னையும் உன்னையும். ஓ, அது சரியே, அப்படியே, அது சரியே, கட்டிடம் முழுவதும், எல்லா இடங்களிலும் கரங்கள் மேலே உயர்த்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, தேவன் உன்னை, உன்னை, உன்னை, உன்னை ஆசீர்வதிப்பாராக, ஒரே பகுதியில் பன்னிரண்டு அல்லது இன்னும் அதிகமான கரங்கள். 110. சரி, என்னுடைய இடது பாகத்தில், அங்கே இடது புறத்தில் இந்த வழியில் ஏதாவது இருக்கிறதா? உங்கள் கரத்தை மேலே உயர்த்துங்கள். கர்த்தரும் நானும் தவிர வேறு யாருமே பார்க்கவில்லை, தயவுசெய்து. உங்கள் கரத்தை மேலே உயர்த்தி, சகோதரன் பிரன்ஹாமே, ஒருக்கால் இந்தக் காரியங்கள் இரகசியமாக இருக்கலாம்” என்று கூறுங்கள். நீங்கள் அப்படியே விரும்புகிறீர்கள், நீங்கள், ஒருக்கால் நீங்கள் நீண்ட காலமாக சபையைச் சேர்ந்திருக்கலாம், ஆனால் நீங்கள் விரும்புகிறீர்கள், நீங்கள் உண்மையாகவே தேவனோடு நெருங்கி நடக்க விரும்புகிறீர்கள். நீங்கள், "சகோதரன் பிரன்ஹாமே, நான் எப்படியிருக்க வேண்டுமென்று இயேசு விரும்புகிறாரோ அவ்விதமே உண்மையில் இருக்க விரும்புகிறேன், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் அதனுடைய வல்லமையில், மேலும் அவருக்காக வெளிச்சத்தைப் பிரகாசிக்கும்படியாக நான் விரும்புகிறேன். நான் எனது கரத்தை மேலே உயர்த்திக் கொண்டிருக்கிறேன், எனவே தேவன் அதைக் காண்பார், மேலும் நீங்கள் எனக்காக ஜெபிக்க வேண்டுமென்று நான் - நான் விரும்புகிறேன் என்று கூறுங்கள். உள்ளே, என்னுடைய இடது புறத்தில் இருப்பவர்களே, நீங்கள் அதைச் செய்வீர்களா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, அது சரியே. கீழே வரிசையிலுள்ள எல்லாரும். தொடக்கத்தில் இருந்தே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமாம், அப்படியே, அவர்களுடைய டஜன் கணக்கான கரங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 111. நம்முடைய தலைகள் வணங்கியிருக்கையில், ஓ தேவனே, உமது வருகை தாமதிக்குமானால், ஏதோவொரு நாளில், ஒருவர் பின் ஒருவராக, தங்கள் கரங்களை மேலே உயர்த்தின் இந்த ஜனங்கள் ஒவ்வொருவரும் போய் விடுவார்கள், ஒருவர்பின் ஒருவராக, ஒரு பிணப்பெட்டியிலோ, அல்லது ஆற்றிலோ, அல்லது தீயிலோ, அல்லது ஒரு சேதத்தில் அகப்பட்டோ, அல்லது ஏதோவொரு இடத்திலோ அழிக்கப்பட்டு ஏதோவொரு இடத்திலுள்ள ஒரு பலிபீடத்திற்கு இவர்கள் போய் விடுவார்கள். ஆனால் தேவனே, தொடர்ந்து என்றென்றைக்கும் வாழப்போகும் ஒரு ஆத்துமாவை அங்கே அவர்கள் பெற்று இருக்கிறார்கள். பிதாவே, நான் என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மிடம் ஜெபிக்கிறேன், உமது ஊழியக்காரனுக்கு உமது கண்களில் தயவு கிடைத்து இருக்குமானால், அவர்களில் ஒருவரும் இழக்கப்பட்டுப் போக நீர் அனுமதிக்க வேண்டாம். அப்படியானால் நீர் என்னுடைய ஜெபத்திற்குப் பதில் கொடுக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இந்தக் காலையில் நடைபெற்ற ஆராதனையில் சம்பவித்தது போன்று, நீர் குருடர்களின் கண்களைத் திறப்பீரென்றால்: பிறவியிலேயே செவிடும் ஊமையுமான அங்கே நின்று கொண்டிருந்த ஒரு சிறு குழந்தை, அந்த ஆவியானது அதை விட்டுப்போய் அது அங்கே சுகமானது. ஓ தேவனாகிய கர்த்தாவே, இந்தக் காரியங்களை யாரால் செய்ய முடியும், நீர் தான், யாரால் குருடர்களைக் காணச் செய்யவும், முடவர்களை நடக்கச் செய்யவும் முடியும், அது நீர் தான், அவர்களுடைய ஜெபத்தைக் கேட்டரும், கர்த்தாவே. மேலும் நீர் அவர்களுடைய கரங்களைக் கண்டீர். அவர்கள் ஒவ்வொருவரையும் நீர் அறிந்திருக்கிறீர். அவர்கள் தங்கள் கரத்தை உயர்த்தும்படி அவர்களைக் கொண்டிருந்த ஒருவர் நீர் தான். இதை அருளும், கர்த்தாவே, நீர் என்னுடைய ஜெபத்தைக் கேட்டு, ஒருவரும் இழக்கப்பட்டுப் போகாமல், ஆனால் எல்லாரும் இரட்சிக்கப்படட்டும். 112. மேலும் பிதாவே, வரவிருக்கிற இந்தக் கூட்டத்தில், இதோ அது வந்து கொண்டிருக்கிறது, செவ்வாய்க் கிழமை இரவு மற்றும் செவ்வாய் பிற்பகல், ஓ தேவனே, அங்கே.... இருப்பதாக. அந்த ஆசாரியன் தாமே பலிபீடத்திற்கும்.... தேவனுக்கும் இடையே நின்று, மற்றும் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு, முகமண்டபத்திற்கும் கதவுக்கும் இடையே கதறி அழுவார்களாக, அங்கே பழைமை நாகரீகமான எழுப்புதலின் திடநம்பிக்கை எல்லாவிடங்களிலும் இருப்பதாக. மேலும் தேவனே, ஒரு பழைமை நாகரீகமான எழுப்புதலையும், இங்கே இதனூடாக இந்த அழகான தேசத்திற்கு நீர்ப்பாய்ச்சும்படியான ஒரு நல்ல சுத்தம் செய்யும் மழையையும் அனுப்பும். இதை அருளும், கர்த்தாவே. மறுபடியுமாக, பாடலை ஒலிக்கும் சக்கரங்கள் ஞாயிறு காலையிலும் புதன் இரவு ஜெபக் கூட்டத்திற்கும் சபைக்குப் போவார்களாக, நீர் கொடுத்திருக்கிற எங்களுடைய இந்த மகத்தான அழகான தேசமானது, நீண்ட காலத்திற்கு முன்பு வாழ்ந்த எங்களுடைய கவிஞர்கள் ஜெபித்து, கீர்த்தனைகளில் பாடினபடியே, "சுதந்திரத்தின் பரிசுத்த வெளிச்சத்தைக் கொண்டு எங்கள் தேசம் நீண்ட காலம் பிரகாசிப்பதாக; மகத்தான தேவனாகிய எங்கள் இராஜாவே, உமது வல்லமையினாலே எங்களைப் பாதுகாத்தருளும்.” 113. இன்னும் ஒருமுறை அமெரிக்கா தேவனிடம் திரும்பி, இந்த வறட்சி உடனடியாக நீங்கி, இந்தக் கொள்ளை நோயும் நிறுத்தப்பட்டு, இந்த வாதைகளும் அகற்றப்பட்டுப் போகும் படியாக இதை அருளும், கர்த்தாவே. இதை அருளும், கர்த்தாவே, சுதந்திரம்... எல்லாரும் பயத்தோடு வியந்து கொண்டிருக்கும் போது, அணுகுண்டு தாக்கி, ஒரு மணி நேரத்தில் முழு தேசமும் வெடித்து அழிந்து போகும் என்று எங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. ஓ தேவனே, அந்தப்பெரிய காரியமானது சரியாக எங்கள் சத்துருவின் கரங்களில் உள்ளது. அவர்கள் அதைச்செய்ய நன்கு ஆயத்தப்பட்டிருக்கிறார்கள், அப்படியே உமது இரக்கம் தான் பிடித்து வைத்திருக்கிறது. ஓ தேவனே, மனிதர்கள் இதனால் நன்மையைப் பெற்றுக் கொள்வார்களாக. பாவமுள்ள மனிதர்களும் ஸ்திரீகளும் எல்லாவிடங்களிலும் மனந்திரும்புவார்களாக. இதை அருளும், கர்த்தாவே. பிறகு ஒரு பழைமை நாகரீகமான மழையை, பரிசுத்த ஆவி மழையை, நிலங்களுக்கும் சபைக்கும் தண்ணீர் பாய்ச்சும் தண்ணீர்களைக் கொண்ட மழையையும் எங்களுக்கு அனுப்புவீராக. எங்களுடைய ஜீவனுள்ள மட்டும் நாங்கள் எல்லாரும் உம்மைச் சேவித்து, அந்நாளில் உமது வீட்டிற்கு சமாதானத்தோடே வருவோமாக. நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறோம். ஆமென். 114. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, இந்த ஒன்றரை மணிநேரம் எல்லாம் என்னோடு பொறுத்துக்கொண்டீர்கள். ஓரளவு 5 மணி நேரங்களாக இருக்கவில்லை, ஆனால் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்கள் ஒவ்வொருவரையும் தேவன் ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் உங்கள் இருதயத்தின் வாஞ்சையை அவர் உங்களுக்கு அருளிச் செய்ய வேண்டும் என்றும் நான் ஜெபிக்கறேன். இங்கே வந்து நின்று, உங்களோடு இருப்பதென்பது ஒரு சந்தோஷமான சிலாக்கியமாயுள்ளது. மேலும் இப்பொழுது, டாக்டர் காபிள் பேசியிருக்கிற இந்தக் கூட்டங்கள் எல்லாவற்றிற்கும் tend. ஸ்காட்லாண்டிலிருந்து வந்திருக்கும் இந்த சகோதரன், அந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டு, பாவிகளை உள்ளே கொண்டு வந்தும், மற்றும் எல்லாவற்றையும் செய்துகொண்டும் இருக்கிறார். அதன் பிறகு, கூட்டங்கள் முடியும் போது, கென்டக்கியிலுள்ள ஓவன்ஸ்போரோவில், ஒரு அருமையான பெரிய அரங்கம் நமக்கு உள்ளது, அங்கே ஏழாயிரம் பேர் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். எல்லாரும் வரவேற்கப்படுகிறீர்கள். சகோதரன் காபிள் அவர்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 115. [ஒரு சகோதரன் பீட அழைப்பை விடுத்து, சகோதரன் பிரன்ஹாம் ஜனங்களுக்காக ஜெபிக்கையில் சபையோரை பாடலில் வழிநடத்துகிறார் - ஆசிரியர்.] -?... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக...?... நீங்கள் வரமாட்டீர்களா? நீங்கள் பீடத்திற்கு வரமாட்டீர்களா...?... என்னுடைய சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, கர்த்தர் தாமே....?.... அப்படியே வெளியே போய், நடைபாதையில் நடந்து சென்று, பழைமை நாகரீகமான பலிபீடத்தைக் கண்டுகொள்ளுங்கள். தேவனுக்கு மகிமை. 116. நண்பர்களே, வெகுநாட்களுக்கு முன்பு, வெஸ்லி சபையிலும், பழைமை நாகரீகமான மிஷனரி பாப்டிஸ்டு சபைகளிலும் உங்களுடைய தகப்பனாரும் தாயாரும் கொண்டிருந்தது போன்று, இது ஒரு பழைமை நாகரீகமான நேரமாக இருக்கிறது. நீங்கள் இந்தப் பழங்கால காரியத்திலிருந்து விலகிச் சென்று விட்டீர்கள். பீடத்தண்டை வந்து, உங்களுடைய தப்பிதங்களை அறிக்கை செய்யுங்கள். பீடத்தண்டை வந்து அதைக் குறித்து தேவனிடம் சொல்லுங்கள். தேவனோடு கொஞ்சம் நெருங்கி நடக்க உங்களுக்கு விருப்பமானால், நீங்கள் ஏன் இன்றிரவு இங்கே மேலே வந்து, ஜெபத்திற்காக நிற்கக் கூடாது. அது உங்களுக்கு ஒரு துளியளவும் தீங்கும் செய்யாது. ஒரு மிஷனரி இன்றிரவு இங்கே எங்கேயோ உட்கார்ந்து கொண்டிருக்கிறார், தேவன் ஊழியக்களத்திற்கு அனுப்ப விரும்புகிறார். அங்கே ஒரு பிரசங்கியார் இருக்கலாம். ஏதோவொன்றை எதிர்கொள்ளும் யாரோ ஒருவர் அங்கிருக்கலாம். அது நீங்களாக இருக்குமானால், நீங்கள் இதே இரவிலோ, நாளையோ, எப்போதோ மரணத்தை எதிர்கொள்ளலாம், எப்போது என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் இங்கே இருப்பீர்களானால், நீங்கள் ஏன் வரக்கூடாது? அது... நாம் இன்னும் ஒரு பாட்டு அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், அந்தப் பாட்டினுடைய இன்னும் ஒரு செய்யுளை கொண்டிருக்கையில், எவ்வாறேனும், இன்னும் ஒரு கண நேரம் நாம் காத்திருக்க வேண்டுமென்று உணருகிறேன். நீங்கள் இங்கே கீழே வரமாட்டீர்களா? அப்படியே உங்கள் கரத்தைக் குலுக்குவதைப் போன்று, இங்கே நில்லுங்கள், அப்பொழுது இங்கே உங்களால் இயேசு கிறிஸ்துவை பிரதிநிதித்துவப்படுத்த முடியும். அவர், "நீங்கள் என்னைக் குறித்து வெட்கப்பட்டால், நானும் பிதாவுக்கு முன்பாக உங்களைக் குறித்து வெட்கப்படுவேன். ஆனால் நீங்கள் என்னை அறிக்கை செய்வீர்களானால், நானும் பிதாவுக்கு முன்பாகவும் பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் உங்களை அறிக்கை பண்ணுவேன்" என்றார். நீங்கள் இப்பொழுது வரமாட்டீர்களா? சகோதரனே, உமக்கு விருப்பமானால், நாம் இன்னும் ஒரு செய்யுளைப் பாடுகையில். அது சரி, சகோதரியே. நீங்கள்... காணும்படிக்கு நான் விரும்புகிறேன். ஒரு பழைமை நாகரீகமான பீட அழைப்பைப் போன்று கீழே முன்னே வாருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, நீங்கள் அங்கே பின்னால் இருந்தீர்கள் என்பதை அறிவேன். சரியாக இந்த வழியாக கீழே முன்னே வந்து, சரியாக பீடத்தண்டையில் இங்கே பக்கத்தில் நில்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது... இங்கே உள்ளேயிருக்கும் உங்களில் அநேகர் வர வேண்டும். அதுதான் வழியாக இருக்கிறது. அப்படியே திறந்து, அதை அறிக்கை செய்து, சரியாக முன்னே வாருங்கள், உங்களுடைய இருதயத்தை தேவன் அறிவார். ஒரே காரியம் என்ன என்றால்.... அதுதான் வழி, ஒரு பழைமை நாகரீகமான பீட அழைப்பு. இப்பொழுது அதைப்பாடுவோம், ஆமாம், நாங்கள் இப்பொழுது பாடிக்கொண்டிருக்கையில், வாருங்கள். இயேசு கெஞ்சிக்கொண்டிருக்கிறார், ஓ அவருடைய சத்தத்திற்கு செவிகொடுங்கள், நீங்கள் இப்பொழுது வர மாட்டீர்களா? இன்று அவருக்குச் செவிகொடுங்கள், இன்று அவருக்குச் செவிகொடுங்கள், ....அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் வைப்பது களிகூரப்பண்ணும்; துரிதமாக எழும்பி, இன்றே அழைக்கிறார், இன்றே அழைக்கிறார், இயேசு அழைத்துக் கொண்டிருக்கிறார், அவர் மென்மையாக அழைத்துக் கொண்டிருக்கிறார்.... 117. நிச்சயமாக, இப்பொழுது எல்லாமே இரத்தத்தின் கீழ் இருக்கிறதா? எல்லாம் சரியாக உள்ளதா? நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்காவிட்டால், இங்கே வந்து, சற்று நேரம் நில்லுங்கள். நாம் - நாம் வருவோம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரியாக முன்னோக்கி வாருங்கள். சரி, அதுதான் வழி. நான் ஜனங்கள்.... ஐக் காண விரும்புகிறேன். கணவனும் மனைவியும் பிள்ளைகளும் எல்லாருமே வருவதைக் காணவே நான் விரும்புகிறேன். அது எனக்கு அர்த்தமுள்ளதாக இருக்கிறது, ஒரு வீட்டிற்குள் அப்படிப்பட்ட ஒரு வித்தியாசம். 118. நண்பர்களே, இப்பொழுது, சபையைச் சேர்ந்து கொள்ளும்படி நாங்கள் உங்களிடம் கேட்டுக் கொண்டு இருக்கவில்லை. நீங்கள் வந்து, தேவனோடு சரிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று தான் உங்களைக் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். அது சரியே, அதுவே வழியாக இருக்கிறது. சரியாக வெளியே வந்து விடுங்கள். நிச்சயமாகவே, இங்கே இருக்க வேண்டிய இன்னும் உங்களில் அதிகமான பேர் அங்கே பின்னால் இருக்கிறீர்கள். நிச்சயமாக, சரி, ஆனால் இந்த... இப்பொழுது, நாங்கள் அப்படியே கர்த்தருக்கு நன்றி கூறிக் கொண்டிருக்கிறோம். 119. இப்பொழுது. அவர்களில் மீதியான மற்றவர்கள் நின்று கொண்டிருக்கையில், பாவங்களுக்காக முழுமையாக மனஸ்தாபப்பட்டவர்களாய் இங்கே நின்று கொண்டிருக்கும் ஜனங்களாகிய உங்களிடம் தான். சற்று நேரம் இந்தவிதமாக என்னை நோக்கிப் பாருங்கள். நீங்கள் இந்தவிதமாக பார்க்க விரும்புகிறேன். உங்களுக்கு தேவனைக் குறித்த ஒரு தேவையிருக்கிறது, அவ்வாறு இல்லை என்றால், நீங்கள் இங்கே நின்று கொண்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் தேவனோடு நெருக்கமாக நடக்க விரும்புகிறீர்கள். நீங்கள்.... என்று பாருங்கள்.... எப்படி... நீங்கள் நெருங்கி நடக்க விரும்புகிறீர்களா? அவ்வாறு விரும்புவீர்களானால், உங்கள் கரத்தை மேலே உயர்த்துங்கள். நீங்கள்.... நீங்கள் எக்காரணத்தினால் இதைச் செய்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நெருங்கி நடக்கும்படியாக உங்களை விரும்பச் செய்ய இங்கே உள்ளே ஏதோவொன்று இருக்குமானால். ஆழம் ஆழத்தை நோக்கிக் கூப்பிடும் போது, இங்கே உள்ளே ஏதோவொன்று இருக்குமானால்..... உங்களுக்குத் தாகத்தை உண்டாக்கும்படி இங்கே உள்ளே ஏதோவொன்று இருக்கக் கூடும் முன்பே, தண்ணீருக்காக உங்களுக்குத் தாகமெடுத்தால், அங்கே ஏதோவொரு இடத்தில் தண்ணீர் இருந்தாக வேண்டும். பாருங்கள்? நீங்கள்... இங்கே உள்ளே நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ, இங்கே உள்ளே என்ன ஏங்கிக் கொண்டிருக்கிறதோ, ஆழம் ஆழத்தை நோக்கிக் கூப்பிடுவதற்கு பதிலளிக்கும்படியாக அங்கே வெளியே ஏதோவொன்று இருக்கிறது என்பதை அது காட்டுகிறது; பதிலளிக்கும்படியாக அங்கே ஒரு ஆழம் இருக்கிறது. ஒரு மீனின் முதுகில் துடுப்பு இருக்கும் முன்பே, அது நீந்த அதற்காக முதலில் அங்கே தண்ணீர் இருந்தாக வேண்டும், அல்லது அதற்கு எந்தத் துடுப்பும் இருந்திருக்காது. பூமியில் வளரும்படியாக ஒரு மரம் அங்கே இருப்பதற்கு முன்பே, முதலில் ஒரு பூமி இருந்தாக வேண்டும் அல்லது அதில் வளர்வதற்கு எந்த மரமுமே இருந்திருக்காது. 120. இங்கே, கொஞ்ச காலத்திற்கு முன்பு, ஒரு பென்சிலில் உள்ள ரப்பர்களை தின்னும் ஒரு குழந்தை இருக்கும் இடத்தைக் கண்டேன், அது ஒரு பென்சிலில் உள்ள அழிப்பானை தின்றது. அது ஒரு மிதி வண்டியில் இருந்து மிதிகட்டையை, ரப்பரினால் ஆன மிதி கட்டையைத் தின்றது. மருத்துவர், "இந்தக் குழந்தைக்கு கந்தகம் தேவைப்படுகிறது" என்று கூறினார். ரப்பரில் கந்தகம் இருக்கிறது. பாருங்கள்? அது கந்தகத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தது. இங்கே உள்ளே ஏதோவொன்று கந்தகத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்குமானால், அதற்குப் பதிலளிக்க அங்கே கந்தகம் இருக்கிறது. இப்பொழுது, அங்கே ஒரு சிருஷ்டி இருக்கக் கூடும் முன்பே, அந்த சிருஷ்டியைச் சிருஷ்டிக்க ஒரு சிருஷ்டிகர் இருந்தாக வேண்டும். அது சரிதானா? நல்லது, சிருஷ்டிகராகிய தேவனைக் கொண்டு, கிருபையினாலும் இராஜாதிபத்திய கிருபை.... இயேசு ஒரு மனிதனை அழைத்தாலொழிய அவனால் இயேசுவிடம் அல்லது தேவனிடம் வர முடியாது. பாருங்கள்? முதலாவதாக தேவன் உங்களை அழைத்தாக வேண்டும், அது இராஜாதிபத்திய தெரிந்து கொள்ளுதலும் அழைத்தலுமாக இருக்கிறது. இப்பொழுது, ஆழமாகவும் நெருக்கமாகவும் நடக்கும்படியாக தேவன் இன்றிரவு உங்களை அழைத்திருக்கிறார். அவரால் அதைச் செய்யக் கூடும் முன்பே, அதற்காக உங்களை ஏங்கச் செய்யும்படியாக உங்கள் இருதயத்தில் அந்த சிருஷ்டிப்பை அவர் வைக்க வேண்டியவராயிருக்கிறார், அல்லது நீங்கள் ஒருபோதும் வந்திருக்கவே மாட்டீர்கள். அது சரிதானே? இப்பொழுது, நீங்கள் வந்து, அவருடைய அழைப்புக்குப் பதில் அளித்திருக்கிறீர்கள், அவர் உங்களுக்கு வாக்குப்பண்ணினதை நிறைவேற்ற தமது வார்த்தைக்கு அவர் இராஜாதிபத்தியம் உள்ளவராய் இங்கேயிருக்கிறார். 121. இப்பொழுது, நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் ஒவ்வொருவருமே... போகிறீர்கள். ஏறக்குறைய நூறு பேர், கிட்டத்தட்ட அத்தனை பேர் இங்கே நின்று கொண்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், அல்லது ஒருக்கால், அவ்வளவு அதிகமான பேர் இல்லை , நாற்பது, ஐம்பது, அறுபது பேர் இருக்கலாம். ஆனால் தேவனைக் குறித்து இன்னும் அதிகமாக விரும்பினவர்களாய் இங்கே நெடுகிலும் நின்று கொண்டிருக்கிறவர்கள், அது யாராயிருந்தாலும், சரியாக இப்பொழுதே உங்களால் அதைக் கொண்டிருக்க முடியும். அது சரியாக இங்கேயிருக்கிறது, உங்களுக்காக ஆயத்தமாக இருக்கிறது. வியாதியஸ்தர்களைச் சுகமாக்குகிறவரும், குருடர்களைக் காணச் செய்கிறவரும், வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரும், மரங்களையும் மலர்களையும் உண்டாக்கினவருமாகிய இயற்கைக்கு மேம்பட்ட மகத்தான தேவன், அவருடைய ஆவி இப்பொழுது சரியாக உங்களினூடாக அசைவாடிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது, நீங்கள் இவ்விதமாக உங்களுடைய ஆத்துமாவைப் பற்றிப்பிடித்துக்கொள்ளக் கூடுமானால், "பிதாவே, நீர் என்னை அழைத்திருக்கிற காரணத்தினால் நான் வந்திருக்கிறேன், பருகும்படியாக அங்கே ஒரு நீரூற்று இருந்திராவிட்டால், நீர் என்னை அழைத்திருக்கவே மாட்டீர். விசுவாசத்தினாலே, நான் வந்து, அதை ஏற்றுக்கொள்கிறேன், நீர் உமது ஆவியினால் என்னுடைய ஜீவியத்தை நிரப்பப் போகிறீர் என்று இப்பொழுது நான் விசுவாசித்துக் கொண்டிருக்கிறேன், இது முதற்கொண்டு (from this on) நான் உம்மை நேசித்து, எல்லா நேரமும் நெருக்கமாக இருக்கப் போகிறேன்” என்று கூறுங்கள். 122. சிறு பையனே, அங்கேயிருக்கும் சிறிய ஜப்பானிய பையனே, உனக்கும் கூட தேவன் பரிசுத்த ஆவியைக் கொடுக்கப் போகிறார் என்று விசுவாசிக்கிறாயா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சரி. இங்கேயிருக்கும் சகோதரியே, தேவன் இன்றிரவு உனக்கு பரிசுத்த ஆவியைக் கொடுக்கப் போகிறார் என்று நீ அதை விசுவாசிக்கிறாயா? நீ சரியாக இருக்கிறாய். 123. இப்பொழுது, நாம் நம்முடைய தலைகளை வணங்குவோம், இப்பொழுது, முழு கூட்டத்தினரும் பயபக்தியோடு இருங்கள். இப்பொழுது, பாவத்திற்கு மனஸ்தாபப்படுகிறவர்களாய் இங்கே வந்து, இங்கு நின்று கொண்டிருக்கிறவர்களாகிய இந்தக் கூட்டத்தினர்கள், அப்படியே நான் கூறுவதைத் திரும்பக் கூடும்படி விரும்புகிறேன். இப்பொழுது, நிச்சயமாக, சாத்தானை தோற்கடிக்கும் வார்த்தைகள் இவைகளே. நான் விரும்புகிறேன்... நான் அவைகளைக் கூறப்போகிறேன், ஆனால் நீங்கள் அவைகளை உங்கள் இருதயத்திலிருந்து ஜெபிக்கும்படி விரும்புகிறேன்: 124. (சகோதரன் பிரன்ஹாம் கூறும் ஜெபத்தை சபையோர் திரும்பக் கூறுகிறார்கள் - ஆசிரியர்.) "சர்வவல்லமையுள்ள தேவனே, நித்திய ஜீவனின் ஆக்கியோனே, நான் உண்மையான உத்தம விசுவாசத்தோடு வந்து, விசுவாசித்துக் கொண்டிருக்கிறேன், நீர், 'நீதியின்மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்தியடைவார்கள்' என்று சொல்லியிருக்கிறீர். நான் நீதியின் மேல் பசியோடும் தாகத்தோடும் வந்திருக்கிறேன். நான் திருப்தியடைவேன் என்று விசுவாசிக்கிறேன். பிதாவே, இப்பொழுது, நான் காத்துக் கொண்டிருக்கிறேன், நீர் சரியாக இப்பொழுதே என்னை உம்முடைய ஆவியால் நிறைக்கப் போகிறீர் என்று விசுவாசிக்கிறேன். இயேசுவின் நாமத்தில், நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்.” இப்பொழுது, நீர் தொடர்ந்து உங்கள் தலையை வணங்கியிருக்கையில்: 125. ஓ கர்த்தாவே, இயேசு எங்கள் பாவங்களுக்காக மரித்து, அவருடைய ஆவியாகிய, பரிசுத்த ஆவியை இந்த பூமிக்கு திரும்பவும் அனுப்பி, ஜனங்கள் மத்தியில் வாசம் செய்து, இயேசு கிறிஸ்துவின் ஜீவனை வல்லமையோடும் அடையாளங்களோடும் அற்புதங்களோடும் அதிசயங்களோடும் ஒவ்வொரு விசுவாசியினிடத்திலும் வெளிப்படுத்தும்படியான நோக்கத்தோடு மரித்த உமது மகத்தான வல்லமையுள்ள குமாரனாகிய இயேசுவின் நாமத்தில், சரியாக இப்பொழுது உம்மிடம் ஜெபிக்கிறேன். இந்நாளில், மனிதர்களும் ஸ்திரீகளும் தேவனுக்காக பசிதாகம் கொள்ளுகிறார்கள், பிதாவே, இந்த மகிமையான சிறிய பழைய சபையில், இன்றிரவு, நீர் அனேக ஜனங்களுடைய இருதயத்தைத் திறந்து, தேவனுடைய வல்லமையால் அவர்களை நிரப்பும்படி இங்கே அவர்களை அனுப்பியிருக்கிறீர். மேலும் பிதாவே, நான் ஜெபிக்கிறேன், அவர்கள் உமக்கு முன்பாக தங்களுடைய இருதயங்களைத் தாழ்த்தினபடி ஆழமான உத்தமத்தோடு இங்கே நின்று கொண்டிருக்கையில், நீர் அவர்கள் ஒவ்வொருவரையும் உமது ஆசீர்வாதங்களினால் நிரப்ப வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். 126. கர்த்தாவே, ஜெபத்தின் மூலமாக, உம்மிடம் வேண்டிக் கொண்ட அவர்கள் எல்லாரையும் நிரப்பியிருக்கிறீர், தேசத்தின் மகத்தான மனிதர்களுக்கும் கூட, பிஷப்புகளுக்கும் மருத்துவர்களுக்கும் மற்றவர்களுக்கும் கூட. இன்றிரவு, இங்கே நின்று கொண்டிருக்கிற இந்த அன்புக்குரிய தாழ்மையான ஜனங்களை பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் நிரப்புவீர் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரும், பரிசுத்த ஆவியானவர் தாமே சரியாக இப்பொழுதே அவர்கள் ஜீவியங்கள் முழுவதும் பொங்கி வழிந்து, தேவனைப் போல் அல்லாமல் வேறு விதமாக இருக்கும் எல்லாவற்றையும் வெளியே எடுத்துப் போடுவாராக. உலக காரியங்கள் எல்லாவற்றையும், அவர்களிடம் இருக்கிற பழக்கவழக்கங்கள் மற்றும் பாவமான பழக்கங்களையும் வெளியே எடுத்துப் போடும். ஒ தேவனே, அவர்களைச் சுத்திகரித்து, அவர்களுடைய பாவங்களிலிருந்து அவர்களை விடுவித்து அருளும். இன்றிரவு அவர்கள் தாமே தங்கள் இருதயத்தில் ஒரு பாடலைக் கொண்டவர்களாயும், அவர்கள் சந்தோஷத்தோடும், களிகூர்ந்து கொண்டும், தங்கள் மீதியுள்ள நாட்களில் உம்மைச் சேவித்துக் கொண்டும் இங்கிருந்து போகிறார்கள் என்ற ஒரு சாட்சியை தங்களுடைய உதடுகளில் உடையவர்களாயும் இங்கிருந்து கடந்து போவார்களாக. 127. ஓ பரிசுத்த ஆவியானவரே, தெய்வீக வல்லமையுள்ளவரே (Power Divine), உமது அன்பையும் நேசத்தையும் அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அனுப்பி, கர்த்தாவே, உமது மகத்தான பரிசுத்த செட்டைகளை விரியும், பரிசுத்த ஆவியின் வல்லமை தாமே அவர்கள் ஒவ்வொருவர் மேலும் துளித்துளியாக விழுவதாக. அவரைப் பெற்றுக் கொள்ளும்படியாக அவர்கள் உடைய இருதயங்கள் தாமே திறந்திருப்பதாக. இதை அருளும், கர்த்தாவே, இது அவர்கள் ஜீவிக்கும் நாள் மட்டுமாக ஒருபோதும் மறவாமல் இருக்கும் ஒரு நேரத்தின் மாற்றமாக இருப்பதாக அவர்களுடைய மரண வேளைகளில், அவர்கள் இங்கே உமக்கு முன்பாக செய்த பாவத்திற்கு மனஸ்தாபப் பட்டதையும், அவர்கள் உண்மையாகவே உம்மை விசுவாசிக்கிறார்கள் என்று இந்த ஜனங்களுக்கு முன்பாக அறிக்கை செய்து கொண்டிருந்ததையும் நினைவு கூறுவார்களாக. அவர்கள் தாமே உமது வல்லமையால் நிரப்பப்படுவார்களாக, நாங்கள் இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.